என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இவர் 200 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்
- ரகுவரனின் வாழ்கையை ஆவண திரைப்படமாக உருவாக்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் என்றும் சிறந்த நடிகர்களுக்கான பட்டியலில் நடிகரான ரகுவரனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நடிகர் ரகுவரன் 1958-ல் கேரளாவில் பிறந்தார். இவர் 200 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் கே ஹரிஹரன் இயக்கத்தில் ஏழாவது மனிதன் திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
அதே ஆண்டு காக்க என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து மலையாள சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட மற்றும் இந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.
இவரது நடிப்பில் வெளியான சம்சாரம் அது மின்சாரம், , மைக்கேல் ராஜ், அஞ்சலி, பாஷா , அமர்கலம் ஆகிய திரைப்படங்கள் இவரது திரைப்பயணத்தில் மைல்கற்கல் என சொல்லலாம்.
அவர் இறப்பதற்கு முன் யாரடி நீ மோகினி [2008], எல்லாம் அவன் செயல் [2008], அடடா என்ன அழகு மற்றும் உள்ளம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவர் 2008 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி காலமானார்.
இந்நிலையில் ரகுவரனின் வாழ்கையை ஆவண திரைப்படமாக உருவாக்கியுள்ளனர். இப்படத்தை இயக்கி தயாரிக்கிறார் ஹாசிஃப் அபிடா ஹகீம் இவரே இப்படத்தின் ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு Raghuvaran: A Star That Defied Time என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றூம் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இத்திரைப்படம் தமிழ் , மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் சேர்ப்பு, போலி வாக்காளர் அட்டைகள் ஆகிய பிரச்சனைகள் குறித்து பேசினார்.
- இந்த நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
தேர்தல் ஆணையம் ஒரு செயலற்ற மற்றும் தோல்வியுற்ற நிறுவனம் என்று மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை எம்பியுமான கபில் சிபல் விமர்சித்துள்ளார்.
இன்று டெல்லியில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கபில் சிபல் பல்வேறு விசுஷயங்கள் குறித்து பேசினார்.
அப்போது வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் சேர்ப்பு, போலி வாக்காளர் அட்டைகள் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி காட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவது குறித்த கேள்விக்கு கபில் சிபல் பதில் கூறினார்.
அவர் பேசியதாவது, தேர்தல் ஆணையம் ஒரு செயலற்ற அமைப்பு. தேர்தல் ஆணையம் அதன் கடமைகளுக்கு ஏற்ப அதன் செயல்பாடுகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் ஆணையம் இன்று ஒரு தோல்வியடைந்த நிறுவனமாக உள்ளது. இந்த நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். இந்தப் பிரச்சினையை நாம் எவ்வளவு விரைவில் கையாள்கிறோமோ, அவ்வளவுக்கு ஜனநாயகம் உயிர்வாழும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு நான் சொல்ல விரும்புவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் ஒருபுறம் இருக்க , தேர்தல் செயல்முறை ஊழல் நிறைந்தது என்பதைக் காட்டும் சில கடுமையான பிரச்சினைகள் இருக்கின்றன. நாம் ஒன்றாக இணைந்து அதனைத் தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்
இதற்கிடையே தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் சட்டமன்றத் தொகுதிகளில் நிலுவையில் உள்ள பூத் அளவிலான பிரச்சினைகளைத் தீர்க்க 4,000க்கும் மேற்பட்ட தேர்தல் அதிகாரிகள் அனைத்துக் கட்சிக் கூட்டங்களை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 286 ரன்களைக் குவித்தது.
- இஷான் கிஷன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.
ஐதராபாத்:
ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். பவர்பிளே முடிவில் ஐதராபாத் 94 ரன்களைக் குவித்தது.
சிறப்பாக அடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்து 67 ரன்னில் அவுட்டானார். அபிஷேக் சர்மா 24 ரன்னும், நிதிஷ் ரெட்டி 30 ரன்னும், கிளாசன் 34 ரன்னும் எடுத்தனர்.
ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 45 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார்.
இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்களைக் குவித்தது. இஷான் கிஷன் 106 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- சிபிஐ அதிகாரிகள் மூட்டை மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
- ரூ.7 கோடி ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
காரைக்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விடிய விடிய சிபிஐ விசாரணை நடத்தியது.
புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து சிபிஐ அதிகாரிகள் மூட்டை மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
சிபிஐ நடத்திய விசாரணையில் ரூ.7 கோடி ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு தங்கும் விடுதியில் விடிய விடிய தொடர்ந்து 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று தொடர்ந் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- நேற்று மாலை சிறுமி மாடியில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற முதியவர் மிட்டாய் தருவதாக ஏமாற்றினார்.
- சிறுமி மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
உத்தரப் பிரதேசத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த 4 வயது சிறுமியை 80 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹாரில் புக்ராசி சௌகி பகுதியில் 80 வயது முதியவர் தனது பக்கத்தில் வீட்டில் வசித்த 4 வயது தலித் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நேற்று மாலை சிறுமி தனது வீட்டு மாடியில் தனியாக விளையாடிகொண்டிருந்தபோது அங்கு சென்ற முதியவர் மிட்டாய் தருவதாக ஏமாற்றி அங்கு வைத்தே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதையறிந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
சிறுமி மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் முதியவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
சிறுமியின் மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
- இதில் ஜப்பானின் நவோமி ஒசாகா மூன்றாவது சுற்றில் வென்றார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்ட் உடன் மோதினார்.
இதில் ஒசாகா 7-6 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டை 3-6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை6-4 என ஒசாகா கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.
- ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா?
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு எடுத்த முடிவு குறித்த விவாதம் அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையிலான ஒதுக்கீட்டை அனுமதிக்கவில்லை ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா விழாவில் இன்று கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் ஹோசபாலே பேசினார்.

அப்போது, "பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.
முஸ்லிம்களுக்கு மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவால் மேற்கொள்ளப்பட்ட முந்தைய முயற்சிகள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் 17 ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை குறித்த சர்ச்சை பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஹோசபாலே, ஔரங்கசீப் போன்றோர் சின்னமாக மாற்றப்பட்டனர். ஆனால் சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அவரது சகோதரர் தாரா ஷிகோ போன்றோர் மறக்கப்பட்டனர். இந்தியாவின் நெறிமுறைகளுக்கு எதிராகச் சென்றவர்கள் சின்னங்களாக மாற்றப்பட்டனர்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய வர படையெடுப்பு மனநிலை கொண்டவர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று தெரிவித்தார்.
- "இதயம் முரளி" படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
- "இதயம் முரளி" படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும்,"இதயம் முரளி" படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக, அதர்வா முரளி நடிப்பில் "இதயம் முரளி" படத்தைத் தயாரிக்கிறது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures. "இதயம் முரளி" படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான இதயா பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது.பாடல் மிகவும் மெலடியாக அமைந்துள்ளது. இப்பாடலை விவேக் வரிகளில் தமன் மற்றும் விஷால் மிஷ்ரா இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் பாடல் வெளியாகி 1 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
- டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
- ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
ஐதராபாத்:
ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர்.
முதல் ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. 2வது ஓவரில் 2வது ஓவரில் 14 ரன்னும் கிடைத்தது.
3வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட் 21 ரன்கள் கிடைத்தது. 4வது ஓவரில் முதல் பந்தில் அபிஷேக் சர்மா 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது. இதனால் பவர்பிளே முடிவில் ஐதராபாத் 94 ரன்களைக் குவித்தது.
ஐதராபாத் அணி 8 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 21 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி அடித்து அரை சதம் கடந்தார்.
- சாலையோர மின்கம்பம் அருகே குப்பைகளை சேகரித்துகொண்டிருந்தார்.
- வெடிப்பின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருந்ததால் அவர் பல அடி தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள குசாய்குடாவில் நேற்று (சனிக்கிழமை) மாலை மர்ம பொருள் வெடித்ததில் 37 வயது துப்புரவு பணியாளர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
துப்புரவு பணியாளர் எஸ். நாகராஜு, நேற்று மாலை அப்பகுதியில் சாலையோர மின்கம்பம் அருகே இருந்த குப்பைத் தொட்டியில் குப்பைகளை சேகரித்துகொண்டிருந்தபோது காலாவதியான பெயிண்ட் டப்பா வெடித்ததாக கூறப்படுகிறது. அடையாளம் கண்டறியப்படாத ரசாயனங்கள் அதில் இருந்ததாக தெரிகிறது.
வெடிப்பின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருந்ததால் அவர் பல அடி தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டார். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த வெடிவிபத்து சம்பவம் அருகில் உள்ள கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான்.
- தற்கொலைக்கு முயன்ற சரிதாவை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தியாவை சேர்ந்தவர் பிரகாஷ் ராஜூ. இவரது மனைவி சரிதா. இந்த தம்பதி தங்களது மகனுடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்தனர்.
இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு இத்தம்பதி விவாகரத்து பெற்றனர். இதில் மகனை பிரகாஷ் ராஜூ பராமரிப்பில் வளர்க்க கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும், சிறுவனை தாய் சரிதா குறிப்பிட்ட நாட்கள் தன்னுடன் அழைத்து செல்ல கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதற்கிடையே வர்ஜீனியாவில் வசித்து வந்த சரிதா தனது 11 வயது மகனை கலிபோர்னியாவின் சாண்டாஅனாவில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவுக்கு அழைத்து சென்றார். இதற்காக அங்குள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் சரிதா போலீசுக்கு போன் செய்து தனது மகனை கொன்றுவிட்டு தான் மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டதாக தெரிவித்தார்.
உடனே போலீசார் ஓட்டல் அறைக்கு சென்றபோது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். தற்கொலைக்கு முயன்ற சரிதாவை மருத்துவமனையில் சேர்த்தனர்.
மகனை, பிரகாஷ் ராஜூவிடம் ஒப்படைக்கும் நாளில் அவனை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு சரிதா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மகனை தான் வளர்க்க சரிதா விரும்பிய நிலையில் அது தொடர்பாக முன்னாள் கணவருடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சரிதாவை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே பிரகாஷ் ராஜூக்கு போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக குற்றம் சாட்டி னார். ஆனால் அதை பிரகாஷ் ராஜூ மறுத்து உள்ளார்.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 220 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 105 ரன்களில் சுருண்டது.
மவுண்ட் மனுவா:
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிவில் 2-1 என நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி மவுண்ட் மனுவாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியாக ஆடி 20 பந்தில் 50 ரன்களில் அவுட்டானார். டிம் செய்பர்ட் 22 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.
கடைசி கட்டத்தில் பிரேஸ்வெல் 26 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராவத் 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு பாகிஸ்தான் களமிறங்கியது. நியூசிலாந்தின் துல்லிய பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி விரைவில் விக்கெட்களை இழந்தது.
அப்துல் சமது 44 ரன்னும், இர்பான் கான் 24 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடரை 3-1 என கைப்பற்றியது.
நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டும், ஜகாரி போக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.






