என் மலர்
தலைப்புச்செய்திகள்
- முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
- இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.
சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:
நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவு வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை:
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப்பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:
அசைவ உணவு அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு கார்போ ஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டில் இருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும். சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி:
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.
- இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- சென்னையிலும் நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தென்னிந்திய பகுதி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை , நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பெரியாரின் ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பெரியாரின் ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில்,
"தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு!
தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி!
தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!"
என்று தெரிவித்துள்ளார்.
- திருப்பதி ஸ்ரீஏழுமலையானுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்.
- கரூரில் ஸ்ரீஅபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-1 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : ஏகாதசி பின்னிரவு 2.09 மணி வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம் : புனர்பூசம் காலை 9.56 மணி வரை. பிறகு பூசம்.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
மதுராந்தகம் ஏரிகார்த்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்
இன்று சர்வ ஏகாதசி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். மதுரை ஸ்ரீகூடலழகர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீஏழுமலையானுக்கு சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால்அபிஷேகம். நான்காம் நவதிருப்பதி, திருபுளிங்குடி, ஸ்ரீபூமி பாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் திருமஞ்சனம்.
கரூரில் ஸ்ரீஅபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீநம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம், திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகார்த்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-நலம்
மிதுனம்-ஓய்வு
கடகம்-அசதி
சிம்மம்-பரிவு
கன்னி-விருத்தி
துலாம்- புகழ்
விருச்சிகம்-பண்பு
தனுசு- பரிவு
மகரம்-நன்மை
கும்பம்-பயணம்
மீனம்-கடமை
- பிரதமர் மோடி இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்
பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு, உங்கள் 75வது பிறந்தநாளின் மகிழ்ச்சியான தருணத்தில், எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் எப்போதும் செய்து வருவது போல், நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்ய, எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- கனமழையால் சென்னையில் அதிகாலையிலேயே குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
- வரும் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் அனேக இடங்களில் வரும் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக அதிகாலையில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் அதிகாலையில் கனமழை பெய்தது. அண்ணாசாலை, எழும்பூர், சேத்து பட்டு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால சென்னையில் அதிகாலையிலேயே குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
சென்னை மட்டுமில்லாமல் திருப்பத்தூர், தஞ்சை, கும்பகோணம், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.
- "காசா எரிகிறது" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. ராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் காசா முழுவதும் தீவிர வான்வழி மற்றும் பீரங்கிகள் மூலம் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் காசா நகரில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
"காசா பற்றி எரிகிறது" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு தாக்குகிறது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ஹமாஸை தோற்கடிப்பதற்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் போராடுகிறார்கள்" என்று காட்ஸ் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன. முன்னதாக காசா நகரை முழுமையாக கைப்பற்றுவதாக இஸ்ரேல் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- தல போல வருமா உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என கமெர்சியல் ரீதியாக அட்டகாசம் ரசிகர்களை கவர்ந்தது.
- ரேஸிங்கில் அஜித் பிஸியாக இருப்பதால் புதிய படம் உருவாக தாமதமாகும் நிலையில் அட்டகாசம் ரீரிலீஸ் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியான திரைப்படம் அட்டகாசம்.
இந்தப் படத்தை விஜய்ம் சினி கம்பைன்ஸ் தயாரித்திருந்தது. தல போல வருமா உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என கமெர்சியல் ரீதியாக அட்டகாசம் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில், இந்தப் படம் வரும் அக்.31ஆம் தேதி ரீரிலீஸ் ஆக உள்ளதாக அதிர்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐஎஃப்பிஏ மேக்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பாக பிரியா நாயர் படத்தை ரீரிலீஸ் செய்கிறார்.
கடைசியாக அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரலில் திரையில் வெளியானது.
தற்போது கார் ரேஸிங்கில் அஜித் பிஸியாக இருப்பதால் புதிய படம் உருவாக தாமதமாகும் நிலையில் அட்டகாசம் ரீரிலீஸ் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
- இது அந்த கிராமத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் கால் பங்காகும்.
- ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்கள் உள்ள வீடுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென இரட்டிப்பாகியுள்ளது
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் மோசடி குறித்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2026 பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டபோது, மெஹபூபா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் ஒரே முகவரியின் கீழ் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
ஜெய்த்பூர் கிராம பஞ்சாயத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில், வீட்டு எண் 803 இல் 4,271 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது அந்த கிராமத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் கால் பங்காகும். வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று சோதனை செய்தபோது பிழை கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல ஜெய்த்பூருக்கு அருகிலுள்ள பன்வாரி நகரில், 996 ஆம் எண் வீட்டில் 243 பேரும், 997 ஆம் எண் வீட்டில் 185 பேரும் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்கள் உள்ள வீடுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென இரட்டிப்பாகியுள்ளது
இருப்பினும், மாவட்ட உதவித் தேர்தல் அதிகாரி ஆர்.பி. விஸ்வகர்மா, வாக்காளர்களின் பெயர்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும், முகவரிகள் மட்டுமே தவறாக உள்ளிடப்பட்டுள்ளன என்றும், அந்தத் தவறுகள் சரி செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தரவு உள்ளீட்டில் ஏற்பட்ட பிழை மற்றும் கிராம மக்களின் தெளிவற்ற பதிவுகள் இதற்குக் காரணம் என்று விஸ்வகர்மா தெரிவித்தார்.
இருப்பினும், எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் ஒரு உண்மையான ஊதுகுழலாக மாறிவிட்டது
- முன்னதாக ஏபிசி நியூஸ் மற்றும் சிபிஎஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடக நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் இதேபோன்ற பல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.
அமெரிக்க செய்தித்தாள் தி நியூயார்க் டைம்ஸ் மீது 15 பில்லியன் டாலர் (ரூ.1.32 லட்சம் கோடி) இழப்பீடு கேட்டு அவதூறு வழக்குத் தொடரப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார் .
டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், "நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான மற்றும் ஊழல் நிறைந்த செய்தித்தாள்களில் ஒன்றான தி நியூயார்க் டைம்ஸ் மீது நான் 15 பில்லியன் டாலர் அவதூறு வழக்கைத் தாக்கல் செய்கிறேன். அது தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் ஒரு உண்மையான ஊதுகுழலாக மாறிவிட்டது" என்று தெரிவித்தார்.
"நியூயார்க் டைம்ஸ் நீண்ட காலமாக என்னைப் பொய் சொல்லி அவதூறு செய்ய முடிந்தது. இது மீண்டும் நடக்காது. புளோரிடாவில் வழக்குத் தொடரப்படுகிறது" என்று அவர் கூறினார்.
முன்னதாக ஏபிசி நியூஸ் மற்றும் சிபிஎஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடக நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் இதேபோன்ற பல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிறுவனங்கள் பின்னர் டிரம்புடன் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு கண்டன. வரவிருக்கும் டிரம்ப் நூலகத்திற்கு $15 மில்லியன் நன்கொடையாக வழங்குவதற்க ஏபிசி முன்வந்ததால் அதற்கு ஈடாக தனது வழக்கை டிரம்ப் கைவிட்டார்.
- காதலனை மரத்தில் கட்டி வைத்து, கும்பலில் இருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- பாடுவதற்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி புவனேஸ்வரில் உள்ள ஒரு லாட்ஜூக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர் மூன்று ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
ஒடிசாவில் 19 வயது தலித் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
பூரி மாவட்டத்தில் கடற்கரை அருகே அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமாக விளங்கும் பாலிஹர்சந்தி கோயில் அருகே கடந்த சனிக்கிழமை மதியம் இந்த சம்பவம் நடந்தது.
மாணவி தனது காதலனுடன் கோவிலுக்கு அருகில் அமர்ந்திருந்தபோது, இளைஞர்கள் கும்பல் அவர்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து அவற்றை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டுள்ளது.
பணம் கொடுக்க மறுத்ததால், காதலனை மரத்தில் கட்டி வைத்து, கும்பலில் இருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதன்பின் கும்பல் அங்கிருந்து தப்பியது. இதுதொடர்பாக மாணவி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்காவது குற்றவாளியை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.
இதேபோல், கடந்த வாரம் புதன்கிழமை, பாடுவதற்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி புவனேஸ்வரில் உள்ள ஒரு லாட்ஜூக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர் மூன்று ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்காக ஆளும் பாஜக அரசை பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
- உக்ரைன் போரை ஆதரிக்கும் இந்தியாவுக்கு இந்த வரிவிதிப்பு அபராதம் என டிரம்ப் கூறினார்.
- இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த பிறகு இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பது இதுவே முதல் முறை.
இந்திய பொருட்களுக்கு கடந்த மாதம் 50 சதவீத வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது இரு நாட்டு உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியது.
ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஆதரிக்கும் இந்தியாவுக்கு இந்த வரிவிதிப்பு அபராதம் என டிரம்ப் கூறினார்.
இந்நிலையில் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த நேற்று (செவ்வாய்க்கிழமை) பிராடன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்க குழு டெல்லி விரைந்து இந்திய குழுவுடன் பேச்சுவராத்தை நடத்தியது.
இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த பிறகு இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பது இதுவே முதல் முறை.
"இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிராடன் லிஞ்ச் மற்றும் வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் இடையே நடந்த விவாதங்கள் ஒரு நல்ல அறிகுறியாகும்" என்று அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இருப்பினும், இருதரப்பு ஒப்பந்தம் குறித்த ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை தற்போது நடைபெறவில்லை, மாறாக ஆரம்பகட்ட விவாதங்கள் மட்டுமே நடந்தன என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.






