என் மலர்tooltip icon

    இந்தியா

    நல்ல அறிகுறி.. 50 % வரிக்கு தீர்வு காண அமெரிக்க - இந்திய பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தை
    X

    நல்ல அறிகுறி.. 50 % வரிக்கு தீர்வு காண அமெரிக்க - இந்திய பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தை

    • உக்ரைன் போரை ஆதரிக்கும் இந்தியாவுக்கு இந்த வரிவிதிப்பு அபராதம் என டிரம்ப் கூறினார்.
    • இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த பிறகு இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பது இதுவே முதல் முறை.

    இந்திய பொருட்களுக்கு கடந்த மாதம் 50 சதவீத வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது இரு நாட்டு உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியது.

    ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஆதரிக்கும் இந்தியாவுக்கு இந்த வரிவிதிப்பு அபராதம் என டிரம்ப் கூறினார்.

    இந்நிலையில் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த நேற்று (செவ்வாய்க்கிழமை) பிராடன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்க குழு டெல்லி விரைந்து இந்திய குழுவுடன் பேச்சுவராத்தை நடத்தியது.

    இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த பிறகு இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பது இதுவே முதல் முறை.

    "இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிராடன் லிஞ்ச் மற்றும் வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் இடையே நடந்த விவாதங்கள் ஒரு நல்ல அறிகுறியாகும்" என்று அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

    இருப்பினும், இருதரப்பு ஒப்பந்தம் குறித்த ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை தற்போது நடைபெறவில்லை, மாறாக ஆரம்பகட்ட விவாதங்கள் மட்டுமே நடந்தன என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×