என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஒரு படம் நன்றாக இருந்தால், எனக்கு பிடித்திருந்தால் அந்த படக்குழுவை அழைத்து பாராட்டுகிறேன்.
- நல்லது செய்வதற்கு நான் ஏன் யோசிக்க வேண்டும்?
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'மதராஸி'. இப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'மதராஸி' வருகிற 5-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'மதராஸி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:-
''விஜய் சார் கூட நான் நடித்தது நிறைய பேருக்கு சந்தோஷம். ஆனால் சிலர், இவர் குட்டி தளபதி, திடீர் தளபதி ஆகப் பார்க்கிறார்னு கிண்டல் செய்தார்கள். அவர் அப்படி நினைத்திருந்தால் துப்பாக்கியை என்னிடம் கொடுத்திருக்க மாட்டார், நானும் வாங்கியிருக்க மாட்டேன். நான் அவருடைய ரசிகர்களை பிடிக்கப் பார்க்கிறேன்னு சொன்னாங்க, ரசிகர்களை அப்படி யாராலும் பிடிக்க முடியாது. ரசிகர்கள் என்பது ஒரு பவர். எப்போதும் அண்ணன் அண்ணன்தான்... தம்பி தம்பிதான்.
ஒரு படம் நன்றாக இருந்தால், எனக்கு பிடித்திருந்தால் அந்த படக்குழுவை அழைத்து பாராட்டுகிறேன். ஆனால் இவன் என்ன அவ்ளோ பெரிய ஆளா? என்று கேட்கிறார்கள். நல்லது செய்வதற்கு நான் ஏன் யோசிக்க வேண்டும்? என்றார்.
- உரிய விலை கிடைக்காமலும், இயற்கையின் சீற்றத்தால் பயிர்கள் நாசமாகியும் வேளாண் தொழில் நஷ்டத்தை அடைகிறது.
- முதலுக்கே மோசமாகி கடனாளியாக சிரமப்பட்டு வருகிறார்.
நகரி:
'உலகம் சுழல்வதற்கு உழவுதான் அடிப்படை' என்கிறார் திருவள்ளுவர். இந்த அகில உலகமும் விவசாயி இல்லாவிட்டால் இயங்காது. ஆனால் இன்று ஊருக்கு சோறிடும் விவசாயியின் நிலைமை எப்படி இருக்கிறது?.
பயிரிட்டு உரமிட்டு வளர்த்த விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமலும், இயற்கையின் சீற்றத்தால் பயிர்கள் நாசமாகியும் வேளாண் தொழில் நஷ்டத்தை அடைகிறது. இதனால் முதலுக்கே மோசமாகி கடனாளியாக சிரமப்பட்டு வருகிறார்.
ஆந்திர மாநிலத்தில் விவசாயி ஒருவர், தனது நிலத்தை உழுவதற்கு மாடும், டிராக்டரும் இல்லாததால் தனது மகனையும், மகளையும் ஏரில் பூட்டி உழுதுள்ளார். கடப்பா மாவட்டம் பெண்டிளிமர்ரி கிராமத்தை சேர்ந்த பண்டி சேகர்ரெட்டி என்பவர்தான் அந்த விவசாயி. இதுதொடர்பான வீடியோ காட்சி வைரலாகி உள்ளது.
- முதல் முறை வங்கிக்கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் பூஜ்ஜியம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தை காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கக்கூடாது.
- பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
புதுடெல்லி:
வங்கிகளில் இருந்து தனிநபர் கடன், நகைக்கடன், வீடு உள்ளிட்ட பிற வங்கிக்கடன் பெறுவதற்கு 'சிபில் ஸ்கோர்' எனப்படும் 3 இலக்க எண் கோரப்படுகிறது.
தனிநபரின் கடன்தகுதியை நிர்ணயிக்கும் இந்த மதிப்பெண்ணை இந்திய கடன் தகவல் பணியகம் (சிபில்) வழங்குகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக இருந்தால் மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன.
இந்த சிபில் ஸ்கோர் போதுமான அளவு இல்லாததால் பலர் கடன் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக முதல் முறை வங்கிக்கடன் பெற முயற்சிப்போரும் இந்த சிபில் ஸ்கோர் இல்லாமல் கடன் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதைத்தொடர்ந்து முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.
இது தொடர்பாக நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி கூறியதாவது:-
முதல் முறை வங்கிக்கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் பூஜ்ஜியம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தை காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கக்கூடாது.
கடன் நிறுவனங்களின் சிறப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல என ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதைப்போல கடன் விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச சிபில் ஸ்கோரை ரிசர்வ் வங்கி அறிவிக்கவும் இல்லை.
ஒழுங்குபடுத்தப்படாத கடன் சூழலில், கடன் வழங்குபவர்கள்தான் தங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் பரந்த ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தங்கள் கடன் முடிவுகளை எடுக்கிறார்கள்.
முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என்றாலும், அவர்களது நடத்தை பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
அந்தவகையில் அவர்களின் கடன் வரலாறு, கடந்த கால திருப்பிச்செலுத்தும் வரலாறு, தாமதமான திருப்பிச் செலுத்தல்கள், தீர்க்கப்பட்ட கடன்கள், மறுசீரமைக்கப்பட்டவை மற்றும் தள்ளுபடி செய்யப்பட்டவை போன்றவற்றை சரி பார்க்க வேண்டும்.
இவ்வாறு பங்கஜ் சவுத்ரி கூறினார்.
- ஏழை மக்களுக்கு உணவு, உடைகளையும் தானமாக வழங்குவார்கள்.
- இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாத பிறை நேற்று தமிழகத்தில் தெரிந்தது.
சென்னை:
முகமது நபியின் பிறந்த நாளை மிலாடி நபி என இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். அன்று புனித நூலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக கொண்டுள்ளனர். மேலும், ஏழை மக்களுக்கு உணவு, உடைகளையும் தானமாக வழங்குவார்கள்.
இந்த நிலையில், மிலாடி நபி விழா வருகிற 5-ந்தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாத பிறை நேற்று தமிழகத்தில் தெரிந்தது. எனவே மிலாடி நபி விழா (இறை தூதர் முகமது நபி பிறந்தநாள்) வருகிற 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான் அனுராக் தாகூர் கூறினார்.
- நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பினார்.
மாணவர்கள் ஒருமித்த குரலில் நீல் ஆம்ஸ்ட்ராங் என பதிலளித்தனர்.
அதற்கு அனுராக் தாக்கூர் "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான் என்றார். மேலும் அவர் பேசியதாவது:
நாம் இன்றும் நம்மை தற்போதைய நிலையில் பார்க்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழமையான நம் பாரம்பரியம், அறிவு, கலாசாரம் பற்றி நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டியவாறே நாம் இருக்கிறோம்.
எனவே, பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சிந்தித்து, நமது தேசத்தையும், மரபுகளையும், அறிவையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்தத் திசையில் பார்த்தால் நீங்கள் நிறைய விஷயங்களைக் காண்பீர்கள் என தெரிவித்தார்.
நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என்று பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஒருவர், பள்ளி மாணவர்களிடம் நிலவில் முதன்முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல, அனுமன் என்று கூறுவது மிகவும் கவலையளிக்கிறது.
அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல. வகுப்பறைகளில்மாணவர்களை தவறாக வழிநடத்துவது நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையை அவமதிப்பதாகும்.
இந்தியாவின் எதிர்காலம், உண்மையை கட்டுக்கதையுடன் குழப்பிக் கொள்ளாமல், ஆர்வத்தை வளர்ப்பதில்தான் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
- ஆணவ படுகொலைகளுக்கு பின்னால் ஒரு கோட்பாடு இருக்கிறது.
- அந்த கோட்பாட்டை நாம் அழித்தொழிக்க வேண்டும்.
மயிலாப்பூர்:
சென்னை மயிலாப்பூரில் ஆணவ படுகொலைகளுக்கு தனிச்சட்டம் கோரி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, இந்து கடவுள் ராமன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கருத்தரங்கில் வன்னி அரசு பேசியதாவது:-
தவம் செய்த சம்பூகன் தாழ்ந்த சாதி என்பதால் ராமன் அவரை கொன்று விட்டார். பார்ப்பனர்களுக்காக கொலை செய்தவர் ராமன்.
ஆணவ படுகொலைகளுக்கு பின்னால் ஒரு கோட்பாடு இருக்கிறது. அந்த கோட்பாடு தான் சனாதன கோட்பாடு. அந்த கோட்பாடு வர்ணாசன கோட்பாடு. அந்த கோட்பாட்டை நாம் அழித்தொழிக்க வேண்டும். அதுதான் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னார்கள்... இந்து மதம் அழிக்கப்பட வேண்டிய மதம். இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. இந்து மதத்தில் எப்போதுமே சமூக நீதி இல்லை. ஆகவே இந்து மதத்திற்கு எதிராக மதம் மாறுகிறார்.
ராமன் பார்ப்பனர் அல்ல... ஆனால் பார்ப்பனர்களுக்காக இந்த படுகொலை செய்கிறார். ராமதாஸ் பார்ப்பனர் அல்ல... ஆனால் பார்ப்பனர்களுடைய இந்த கருத்தியலுக்காக படுகொலை செய்கிறார். படுகொலை செய்ய தூண்டுகிறார். இரண்டும் ஒன்று தான். ராமனும் ஒன்று தான்.. ராமதாசும் ஒன்றுதான். ராமதாசுடன் இதை நான் முடிக்கவில்லை.
இதன் தொடர்ச்சி இன்றைக்கு நிறைய இருப்பதால் இந்த கருத்தியலை உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்றார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 9 ஒருநாள் தொடர்களை தென் ஆபிரிக்க கைப்பற்றியுள்ளது.
- ஆஸ்திரலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் தொடர்களை தென்னாப்பிரிக்கா தொடர்ந்து கைப்பற்றி சாதனை
தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா வரலாறு படைத்தது.
இதன்மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக முறை ஒருநாள் தொடரை வென்ற அணி என்ற புதிய சாதனையை தென் ஆப்பிரிக்கா படைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 9 ஒருநாள் தொடர்களை தென் ஆபிரிக்க கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் இங்கிலாந்து (8)இந்தியா (6) உள்ளன.
மேலும், 2016 முதல் தற்போது வரை ஆஸ்திரலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் தொடர்களை தொடர்ந்து கைப்பற்றி தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது.
- ரொனால்டோ REAL MADRID அணிக்காக 450 கோல்கள் அடித்துள்ளார்.
- போர்ச்சுக்கல் அணிக்காக ரொனால்டோ 138 கோல்கள் அடித்துள்ளார்.
கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை போர்ச்சுகல் அணியை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், 4 வெவ்வேறு கால்பந்து க்ளப்கள் மற்றும் நாட்டுக்காக 100+ கோல்கள் அடித்த ஒரே வீரர் என்ற அபார சாதனையை ரொனால்டோ.படைத்துள்ளார்
ரொனால்டோ REAL MADRID அணிக்காக 450 கோல்களும் MAN UTD அணிக்காக 145 கோல்களும் PORTUGAL அணிக்காக 138 கோல்களும் JUVENTUS அணிக்காக 101 கோல்களும் AL NASSR அணிக்காக 100 கோல்களும் அடித்து இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
- விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி ஆகும்.
- விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gate 2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
ஐ.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான 'கேட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன.
இது நுழைவுத்தேர்வாக மட்டுமன்றி இஸ்ரோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு சேருவதற்கும் இதில் பெரும் மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன்படி, 'கேட் 2026' நுழைவுத்தேர்வு என்ஜினீயரிங், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட 30 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. ஒரு தேர்வர் ஒன்று அல்லது இரண்டு தாள்கள் தேர்வை தேர்வு செய்து எழுதலாம்.
இந்த தேர்வை என்ஜினீயரிங் இளநிலை பட்டப்படிப்பு, கலை மற்றும் அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு அல்லது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் எழுத முடியும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. முன்னதாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி ஆகும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gate 2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 7, 8 மற்றும் 14, 15-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது.
- சஞ்சு சாம்சனை கொச்சி ப்ளூ டைகர்ஸ் 26.8 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது.
- கேரள கிரிக்கெட் லீக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு சஞ்சு சாம்சன் ஏலம் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 தொடர் பிரபலமான நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் டி20 கிரிக்கெட் லீக்கை தொடங்க ஆரம்பித்தன.
அவ்வகையில் கேரளா கிரிக்கெட் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று கொல்லம் - கொச்சி அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்லம் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விஷ்ணு வினோத் 94 ரன்களும் சச்சின் பேபி 91 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து 237 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொச்சி அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 51 பந்துகளில் 121 ரன்கள் குவித்து அவுட்டனார். சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- அஸ்தினாபுரம் சாலை, அம்பேத்கர் சாலை, மேடவாக்கம் மெயின் ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (26.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பாரிவாக்கம்: கண்ணப்பாளையம், ஆயில்சேரி, பிடாரிதாங்கல், பனவேடு தோட்டம், கொளப்பஞ்சேரி.
தேனாம்பேட்டை: எல்லியம்மன் காலனி, போயஸ் கார்டன், ஜேஜே ரோடு, கேஆர் ரோடு, முரேஷ் கேட் சாலை, சேஷாத்ரி சாலை, பஷீர் அகமது தெரு, அம்புஜம்மாள் தெரு, எஸ்எஸ் ஐயங்கார் தெரு, வீனஸ் காலனி 1வது மற்றும் 2வது தெரு, மகாராஜா சாலை.
கோவிலம்பாக்கம்: வெள்ளக்கல், வடக்குப்பட்டு, எஸ்.கொளத்தூர், ஈச்சங்காடு, காந்தி நகர், சத்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர்.
நன்மங்கலம்: அஸ்தினாபுரம் சாலை, அம்பேத்கர் சாலை, மேடவாக்கம் மெயின் ரோடு.
தாம்பரம்: முடிச்சூர் கிருஷ்ணா நகர், பாலாஜி நகர், கோபால் நகர், ஏஎல்எஸ் பசுமை நிலம், பரத் நகர், முல்லை நகர், கனகம்மாள் கோவில் தெரு, விஜயா நகர், நேரு நகர், பாம்பன்சாமிகள் சாலை, சி.வி.ராமன் தெரு, லெனின் தெரு, யு.வி.சுவாமிநாதன் தெரு, வள்ளியம்மை தெரு, சுதா அவென்யூ, கஸ்தூரிபாய் தெரு, நிஷா அவென்யூ.
- திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார்.
- அதிமுக கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றுவளைத்த அதிமுகவினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர். ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அதிமுக தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.






