என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
    • தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க ராஜேஷ்-ன் தாய் முன்வந்தார்.

    டெல்லியில் சிறுநீரக கோளாறால் அவதியுற்ற 59 வயது மகனுக்கு 80 வயதான தாய் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க அவரது தாய் முன்வந்தார்.

    மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரது தாயாரின் சிறுநீரகம் அவருக்குப் பொருத்தமானது என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

    இதனையடுத்து, இருவருக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • விஷ்ணு விஷால் , அமலா பால், காளி வெங்கட், அம்மு அபிராமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ராட்சசன் திரைப்படம் .
    • இப்படத்தின் நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் , அமலா பால், காளி வெங்கட், அம்மு அபிராமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ராட்சசன் திரைப்படம் . இப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

    இப்படத்தை ராம் குமார் இயக்க கிப்ரான் இசையமைத்தார். இப்படத்தின் கதைக்களம் ஒரு கிரைம் திரில்லராக அமைந்தது. இந்நிலையில் இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அமைச்சர் தகவல்.
    • விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு கொள்கை தயார் செய்ய வேண்டும்.

    மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக உள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு இதற்கு கொள்கை வகுக்க வேண்டும் என சரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக, சட்டசபையில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில் "மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்பாக வெளியான தகவல் கவலையளிக்கும் விதமாக உள்ளது. நாங்கள் வெவ்வேறு இடங்களில் சரியான தரவுகளை சேகரிக்க உள்ளோம். விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு கொள்கை தயார் செய்ய வேண்டும்.

    இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    மேலும், சரத் பவார் கட்சியின் ஜெயந்த் பாட்டீல் அஜித் பவார் கட்சிக்கு மாற இருப்பதாக தகவல் வெளியானது குறித்து கேட்க கேள்விக்கு, இது தொடர்பாக மீடியாவுக்கு அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்" என்றார்.

    பாராமதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது ஜெயந்த் பாட்டீல் சரத் பவாரை சந்தித்து பேசினார். பின்னர், தான் விரக்தியில் உள்ளது. தன்னுடைய கருத்தில் இருந்து தவறான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    • கன்னட சினிமா துறையில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் தீக்‌ஷித் ஷெட்டி
    • 2020 ஆம் ஆண்டு வெளியான Dia திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

    கன்னட சினிமா துறையில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் தீக்ஷித் ஷெட்டி. இவர் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான Dia திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இவர் கடைசியாக நடித்து வெளியான பிளிங்க் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஓடிடியில் வெளியான பிறகு பல மொழி மக்கள் இப்படத்தை பார்த்து பாராட்டினர்.

    இந்நிலையில் நடிகர் தீக்ஷித் ஷெட்டி தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஸ்ரீ சரவண பிலிம் ஆர்ட்ச் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன் இந்த நிறுவனம் உமாபதி ராமையா நடிப்பில் வெளியான பித்தல மாத்தி திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அமித் பார்கவ் மற்றூம் ஆயிஷா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவை வெங்கடேஷ்வர் மேற்கொள்கிறார்.

    படத்தின் மற்ற விவரங்களை விரைவில் வெளியிடுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரதமர் மோடி உள்கட்டமைப்புகளை உருவாக்கினார். அசாம் மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தினார்.
    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வளர்ச்சி திட்டத்தில் இணைந்துள்ளனர்.

    அசாம் மாநிலத்தில் அமைதி திரும்ப காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை. பிரதமர் மோடி அமைதியை மீட்டெடுத்தார். கட்டமைப்புகள் மேம்படுத்தினார் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, அசாமில் புனரமைக்கப்பட்ட லசித் பார்புகான் போலீஸ் அகாடமியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அசாமில் அமைதி நிலவ காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி அமைதியை மீட்டெடுத்தார். உள்கட்டமைப்புகளை உருவாக்கினார். அசாம் மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தினார்.

    10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் அமைதி நிலவ முக்கிய வளர்ச்சி திட்டத்தில் இணைந்துள்ளனர். நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கட்டமைப்பு திட்டங்களை அசாமுக்கு கொடுக்க இருக்கிறது. சமீபத்தில் முடிவடைந்த வணிக மாநாட்டில் கூடுதலாக 5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, அசாமில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்காக காவல்துறை இருந்தது. ஆனால் இப்போது அது மக்களை மையமாகக் கொண்டதாகியுள்ளது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளில் தண்டனை விகிதம் 5 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது விரைவில் தேசிய சராசரியை விட அதிகமாகும்.

    லசித் பார்புகான் போலீஸ் அகாடமி அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டின் முதன்மையானதாக மாறும். இந்த அகடாமிக்கு 1050 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட இருக்கிறது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • பட்னாவிசுக்கும் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல் வெளியானது.
    • ஷிண்டேவும் அஜித் பவாரும் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால், நாங்கள் அவர்களை அரவணைத்துக் கொள்வோம்.

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி (பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமோக வெற்றி பெற்றது.

    முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் பதவியேற்று கொண்டார். துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்று கொண்டனர்.

    இதனையடுத்து, மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசுக்கும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உங்களுக்கு பிரச்சனை கொடுத்தால், எங்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்குமாறு துணை முதல்வர்களான ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாருக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் நானா படோல் அழைப்பு விடுத்துள்ளார்.

    நாக்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நானா படோல், "ஷிண்டேவும் அஜித் பவாரும் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால், நாங்கள் அவர்களை அரவணைத்துக் கொள்வோம். தேவேந்திர ஃபட்னாவிஸ் உங்களை தொந்தரவு செய்தால், நாங்கள் உங்களுடன் நின்று ஒன்றாக ஒரு அரசாங்கத்தை அமைக்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

    நானா படோலின் கருத்துக்கு பதில் கூற மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் மறுத்துவிட்டார்.

    • பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள்.
    • பவன் கல்யாணின் கருத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஐதராபாத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு பேசிய ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண், "இந்தியாவிற்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை. நமது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், அதன் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் நாம் மொழியியல் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    பல மொழிகள் இருப்பது நம் நாட்டிற்கு நல்லது. இதே கொள்கை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்த வேண்டும். சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை? நிதி ஆதாயத்திற்காக தங்கள் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கும் அதே வேளையில், தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?

    அவர்கள் பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள். இது என்ன வகையான தர்க்கம்?" என்று தெரிவித்தார்.

    பவன் கல்யாணின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், பவன் கல்யாணின் கருத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், பாஜகவுடனான கூட்டணிக்கு முன்பாக Go Back Hindi என பவன் கல்யாண் பேசியதை குறிப்பிட்டு கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

    பாஜக கூட்டணிக்கு முன்பு, "நம் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை வடமாநில அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என 2017ல் பவன் கல்யாண் தெரிவித்திருத்திருந்தார்.

    மேலும் அந்த பதிவில், " மொழிபேதங்களை கடந்து திரைப்படங்களை காண தொழில்நுட்பம் வழிவகை செய்துள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.

    • அரையிறுதி ஆட்டத்தில் மேடிசன் கீஸை (6-0, 6-1) என்ற செட் கணக்கில் சபலென்கா வீழ்த்தினார்.
    • 24 ஆண்டுகளில் இந்தியன் வெல்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இளம் வீராங்கனையாக ஆன்ட்ரீவா சாதனை படைத்தார்.

    இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ்- சபலென்கா பலப்பரீட்சை நடத்தினர்.

    இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸை சபலென்கா (6-0, 6-1) என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவருமான இகா ஸ்வியாடெக் தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும் 17 வயது மிரா ஆன்ட்ரீவா (ரஷ்யா) ஆகியோர் மோதினர்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஆன்ட்ரீவா 7-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்வியாடெக் 6-1 என்ற செட் கணக்கில் வென்றார். யார் வெற்றியாளர் என தீர்மானிக்கும் கடைசி செட்டில் ஆன்ட்ரீவா வெற்றி பெற்றார்.

    இதனால் 7-1, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ஆன்ட்ரீவா தகுதி பெற்றார்.

    24 ஆண்டுகளில் இந்தியன் வெல்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இளம் வீராங்கனையாக மிர்ரா ஆன்ட்ரீவா சாதனை படைத்தார்.

    • டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்.
    • பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில்,

    வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு,

    முதலமைச்சரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள்,

    புதிய தொழில்நுட்பங்கள்,

    சிறு குறு விவசாயிகள் நலன்,

    மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்,

    டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்,

    வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவி

    எனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.

    அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார். 



    • இன்றைக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.
    • சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்களும் இருப்பவர்களும், பிரபலங்களும் பலருக்குத் தன்னம்பிக்கை உணர்வை ஊட்டியவர்களும்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

    திருச்சி:

    இன்றைக்கு இயற்கை மரணங்களுடன் போட்டி போடும் அளவுக்கு தற்கொலைகள் அதிகரித்து விட்டன. கோழைத்தனமும், தாழ்வு மனப்பான்மையும் ஒருவரை இந்த துயர முடிவுக்கு தள்ளி விடுகிறது.

    முன்பெல்லாம் தற்கொலைக்கு காதல் தோல்வி, கடன் பிரச்சனைகள், தீராத வியாதி போன்ற வலுவான காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் இன்றைக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.

    இதில் வயது வரம்பு இல்லை. 10 வயது முதல் வயதான முதியவர் வரை வயது வித்தியாசம் இன்றி தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். இந்தியாவில் கடந்த 54 ஆண்டுகளில் 17.56 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உள்பட 4.7 கோடி பேர் தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. சமீப காலமாக தற்கொலைகளின் எண்ணிக்கை சகட்டுமேனிக்கு உயர்ந்துள்ளது. அதிலும் பல பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்கிறார்கள்.

    குடும்பத் தலைவரின் தற்கொலை முடிவு ஏதும் அறியாத சின்னஞ்சிறு குழந்தைகளையும் கொன்று விடுகிறது. இது வேதனையின் உச்சமாக இருக்கிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி பெல் நிறுவன பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கான காரணம் புரியாத புதிராக உள்ளது. இருதய நோயால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு அலுவலக அறையில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவருக்கென்ன ராஜா மாதிரி என்பார்களே அந்த இடத்தில் தான் பெல் அதிகாரியும் இருந்தார். மத்திய அரசு பணி, மனைவி தனியார் பள்ளி ஆசிரியை, புகழ்பெற்ற என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் ஒரே மகள். அவருக்கு என்ன பிரச்சனையோ அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் குடும்ப அளவில் பெரிய கடன் பிரச்சனைகள் இருப்பதாக தெரியவில்லை.

    இந்த சம்பவம் நடந்த அடுத்த 2 நாட்களில் சென்னை திருமங்கலத்தில் டாக்டர், தனது வழக்கறிஞர் மனைவி மற்றும் 2 மகன்களுடன் தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியானது. இவர் கடன் பிரச்சனையால் குடும்பத்துடன் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

    இதேபோன்று சில வாரங்களுக்கு முன்பு சேலம் தொழிலதிபர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் புதுக்கோட்டை அருகே காரில் குடும்பத்தோடு வந்து, தன்னை மாய்த்துக் கொண்டதுடன் தனது வயதான தாய், மனைவி, மகன், மகள் அனைவரையும் விஷம் அருந்த செய்து அனைவரும் காருக்குள்ளேயே பிணமாக மீட்கப்பட்டனர்.கரூரில் கடந்த மாதம் ஒரு தொழிலாளி குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை திருவொற்றியூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனைவி இறந்த துக்கம் தாங்கமுடியாத கணவர் தனது 19 வயது மகள், 14 வயது மகன் ஆகியோருடன் தற்கொலை செய்து கொண்டார்.

    இவ்வாறு நாளும் பொழுதும் தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. வாழ்க்கை வாழ்வதற்கே. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் இறைவன் அழைக்கும் வரை வாழ்ந்து விட வேண்டும்.

    இதுபோன்ற துயர முடிவுகளுக்கு நடக்கும் எந்த விஷயத்துக்கும் ஒரு தீர்வாக, தற்கொலைதான் என இவர்களால் நம்பப்படுகிறது என்கின்றன உளவியல் ஆய்வுகள். ஒருவருக்கு வேலைப் பளுவால் ஏற்படக்கூடிய அழுத்தமும் மற்றொருவருக்கு குடும்பத்தில் ஏற்பட்ட விரக்தியும் தற்கொலையை நோக்கித் துரத்துகிறது.

    தான் நினைத்தது நடக்கவில்லை என்ற ஏமாற்றம், வேலையின்மை, கடன், தொழிலில் நஷ்டம், தோல்வி பயம், காதல் தோல்வி, குற்றவுணர்வு, அவமானம், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம், போதைக்கு அடிமையாதல், கல்விச் செலவு, நோய், மருத்துவச் செலவு, வரதட்சிணைப் பிரச்சினை, விபத்து, விவாகரத்து, உறவுகளைப் பிரிந்துவிட்டோம் என்ற ஏக்கம், பாலியல் வன்கொடுமை, முறையற்ற கர்ப்பம், குழந்தையின்மை, சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்வது, பணிச் சுமையால் ஏற்படும் மனச் சோர்வு, மற்றவர்களுக்கு நாம் சுமையாக, பாரமாக இருக்கிறோமோ என்ற எண்ணம், தேர்வில் தோல்வி, உடல்ரீதியான குறைபாடு, எதிர்பாராத செலவுகள், கந்துவட்டிக் கடனை நோக்கிக் கை நீட்டியதன் விளைவு என எத்தனையோ காரணங்கள் தற்கொலைக்குக் காரணமாகின்றன.

    சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் இல்லாதவர்கள் மட்டுமே தற்கொலை செய்துகொள்வதில்லை. சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்களும் இருப்பவர்களும், பிரபலங்களும் பலருக்குத் தன்னம்பிக்கை உணர்வை ஊட்டியவர்களும்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

    சமூகச் சூழலின் நெருக்குதலைச் சமாளிக்க முடியாமல் பெரியவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். கூடவே எந்தப் பாவமும் அறியாத தங்களுடைய குழந்தைகளையும் சேர்த்து, தற்கொலை என்ற பெயரில் கொலை செய்துவிடு கிறார்கள். இவற்றுக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, பாரம்பரியமான நம்முடைய கூட்டுக் குடும்ப முறை முற்றிலுமாக அழிந்துபோனதுமாகும். பெரியவர்கள், சிறியவர்கள் என சகல வயதினரும் உறவுகளும் கலந்து வாழும்போது எந்தவொரு பிரச்சினை என்றாலும் விவாதமும் பரஸ்பர ஆற்றுப்படுத்தலும் எளிதாக இருந்தது. பெற்றோர்கள் நமக்குப் பாரம் என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறிந்துவிட்டு, அவர்கள் நம்முடைய பொக்கிஷம் என்ற எண்ணம் இன்றைய இளைய தம்பதியினரிடையே உருவாக வேண்டும். இளமை என்ற இறுமாப்பைத் தளர்த்தி முதுமை பற்றிய தெளிவான அறிவைப் பெற வேண்டும்.

    உண்மையான வாழ்க்கையின் உன்னதம் எது என்பதை அறியாமல் போனதும் எது வாழ்க்கை என்பதை ஒவ்வொரு வரும் தெளிவாகப் புரிந்து அறிந்துகொள்ளாததுமே தற்கொலை - கொலைகள் பெருகக் காரணங்களாக அமைகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ஆக வாழ்க்கை வாழ்வதற்கே.... சாவதற்கல்ல...

    • இன்று முதல் 19-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 அதிகமாக இருக்கக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    18-ந்தேதி மற்றும் 19-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    20-ந்தேதி மற்றும் 21-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

    அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:

    இன்று மற்றும் நாளை வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும்.

    18-ந்தேதி மற்றும் 19-ந்தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.

    இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

    இன்று முதல் 19-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை?
    • தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?

    ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஐதராபாத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு பேசிய ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண், "இந்தியாவிற்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை. நமது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், அதன் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் நாம் மொழியியல் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    பல மொழிகள் இருப்பது நம் நாட்டிற்கு நல்லது. இதே கொள்கை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்த வேண்டும். சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை? நிதி ஆதாயத்திற்காக தங்கள் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கும் அதே வேளையில், தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?

    அவர்கள் பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள். இது என்ன வகையான தர்க்கம்?" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், பவன் கல்யாணின் கருத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார்.

    அவரது பதிவில், "இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள்' என்பது அந்த மொழி மீதான வெறுப்பல்ல, 'எங்கள் தாய்மொழியையும், நம் தாயையும் பெருமையுடன் பாதுகாப்போம்' என்பதாகும். இதை யாராவது பவன் கல்யாணிடம் சொல்லுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×