என் மலர்
நீங்கள் தேடியது "Dheekshith Shetty"
- ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக தி கேர்ள்ஃபிரெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்று வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ராஷ்மிகா மந்தனா முன்னணி இடத்தில் இருப்பவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக தி கேர்ள்ஃபிரெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிளை விரைவில் படக்குழு வெளியிட இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்று வருகிறது.
இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்தின் இசையை மேற்கொள்கிறார்.
அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர். ராகுல் ரவீந்திரன் இதற்கு முன் சி லா சோ மற்றும் மன்முதுடு 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கன்னட சினிமா துறையில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் தீக்ஷித் ஷெட்டி
- 2020 ஆம் ஆண்டு வெளியான Dia திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
கன்னட சினிமா துறையில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் தீக்ஷித் ஷெட்டி. இவர் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான Dia திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இவர் கடைசியாக நடித்து வெளியான பிளிங்க் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஓடிடியில் வெளியான பிறகு பல மொழி மக்கள் இப்படத்தை பார்த்து பாராட்டினர்.
இந்நிலையில் நடிகர் தீக்ஷித் ஷெட்டி தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஸ்ரீ சரவண பிலிம் ஆர்ட்ச் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன் இந்த நிறுவனம் உமாபதி ராமையா நடிப்பில் வெளியான பித்தல மாத்தி திரைப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் அமித் பார்கவ் மற்றூம் ஆயிஷா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவை வெங்கடேஷ்வர் மேற்கொள்கிறார்.
படத்தின் மற்ற விவரங்களை விரைவில் வெளியிடுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.