மீண்டும் இணைந்த ராட்சசன் கூட்டணி

விஷ்ணு விஷால் , அமலா பால், காளி வெங்கட், அம்மு அபிராமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ராட்சசன் திரைப்படம் .இப்படத்தின் நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மீண்டும் இணைந்த ராட்சசன் கூட்டணி
Published on

கடந்த 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் , அமலா பால், காளி வெங்கட், அம்மு அபிராமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ராட்சசன் திரைப்படம் . இப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இப்படத்தை ராம் குமார் இயக்க கிப்ரான் இசையமைத்தார். இப்படத்தின் கதைக்களம் ஒரு கிரைம் திரில்லராக அமைந்தது. இந்நிலையில் இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.

இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com