கார்த்திக் சுப்பராஜ் பிறந்தநாள்: ரெட்ரோ படத்தின் பி.டி.எஸ். வீடியோ வெளியீடு

ரெட்ரோ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ரெட்ரோ படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் பிறந்தநாள்: ரெட்ரோ படத்தின் பி.டி.எஸ். வீடியோ வெளியீடு
Published on

சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.

ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடலான 'கண்ணாடி பூவே' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் பிடி.எஸ். காட்சிகளை காமிக் வடிவத்தில் படக்குழு வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது.

இன்று ரெட்ரோ படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பிறந்தநாள். இதையொட்டி படக்குழு சார்பில் இயக்குநருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும், படத்தின் பி.டி.எஸ். வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com