என் மலர்
நீங்கள் தேடியது "இஷாக் தர்"
- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தர் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றார்.
- இருநாட்டு உறவுகள் முன்னேற்றத்தைப் பெருக்குவது தொடர்பாக கலந்தாலோசித்தார்.
டாக்கா:
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது போராட்டம் வெடித்தது. வன்முறையாக மாறியதில் ஷேக் ஹசீனா பதவியை துறந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பொறுப்பு வகித்துள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை மந்திரியுமாக இருக்கும் இஷாக் தர் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றார். டாக்காவில் விமானம் மூலமாக வந்திறங்கிய அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வங்கதேச இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ், முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மற்றும் அந்த நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாட்டு உறவுகள் முன்னேற்றத்தைப் பெருக்குவது தொடர்பாக கலந்தாலோசித்தார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி 13 ஆண்டுக்கு பிறகு வங்கதேசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது, நிதி மந்திரி பதவி வகித்தவர் இஷாக் தர் (வயது 67). இவர் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் சிக்கினார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இவர் மீது தேசிய பொறுப்புடைமை அமைப்பு 4 ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது. இவர் தலைமறைவாக உள்ளார். இவரது வங்கிக்கணக்குகளை முடக்க வேண்டும், சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரி இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் தேசிய பொறுப்புடைமை அமைப்பு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி முகமது பஷீர், அதன் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் இஷாக் தர்ரின் வங்கிக்கணக்குகளை முடக்கவும், அவரது சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கி நீதிபதி முகமது பஷீர் நேற்று தீர்ப்பு அளித்தார். ஏலத்தை நடத்த வேண்டிய பொறுப்பினை பஞ்சாப் மாகாண அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
லாகூர், இஸ்லாமாபாத் நகரங்களில் உள்ள இஷாக் தர்ரின் அசையும் சொத்துக்களையும், அசையா சொத்துக்களையும் தேசிய பொறுப்புடைமை அமைப்பு ஏற்கனவே முடக்கி வைத்துள்ளது நினைவுகூரத்தக்கது. #Pakistan #FormerFinanceMinister #IshaqDar






