என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மக்கள் பாசம், எளிமை, தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கான பார்வை ஆகியவை அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருக்கும்.
    • கேப்டன் விஜயகாந்த் உழைப்பையும், தமிழ் மக்களுக்கான சேவையையும் மரியாதையுடன் நினைவுகூருகிறேன்.

    சென்னை:

    தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இன்று மறைந்த தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர், மக்கள் மனங்களை கவர்ந்த அரசியல்வாதியும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.

    தமிழக அரசியலில் எப்போதும் தனித்துவமான குரலாகவும், சமூகநீதிக்காக எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டவராகவும் அவர் வாழ்ந்தார். திரை உலகில் அவர் சாதித்த பெருமை, அரசியல் உலகிலும் மக்கள் நலனுக்காக அவர் எடுத்துக்கொண்ட துணிச்சலான நிலைப்பாடுகள் என்றும் நினைவுகூரத்தக்கவை.

    அவரது மக்கள் பாசம், எளிமை, தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கான பார்வை ஆகியவை அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருக்கும்.

    இந்நாளில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உழைப்பையும், தமிழ் மக்களுக்கான சேவையையும் மரியாதையுடன் நினைவுகூருகிறேன். அவரது நினைவுகள் எப்போதும் நம் மனங்களில் நிலைத்து நிற்கும் என்றார்.

    • திரையுலகிலும், அரசியல் தளத்திலும், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் கேப்டன்.
    • ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அறப்பணி, இன்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொடர்வது பாராட்டுக்குரியது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தேமுதிக நிறுவனர் தலைவர், பத்மபூஷன், அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பிறந்த தினம் இன்று.

    திரையுலகிலும், அரசியல் தளத்திலும், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் கேப்டன் அவர்கள். நடிகர் சங்கத் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரது துணிச்சலான பணிகள் போற்றுதலுக்குரியவை.

    கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். அவர் தொடங்கிய ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அறப்பணி, இன்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொடர்வது பாராட்டுக்குரியது.

    "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழும், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.

    • முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறைக்காவல் பெற்றால் அவர்கள் பதவி விலக வேண்டும்
    • கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும்.

    பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறைக்காவல் பெற்றால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்ற வகையில் பதவி பறிப்பு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    முதல்வர்கள், அமைச்சர்கள், ஐந்து ஆண்டு தண்டனை பெறக்கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் என்பதுதான் அந்த மசோதாவின் முக்கியம்சம். இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

    இந்நிலையில், இந்த மசோதா குறித்து பேசிய அமித் ஷா, "நாட்டின் பிரதமர் சிறைக்குச் சென்றால், பிரதமரோ அல்லது முதலமைச்சரோ சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்துவது சரியா என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

    சிறையிலிருந்து யாராவது அரசாங்கத்தை நடத்த வேண்டுமா? சுதந்திரம் பெற்றதிலிருந்து, பல தலைவர்கள் சிறைக்குச் சென்றுள்ளனர். ஆனால் சமீபத்தில், சிறைக்குச் சென்ற பிறகும் பல தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாத ஒரு போக்கு தொடங்கியுள்ளது.

    தமிழ்நாட்டின் சில அமைச்சர்கள் ராஜினாமா செய்யவில்லை, டெல்லியின் அமைச்சர்களும் முதல்வரும் ராஜினாமா செய்யவில்லை. இது உலகளவில் நமது ஜனநாயகத்திற்கு மதிப்பு தருமா?

    காங்கிரஸ் இந்த மசோதாவை வெளிப்படையாக எதிர்க்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, மன்மோகன் சிங் அதன் பிரதமராகவும், லாலு பிரசாத் யாதவ் அமைச்சராகவும் இருந்தார். லாலு பிரசாத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அப்போது மன்மோகன் அரசு ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்த சமயத்தில் ராகுல் காந்தி ஒரு செய்தியாளர் சந்திப்பில் அதை முற்றிலும் முட்டாள்தனம் என்று கூறி பகிரங்கமாகக் கிழித்தெறிந்தார்,

    அவர் அவசரச் சட்டத்தையும், நாட்டின் அமைச்சரவையையும் பிரதமரும் எடுத்த முடிவையும், அவரது சொந்தக் கட்சியின் பிரதமரால் எடுக்கப்பட்ட முடிவையும், தார்மீக அடிப்படையில் கேலி செய்தார், அப்போது மன்மோகன் சிங் உலகம் முழுவதும் ஒரு பரிதாபகரமான நபராகிவிட்டார். இன்று, பீகாரில் ஆட்சி அமைப்பதற்கு அதே ராகுல் காந்தி லாலு பிரசாத்தை கட்டிப்பிடிக்கிறார். இது இரட்டை வேடம் இல்லையா?" என்று தெரிவித்தார்.

    • அச்சு, தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கும் வகையில் பாடத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இதழியல் கல்வி பயிற்றுவிக்கப்படும் வகையில் பாடத்திட்டம் தொடக்கம்.

    சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதழியல் நிறுவனத்தில் 2025-2026-ம் கல்வியாண்டு முதல் இதழியல் துறையில் முதுநிலை பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அச்சு, தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கும் வகையில் பாடத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இதழியல் கல்வி பயிற்றுவிக்கப்படும் வகையில் பாடத்திட்டமும், இதழியல் கல்வி நிறுவனத்தில் இதழியலுடன் இணைந்த டிஜிட்டல் மீடியா பயிற்சியும் வழங்குகிறது.

    • மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஷேன் நிகாம் முக்கியமானவர்.
    • தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் பல்டி திரைப்படம் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஷேன் நிகாம் முக்கியமானவர். இவர் சில மாதங்களுக்கு முன் மெட்ராஸ்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் கலையரசன், நிஹாரிகா, ஐஷ்வர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    இந்நிலையில் அடுத்ததாக ஷேன் நிகாமின் 25- வது திரைப்படமான பல்டி படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருடன் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் ,செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

    படத்தின் இசையை சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இது இவர் இயக்கும் முதல் மலையாள திரைப்படமாகும். இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ஜாலக்காரி வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விநாயக் சசிகுமார் வரிகளில் சாய் அபயங்கர் மற்றும் சுபலாஷினி இணைந்து பாடியுள்ளனர். பாடல் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    படத்தை சந்தோஷ் குருவில்லா தயாரிக்க தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    • அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாகூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல...
    • பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.

    உலகின் முதல் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் கிடையாது என்றும் முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது அனுமன்தான் எனவும் பள்ளி மாணவர்கள் மத்தியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், மதுரை பாராளுமன்ற தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாகூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல,

    பா.ஜ.க.வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது.

    நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார். 

    • கொரோனா காரணமாக இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம் நிறுத்தப்பட்டிருந்தது.
    • இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக வர்த்தகம் தொடங்க சீனா ஒப்புதல்

    இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளது

    கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம், இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

    வர்த்தகத்தோடு, கைலாஷ் மான்சரோவர் யாத்திரையையும் மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் சீனா சாதகமாக பதிலளித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

    • விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.
    • வெள்ளி விலை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.

    இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9.305-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 74,440-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 131 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 31ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    24-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520

    23-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520

    22-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,720

    21-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,840

    20-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    24-08-2025- ஒரு கிராம் ரூ.130

    23-08-2025- ஒரு கிராம் ரூ.130

    21-08-2025- ஒரு கிராம் ரூ.128

    21-08-2025- ஒரு கிராம் ரூ.126

    20-08-2025- ஒரு கிராம் ரூ.125

    • அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர முடியாது.
    • அணு சக்தித் திட்டம், தீர்க்க முடியாத பிரச்சனை

    அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று அந்நாட்டின் உச்சத் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய 12 நாள் தாக்குதலால் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர முடியாது. அணு சக்தித் திட்டம், தீர்க்க முடியாத பிரச்சனை" என்று தெரிவித்தார்.

    கடந்த மாதம், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 12 நாட்கள் கடுமையான மோதல் நிகழ்ந்தது. ஈரானில் அணு விஞ்ஞானிகளையும் ஈரானில் நூற்றுக்கணக்கான மக்களையும் இஸ்ரேல் குண்டுவீசி கொன்றது. பதிலுக்கு ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிலும் கடும் சேதங்கள் ஏற்பட்டன.

    இடையில் அமெரிக்காவும் ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை தாக்கியது. இதன் பாதிப்புகள் இன்னும் மதிப்பிடப்படவில்லை. இருப்பினும் அணுசக்தி நிலையங்களை முற்றிலும் அழித்ததாக அமெரிக்கா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • ஒரு படம் நன்றாக இருந்தால், எனக்கு பிடித்திருந்தால் அந்த படக்குழுவை அழைத்து பாராட்டுகிறேன்.
    • நல்லது செய்வதற்கு நான் ஏன் யோசிக்க வேண்டும்?

    இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'மதராஸி'. இப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'மதராஸி' வருகிற 5-ந்தேதி வெளியாக உள்ளது.

    இந்த நிலையில், 'மதராஸி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:-

    ''விஜய் சார் கூட நான் நடித்தது நிறைய பேருக்கு சந்தோஷம். ஆனால் சிலர், இவர் குட்டி தளபதி, திடீர் தளபதி ஆகப் பார்க்கிறார்னு கிண்டல் செய்தார்கள். அவர் அப்படி நினைத்திருந்தால் துப்பாக்கியை என்னிடம் கொடுத்திருக்க மாட்டார், நானும் வாங்கியிருக்க மாட்டேன். நான் அவருடைய ரசிகர்களை பிடிக்கப் பார்க்கிறேன்னு சொன்னாங்க, ரசிகர்களை அப்படி யாராலும் பிடிக்க முடியாது. ரசிகர்கள் என்பது ஒரு பவர். எப்போதும் அண்ணன் அண்ணன்தான்... தம்பி தம்பிதான்.

    ஒரு படம் நன்றாக இருந்தால், எனக்கு பிடித்திருந்தால் அந்த படக்குழுவை அழைத்து பாராட்டுகிறேன். ஆனால் இவன் என்ன அவ்ளோ பெரிய ஆளா? என்று கேட்கிறார்கள். நல்லது செய்வதற்கு நான் ஏன் யோசிக்க வேண்டும்? என்றார்.

    • உரிய விலை கிடைக்காமலும், இயற்கையின் சீற்றத்தால் பயிர்கள் நாசமாகியும் வேளாண் தொழில் நஷ்டத்தை அடைகிறது.
    • முதலுக்கே மோசமாகி கடனாளியாக சிரமப்பட்டு வருகிறார்.

    நகரி:

    'உலகம் சுழல்வதற்கு உழவுதான் அடிப்படை' என்கிறார் திருவள்ளுவர். இந்த அகில உலகமும் விவசாயி இல்லாவிட்டால் இயங்காது. ஆனால் இன்று ஊருக்கு சோறிடும் விவசாயியின் நிலைமை எப்படி இருக்கிறது?.

    பயிரிட்டு உரமிட்டு வளர்த்த விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமலும், இயற்கையின் சீற்றத்தால் பயிர்கள் நாசமாகியும் வேளாண் தொழில் நஷ்டத்தை அடைகிறது. இதனால் முதலுக்கே மோசமாகி கடனாளியாக சிரமப்பட்டு வருகிறார்.

    ஆந்திர மாநிலத்தில் விவசாயி ஒருவர், தனது நிலத்தை உழுவதற்கு மாடும், டிராக்டரும் இல்லாததால் தனது மகனையும், மகளையும் ஏரில் பூட்டி உழுதுள்ளார். கடப்பா மாவட்டம் பெண்டிளிமர்ரி கிராமத்தை சேர்ந்த பண்டி சேகர்ரெட்டி என்பவர்தான் அந்த விவசாயி. இதுதொடர்பான வீடியோ காட்சி வைரலாகி உள்ளது.

    ×