search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SRHvRR"

    • 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது.
    • 52 ரன்கள் எடுப்பதற்குள் 6 முக்கிய விக்கெட்டுகள் சரிந்த நிலையில் தோல்வியை நோக்கி பயணித்தது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது.

    முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இருவரும் தலா 54 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்கள் விளாசினார்.

    இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன. துவக்க வீரர் அபிஷேக் சர்மா, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி ஆகிய இருவரும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

    அதன்பின்னர் மயங்க் அகர்வால், ஹாரி ப்ரூக் ஜோடி சற்று நேரம் தாக்குப்பிடித்தது. இந்த ஜோடியை சாகல் பிரித்தார். ஹாரி ப்ரூக் 13 ரன்னில் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் (1), கிளென் பிலிப்ஸ் (8) ஆகியோரும் விரைவில் விக்கெட்டை இழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால், 27 ரன்களில் ஆட்டமிழந்தார். 52 ரன்கள் எடுப்பதற்குள் 6 முக்கிய விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அணி தோல்வியை நோக்கி பயணித்தது.

    அடில் ரஷித் (18), கேப்டன் புவனேஸ்வர் குமார் (6), அப்துல் சமது (32 நாட் அவுட்), உம்ரான் மாலிக் (19 நாட் அவுட்), ஆகியோரின் முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களே எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    யுஸ்வேந்திர சாகல் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டிரென்ட் போல்ட் 2 விக்கெட், ஹோல்டர், அஷ்வின் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    • யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இருவரும் வலுவான அடித்தளம் அமைத்தனர்.
    • சன்ரைசர்ஸ் தரப்பில் ஃபசல்ஹக் பாரூக்கி, நடராஜன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி, பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடியில் மிரட்டியது. அபாரமாக ஆடிய துவக்க வீரர்கள் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இருவரும் தலா 54 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர். அதே விறுவிறுப்பை தொடர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினார்.

     

    ஜாஸ் பட்லர்

    ஜாஸ் பட்லர்

    தேவ்தத் படிக்கல் 2 ரன்களிலும், ரியான் பராக் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். எனினும் மறுமுனையில் சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை சிதறடித்த சஞ்சு சாம்சன் 55 ரன்கள் குவித்தார். அதன்பின் ஹெட்மயருடன் அஷ்வின் இணைய, 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. ஹெட்மயர் 22 ரன்களுடனும், அஷ்வின் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில் ஃபசல்ஹக் பாரூக்கி, நடராஜன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.

    ×