என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ரொனால்டோ REAL MADRID அணிக்காக 450 கோல்கள் அடித்துள்ளார்.
    • போர்ச்சுக்கல் அணிக்காக ரொனால்டோ 138 கோல்கள் அடித்துள்ளார்.

    கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை போர்ச்சுகல் அணியை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்வசம் வைத்துள்ளார்.

    இந்நிலையில், 4 வெவ்வேறு கால்பந்து க்ளப்கள் மற்றும் நாட்டுக்காக 100+ கோல்கள் அடித்த ஒரே வீரர் என்ற அபார சாதனையை ரொனால்டோ.படைத்துள்ளார்

    ரொனால்டோ REAL MADRID அணிக்காக 450 கோல்களும் MAN UTD அணிக்காக 145 கோல்களும் PORTUGAL அணிக்காக 138 கோல்களும் JUVENTUS அணிக்காக 101 கோல்களும் AL NASSR அணிக்காக 100 கோல்களும் அடித்து இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    • விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி ஆகும்.
    • விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gate 2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    ஐ.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான 'கேட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன.

    இது நுழைவுத்தேர்வாக மட்டுமன்றி இஸ்ரோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு சேருவதற்கும் இதில் பெரும் மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன்படி, 'கேட் 2026' நுழைவுத்தேர்வு என்ஜினீயரிங், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட 30 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. ஒரு தேர்வர் ஒன்று அல்லது இரண்டு தாள்கள் தேர்வை தேர்வு செய்து எழுதலாம்.

    இந்த தேர்வை என்ஜினீயரிங் இளநிலை பட்டப்படிப்பு, கலை மற்றும் அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு அல்லது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் எழுத முடியும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. முன்னதாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி ஆகும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gate 2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 7, 8 மற்றும் 14, 15-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது.

    • சஞ்சு சாம்சனை கொச்சி ப்ளூ டைகர்ஸ் 26.8 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது.
    • கேரள கிரிக்கெட் லீக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு சஞ்சு சாம்சன் ஏலம் எடுக்கப்பட்டார்.

    ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 தொடர் பிரபலமான நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் டி20 கிரிக்கெட் லீக்கை தொடங்க ஆரம்பித்தன.

    அவ்வகையில் கேரளா கிரிக்கெட் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று கொல்லம் - கொச்சி அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்லம் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விஷ்ணு வினோத் 94 ரன்களும் சச்சின் பேபி 91 ரன்களும் அடித்தனர்.

    இதனையடுத்து 237 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொச்சி அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 51 பந்துகளில் 121 ரன்கள் குவித்து அவுட்டனார். சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • அஸ்தினாபுரம் சாலை, அம்பேத்கர் சாலை, மேடவாக்கம் மெயின் ரோடு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (26.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    பாரிவாக்கம்: கண்ணப்பாளையம், ஆயில்சேரி, பிடாரிதாங்கல், பனவேடு தோட்டம், கொளப்பஞ்சேரி.

    தேனாம்பேட்டை: எல்லியம்மன் காலனி, போயஸ் கார்டன், ஜேஜே ரோடு, கேஆர் ரோடு, முரேஷ் கேட் சாலை, சேஷாத்ரி சாலை, பஷீர் அகமது தெரு, அம்புஜம்மாள் தெரு, எஸ்எஸ் ஐயங்கார் தெரு, வீனஸ் காலனி 1வது மற்றும் 2வது தெரு, மகாராஜா சாலை.

    கோவிலம்பாக்கம்: வெள்ளக்கல், வடக்குப்பட்டு, எஸ்.கொளத்தூர், ஈச்சங்காடு, காந்தி நகர், சத்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர்.

    நன்மங்கலம்: அஸ்தினாபுரம் சாலை, அம்பேத்கர் சாலை, மேடவாக்கம் மெயின் ரோடு.

    தாம்பரம்: முடிச்சூர் கிருஷ்ணா நகர், பாலாஜி நகர், கோபால் நகர், ஏஎல்எஸ் பசுமை நிலம், பரத் நகர், முல்லை நகர், கனகம்மாள் கோவில் தெரு, விஜயா நகர், நேரு நகர், பாம்பன்சாமிகள் சாலை, சி.வி.ராமன் தெரு, லெனின் தெரு, யு.வி.சுவாமிநாதன் தெரு, வள்ளியம்மை தெரு, சுதா அவென்யூ, கஸ்தூரிபாய் தெரு, நிஷா அவென்யூ.

    • திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார்.
    • அதிமுக கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன்படி, திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றுவளைத்த அதிமுகவினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர். ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    அதிமுக தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    • பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் உலா.
    • மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-9 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : துவிதியை நண்பகல் 1.15 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம் : உத்திரம் நாளை விடியற்காலை 5.05 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் உலா, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாட வீதி புறப்பாடு

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ விநாயகப்பெருமான் புறப்பாடு. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் உலா. உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் திருக்கல்யாணம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாட வீதி புறப்பாடு.

    மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சோமவார அபிஷேகம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலை அலங்கார திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அன்பு

    ரிஷபம்-நிம்மதி

    மிதுனம்-நன்மை

    கடகம்-வெற்றி

    சிம்மம்-பாசம்

    கன்னி-முயற்சி

    துலாம்- நிறைவு

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- கீர்த்தி

    மகரம்-கவனம்

    கும்பம்-போட்டி

    மீனம்-சிந்தனை

    • பிரதமரை Mr என்றும், முதல்வரை அங்கிள் என்றும் விஜய் கூறுகிறார்.
    • சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வருமாம், பின்னர் தூங்கி விடுமாம்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் நடைபெற்றது.

    மாநாட்டில் பேசிய விஜய், "மாண்புமிகு பிரதமர் நரேந்திரடி மோடி ஜி அவர்களே, மக்களுக்கு உங்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கிறது. மீனவர்களை பாதுகாப்பதற்காக கட்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்குக்கொடுங்கள். அதுபோதும்.

    மொரட்டு பிடிவாதத்தால் நீட் தேர்வு. நீட் தேர்வால் இங்கே நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. அதனால் நீட் தேர்வே தேவையில்லை என அறிவித்து விடுங்கள் அது போதும். செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜி அவர்களே?

    தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க?" என்று பேசினார்.

    இந்நிலையில், மாநாட்டில் பாஜகவை விமர்சித்து விஜய் பேசியதற்கு பாஜக உறுப்பினர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தனது பிறந்தநாளை முன்னிட்டு சரத்குமார் கள்ளக்குறிச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழை வளர்த்துக் கொண்டிருப்பவர் மோடி; உலகின் மாபெரும் தலைவர் மோடி. 12 ஆண்டு மோடி ஆட்சியில் ஒரு மீனவர் கூட இறக்கவில்லை. கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக

    பிரதமரை Mr என்றும், முதல்வரை அங்கிள் என்றும் விஜய் கூறுகிறார். கத்துக்குட்டியான ஒருவர்.. கோடநாட்டில் தெருவில் நின்ற போது மிஸ்.ஜெயலலிதா என்று சொல்லியிருப்பீர்களா?

    சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வருமாம், பின்னர் தூங்கி விடுமாம். அந்த மாதிரி சிங்கமாக இருக்க கூடாது.

    NEET ஏன் வேண்டாம்..? NEET-ஐ கொண்டுவந்தது யார்..? தகுதி இருப்பவர்கள் பதவிக்கு வரவேண்டும், தகுதி உள்ளவர்கள் அந்த பணிக்கு செல்ல வேண்டும்

    கூட்டத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் கூட்டப்பட்டு, அதை தொலைக்காட்சியில் காட்டும் கூட்டம் அல்ல இது" என்று தெரிவித்தார்.

    • மிதுனம்: மனச்சுமை குறையும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.
    • கடகம்: வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    ரிஷபம்

    ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. வரன்கள் வாயில் தேடி வரும்

    மிதுனம்

    மனச்சுமை குறையும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

    கடகம்

    வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். தொழில் வளர்ச்சி கருதிப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

    சிம்மம்

    நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்க்கும் நாள். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். புதிய முயற்சியில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    கன்னி

    வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும் நாள். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.

    துலாம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். மதியத்திற்குமேல் விரயம் உண்டு. வெளிவட்டார பழக்க வழக்கத்தில் விழிப்புணர்ச்சி தேவை. கொள்கைப் பிடிப்பை தளர்த்திக்கொள்ள நேரிடும்.

    விருச்சிகம்

    யோகமான நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் உண்டு.

    தனுசு

    வரவு திருப்தி தரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து பணிபுரியும் சூழ்நிலை உருவாகும்.

    மகரம்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். மருத்துவச் செலவு உண்டு. மறைமுக எதிர்ப்புகள் உண்டு.

    கும்பம்

    ஆதாயத்தைவிட விரயம் கூடும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் செலவுகளைச் சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை அமையும்.

    மீனம்

    கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். நண்பர்களிடம் சாமர்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வராமல் இருந்த பணவரவு ஒன்று இன்று வரலாம்.

    • பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தர் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றார்.
    • இருநாட்டு உறவுகள் முன்னேற்றத்தைப் பெருக்குவது தொடர்பாக கலந்தாலோசித்தார்.

    டாக்கா:

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது போராட்டம் வெடித்தது. வன்முறையாக மாறியதில் ஷேக் ஹசீனா பதவியை துறந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பொறுப்பு வகித்துள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை மந்திரியுமாக இருக்கும் இஷாக் தர் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றார். டாக்காவில் விமானம் மூலமாக வந்திறங்கிய அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து வங்கதேச இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ், முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மற்றும் அந்த நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாட்டு உறவுகள் முன்னேற்றத்தைப் பெருக்குவது தொடர்பாக கலந்தாலோசித்தார்.

    பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி 13 ஆண்டுக்கு பிறகு வங்கதேசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க. கடைபிடித்து வருகிறது.
    • பொதுச் செயலாளர் பிரேமலதா ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    சென்னை:

    விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க. கடைபிடித்து வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று விஜயகாந்த் பிறந்தநாள், வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அதன்பின்னர் நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது:

    இப்போது தான் விஜய் உங்களுக்கு பெரியதாக தெரிகிறார். ஆனால், விஜய் சிறிய பையனாக இருந்ததில் இருந்தே பார்த்து வருகிறோம். என்னை பொருத்தவரையில் அவர் எனது மகன் போன்றவர். அவருக்காக 'செந்தூரபாண்டி' படத்தில் விஜயகாந்த் நடித்து கொடுத்தார். இன்று அவர் நன்றாக இருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். அதற்காக அவர் விஜயகாந்த் படத்தை அரசியலுக்காகப் பயன்படுத்தினால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

    • அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா ரஷிய அதிபர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
    • அதில், உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.

    அங்காரா:

    அமெரிக்கா அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷிய அதிபர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

    அதில் போரால் ஏற்பட்டுள்ள துன்பங்கள் மற்றும் பிரிவினால் வாடும் குழந்தைகளை காரணம் காட்டி உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்நிலையில், துருக்கி அதிபர் தாயீப் எரோடகனின் மனைவி எமினே, அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உக்ரைன்-ரஷியா போர் நிறுத்தம் ஏற்பட புதினுக்கு கடிதம் எழுதியிருந்ததைப் பாராட்டினார்.

    தொடர்ந்து, நீண்ட நாட்களாக நீடித்து வரும் காசா போரை உடனடியாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • வாக்காளர் வாக்குரிமையை உறுதிசெய்ய வலியுறுத்தி ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
    • இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்க ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பீகார் செல்கிறார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பீகாரில் வாக்காளர் வாக்குரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.

    ராகுல் காந்தியின் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பீகார் செல்கிறார்.

    இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:

    தமிழக முதல்வர் ஒருவேளை பீகார் வருகிறார் என்றால் அதனால் என்ன மாற்றம் இங்கு நிகழ்ந்துவிட போகிறது? அவரின் வருகையால் பீகார் முன்னேறிவிடுமா?

    பீகாரின் பிரச்சனைகளுக்கு பீகாரிலேயே தான் தீர்வு காணப்பட வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கு வருவதாக இருந்தாலும் சரி அல்லது கர்நாடகா முதல்வர் வருவதாக இருந்தாலும் சரி, அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

    பீகாருக்கு வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவேண்டும் என்ற ஒரு யாத்திரை தான் தற்போது வேண்டும். பிரயோஜனம் இல்லாத மற்ற யாத்திரையால் என்ன ஆதாயம் கிடைத்துவிடப் போகிறது?

    காங்கிரசை குற்றம் சுமத்துகிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் பிரதமர் மோடியை குற்றம் சுமத்துகிறது. ஆனால் பீகார் இளைஞர்கள் கேட்பது எல்லாம், இங்கு வேலைவாய்ப்புகள் எப்போது கிடைக்கும், புலம்பெயர்ந்து செல்வோரை எப்போது தடுப்பீர்கள் என்பதுதான் என தெரிவித்தார்.

    ×