என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
    • ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.

    புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் 2025- 26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து 7-வது நாள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வட்டம் தொடங்கியதும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, நியாய விலைக்கடைகள் இல்லாத பகுதிகளில் வாகனங்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.

    மேலும், கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், "புதுச்சேரியில் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்" என அறிவித்தார்.

    இந்நிலையில், புதுச்சேரியில் மஞ்சள் நிற ரேசன் அட்டை வைத்துள்ள மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    தற்போது சிவப்பு நிற ரேசன் அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாதாரண குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மஞ்சள் நிற குடும்ப அட்டை என்பது ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1,20,000 வரை மட்டுமே பெரும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    • இனிமேல், பேச்சுவார்த்தைகள் துப்பாக்கிச் சூட்டின் கீழ் மட்டுமே நடைபெறும் என்று நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
    • 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும் பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் நேற்று காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும் பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

     

     

    இந்நிலையில் இந்த தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

    "கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் எங்கள் கையின் வலிமையை ஏற்கனவே உணர்ந்துள்ளது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக அதிக பலத்துடன் செயல்படும். இனிமேல், பேச்சுவார்த்தைகள் துப்பாக்கிச் சூட்டின் கீழ் மட்டுமே நடைபெறும் என்று நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையின்படி இஸ்ரேலிய பிணையக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர். ஆனால் போர் நிறுத்தம் முடிந்ததும் மேற்கொண்டு அமைதி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.

    இந்த நிலையில்தான் இஸ்ரேலின் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. "ஹமாஸ் எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்க பலமுறை மறுத்ததைத் தொடர்ந்து" இந்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாக இஸ்ரேல் கூறியிருந்தது.

    இன்னும் 59 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் தன்வசம் பிடித்து வைத்துள்ளது. இந்நிலையில் தற்போதைய காசா தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஹமாஸ், சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிரந்தர தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் தடுக்கிறது. இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவை அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி உள்ளது.

     

    மேலும் மற்றோரு அறிக்கையில், அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்திய முயற்சியில் உருவான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறியடிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. வன்முறையை மீண்டும் தொடங்கினால் மீதமுள்ள உயிருள்ள பணயக்கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்க நேரிடும் என ஹமாஸ் எச்சரித்துள்ளது.

    இதற்கிடையே 400 பேரை கொன்ற இந்த தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்பு இஸ்ரேல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திடம் ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், மீண்டும் போர் தொடங்குவதற்கு ஹமாஸ் முழுப் பொறுப்பையும் ஏற்கிறது என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கூறினார். 

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக RRB தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
    • ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

    நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அவதியடைந்தனர். இதனால், தமிழ்நாட்டில் இருந்து தெலங்கானாவுக்கு தேர்வு எழுதச் சென்ற 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விரக்தியடைந்தனர்.

    இந்நிலையில், ரெயில்வேயின் இந்த திடீர் முடிவை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாத ரயில்வே துறை. நாட்டில் இளநிலை நீட், யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவால் ஏறத்தாழ 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பதிவுசெய்தார். வினாத்தாள் கசிவிற்கு பிறகு, தற்போது உதவி லோகோ பைலட் தேர்வை நடத்தும் ஆர்ஆர்பியானது, தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

    தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்ததிருந்த போதும் மிகுந்த சிரமத்துடன் இன்று தேர்வு எழுத சென்றவர்களை அலைக்கழித்துள்ளது ரயில்வே துறை.

    எதிர்கால கனவுடன் தேர்வு எழுதச் சென்ற இளைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை சிதைக்கின்றது ஒன்றிய ரயில்வே துறை. இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிற மனவுளைச்சலுக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்அவர்கள், இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • ஐபிஎல் தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
    • 23-ந் தேதி சென்னை- மும்பை அணிகள் சேப்பாக்கத்தில் மோதுகின்றன.

    சென்னை:

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது.

    கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.

    இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவர் கேப்டனாக செயல்படுவார்.

    கடந்த ஆண்டு மும்பை அணி விளையாடி கடைசி போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக RRB தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
    • தமிழ்நாட்டில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஐதராபாத் சென்றனர்

    நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரெயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அவதியடைந்தனர்.

    தெற்கு ரெயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு இன்று இன்று ஷிஃப்ட் முறையில் நடைபெற இருந்தது.

    இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரெயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக எந்த முன்னறிவிப்பும் இன்றி மையங்களில் திடீரென நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

    தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனம் எழுந்தது. வெளிமாநில தேர்வு மையங்களை மாற்றுமாறு வைத்த கோரிக்கையை நிராகரித்த ரெயில்வே வாரியம், இப்போது எவ்வித முன்னறிவிப்பின்றி தேர்வை ரத்து செய்துள்ளது.

    இதனால், தமிழ்நாட்டில் இருந்து தெலுங்கானாவுக்கு தேர்வு எழுதச் சென்ற 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விரக்தியடைந்தனர்.

    • விஜய், வடிவேலு, ரீமா சென் ஆகியோர் நடிப்பில் வெளியான பகவதி படம் சூப்பர் ஹிட் ஆனது.
    • பகவதி படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆனது.

    1992 இல் நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆக்ஷன் ஹீரோவாக பரிணமித்த படம் பகவதி. 2002 இல் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய், வடிவேலு, ரீமா சென் ஆகியோர் நடிப்பில் வெளியான பகவதி படம் சூப்பர் ஹிட் ஆனது.

    விஜய்க்கும் வடிவேலுவுக்கும் இடையிலான காமெடி காட்சிகளும், டீக்கடை உரிமையாளராக இருந்து கேங்ஸ்டராக விஜய் பரிணமிக்கும் ஆக்ஷன் காட்சிகளும் வெறித்தனமாக அமைந்திருக்கும்.

    விஜய்யின் 22 ஆவது படமான இது என்றுமே அவரது கேரியரில் ஸ்பெஷலானதாக இருக்கும்.

    பகவதி படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன்படி வரும் மார்ச் 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) படம் ரீரிலீஸ் ஆகும் என தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • ரெட்ரோ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
    • ரெட்ரோ படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

    சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.

    ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடலான 'கண்ணாடி பூவே' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் பிடி.எஸ். காட்சிகளை காமிக் வடிவத்தில் படக்குழு வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது.

    இன்று ரெட்ரோ படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பிறந்தநாள். இதையொட்டி படக்குழு சார்பில் இயக்குநருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும், படத்தின் பி.டி.எஸ். வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.



    • இந்த ஆண்டு என்ஜினீயரிங் வகுப்புகள் முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளது.
    • இந்த கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2-வது வாரத்தில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 430-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இளநிலை படிப்புகளில் சுமார் 1.70 லட்சம் இடங்கள் வரை உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இணையதளம் வழியாக நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் நடத்தி வருகிறது.

    இந்த ஆண்டு மொத்தம் 1.70 லட்சம் என்ஜினீயரிங் இடங்கள் இருக்கும் நிலையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.

    இந்த ஆண்டு என்ஜினீயரிங் வகுப்புகள் முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளது. இதனால் என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2-வது வாரத்தில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே தரவரிசை பட்டியலும் முன்னதாகவே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 22-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடந்தது.

    இந்த ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையின் ஒவ்வொரு செயல்முறையும் ஆன்லைனில் நடைபெற இருப்பதால் நேரத்தை மிச்சப்படுத்த கலந்தாய்வு கால அளவு குறைக்கப்படலாம். இருந்தாலும் இந்த யோசனை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 18வது ஐ.பி.எல். சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது.
    • விராட் கோலி ஆர்.சி.பி. அணிக்காக விளையாடுகிறார்.

    விளையாட்டுத் துறையில் எதுவும் நடக்கலாம். 2008ம் ஆண்டு ஐ.சி.சி. நடத்திய அண்டர் 19 (U19) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. அன்று தொடங்கி விராட் கோலியின் இன்று சர்வதேச கிரிக்கெட் இதுவரை கண்டிராத தலைசிறந்த வீரராக உருவெடுத்துள்ளார்.

    எனினும், அண்டர் 19-இல் விராட் கோலியுடன் விளையாடிய அனைவரும் இன்று கிரிக்கெட் துறையில் சாதனையாளர் ஆகிவிடவில்லை. எனினும், விராட் கோலி தற்போது 18-வது ஐ.பி.எல். தொடரில் விளையாட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணிக்காக உள்ளார். இந்த நிலையில், அண்டர் 19 இந்திய அணியில் தன்னுடன் விளையாடிய தன்மே ஸ்ரீவஸ்தவா விரைவில் தொடங்க இருக்கும் ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் அம்பயராக களமிறங்குகிறார்.

     


    இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, தன்மே ஸ்ரீவஸ்தவா தனது 35-வது வயதில் இருந்து அம்பயரிங் செய்து வருகிறார். இவர் 2008-ம் ஆண்டு நடந்த ஐ.சி.சி. அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு அதிக ஸ்கோர் அடித்த வீரராக திகழ்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் விளையாடினார்.

    அம்பயரிங் செய்வது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தன்மே ஸ்ரீவஸத்வா கூறும் போது, "நான் தலைசிறந்த வீரராக இருந்ததை புரிந்து கொள்கிறேன். ஒருகட்டத்தில் ஐ.பி.எல். விளையாட முடியுமா என்ற சூழல் உருவானது. அப்போது, தொடர்ந்து வீரராக விளையாட வேண்டுமா அல்லது வெற்றிகரமாக இரண்டாவது இன்னிங்ஸில் கவனம் செலுத்த வேண்டுமா என முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது," என்று தெரிவித்தார்.

    • பாராளுமன்ற வளாகத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்
    • Fair Delimitation என்ற பெயர் தாங்கிய பெரிய துணியை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிடித்திருந்தனர்.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசு வழங்கி இருந்தார். ஆனால் இது பற்றி விவாதிக்க சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் பாாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில், இன்று பாராளுமன்ற வளாகத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது Fair Delimitation என்ற பெயர் தாங்கிய பெரிய துணியை எம்.பி.க்கள் பிடித்திருந்தனர்.

    போராட்டத்தின்போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, "தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட்டால் நாடாளுமன்றத்தில் எங்களது குரலின் வலிமை குறைந்துவிடும்" என்று தெரிவித்தார்.

    வரும் 22 ஆம் தேதி சென்னையில், தொகுதி மறுசீரமைப்புக்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் ஏற்பட்டது.
    • கடைகள் மற்றும் சொத்துக்களை சூறையாடிய கலவரக்காரர்களை அடக்க போலீசார் போராடினர்.

    மணிப்பூரில் சூரசந்த்பூர் மாவட்டத்தில், ஹமர் பழங்குடியினத் தலைவர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட்டார்.

    இதனால் ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் ஏற்பட்டது. எனவே சூரசந்த்பூரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு தீர்வு காணும் விதமாக இரு சமூக தலைவர்களும் கடந்த திங்கள்கிழமை அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டினர். ஆனால் நேற்று இரவே மீண்டும் இரு சமூகத்தினரிடையேயும் மோதல் வெடித்தது.

    அப்பகுதியில் ஜோமி பழங்குடியினர் தங்கள் சமூகத்தின் கொடியை ஏற்ற ஹமர் பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தபோது இருதரப்புக்கும் வன்முறையில் இறங்கியது. கல்வீச்சு சம்பவங்கள் மற்றும் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இதில் லால்ரோபுயி பாகுமாட்டே என்ற 53 வயது நபர் உயிரிழந்தார்.

    மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கலவரத்தை அடக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். கடைகள் மற்றும் சொத்துக்களை சூறையாடிய கலவரக்காரர்களை அடக்க போலீசார் போராடினர். சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே குக்கி மற்றும் மெய்தேய் பழங்குடியினரையே கடந்த வருடம் முதல் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து பார்வையிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் இன்று மணிப்பூர் வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை 250 க்கும்  அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • கர்மா என்ற வார்த்தை இந்தியாவில் மிக பிரபலம்
    • கர்மா டீசர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    தென்கொரிய படங்களுக்கும் வெப் சீரிஸ்களுக்கும் இந்தியாவில் பெரும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக தென்கொரிய திரில்லர் திரைப்படங்களுக்கு இங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    அவ்வகையில் கர்மா என்ற புதிய தென்கொரிய வெப் சீரிஸ் ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தலத்தில் வெளியாகவுள்ளது. இதன் டீசர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    கர்மா என்ற வார்த்தை இந்தியாவில் மிக பிரபலம். அதாவது கடந்த பிறவி அல்லது இந்த பிறவியில் நாம் செய்யும் செயல்களின் விளைவு ஆகும்.

    ×