என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க.
    • பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யாக கமல்ஹாசன், துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்," தமிழ்நாடு துணை முதல்வர், எப்போதும் இனியவர், என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க.

    பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க" என்று குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி கமல்ஹாசன் இன்று மாலை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இததுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படங்களுடன் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    • விண்ணப்பங்களை BLO-க்களால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம்.
    • தமிழகத்தில் 70.70% விண்ணப்பங்கள் BLO-க்களால் இணையத்தில் பதிவேற்றம்.

    தமிழகத்தில் 6.24 கோடி வாக்காளர்களுக்கு 97.43% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    வாக்காளர்களிடம் பெறப்பட்ட 4.53 கோடி (70.70%) விண்ணப்பங்களை BLO-க்களால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 70.70% விண்ணப்பங்கள் BLO-க்களால் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    • ஈழ போரில் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூரும் வகையில் பதிவு.
    • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஈழ போரில் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூரும் வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில்," தீரத்துடன் களமாடிய மாவீரர்களை வணங்குவோம், தியாக தீபங்களின் நினைவைப் போற்றுவோம் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.

    • அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
    • தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்ப வேண்டும்.

    வடகிழக்கு பருவமழை குறித்து சென்னையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    அப்போது அவர்," தமிழ்நாட்டில் வரும் 29ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் சில மாவட்டங்களில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

    தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்ப வேண்டும்.

    மீட்பு மற்றும் நிவாரண மையங்களை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்" என கூறினார்.

    • ECR-OMR இடையே எங்கும் இணைப்புச் சாலைகள் இல்லை என்பதால் புதிய பாலம் கட்ட முடிவு.
    • போக்குவரத்து நெரிசல் குறைவதோடு பயண நேரமும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ECR மற்றும் OMR-ஐ இணைக்கும் வகையில் இரும்பு மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ரூ.204 கோடியில் உயர்மட்ட இரும்பு மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியது

    ECR-OMR இடையே எங்கும் இணைப்புச் சாலைகள் இல்லை என்பதால் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து நெரிசல் குறைவதோடு பயண நேரமும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வருமனத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
    • ரூ.1.2 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

    சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுதலை செய்து சிவகங்கை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை பெரிய கருப்பன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது வருமனத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

    அதில், ரூ.1.2 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் பெரியகருப்பனை சிவகங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

    • தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர்.
    • மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) நியமிக்கப்படுகிறார்.

    தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர். தாம் சார்ந்திருந்த கழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்; அனைவரிடத்திலும் எளிமையோடும் அன்போடும் பண்போடும் பழகி, நன்மதிப்பைப் பெற்றவர். மூத்த அரசியல் தலைவர், முன்னாள் அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    அண்ணன் செங்கோட்டையன் அவர்கள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட, எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி, கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார்.

    மேலும் கூடுதலாக, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும் கழகப் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களோடும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை, மேற்கண்ட இம்மாவட்டங்களில் மேற்கொள்வார்.

    மேலும், அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி சத்தியபாமா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் திரு. வெங்கடாசலம், திரு. முத்துக்கிருஷ்ணன் மற்றும் பிற புதிய உறுப்பினர்களையும் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    கழகத் தோழர்களும் நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளார்.

    • மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு, வடமேற்கு நோக்கி டிட்வா புயல் நகரும்.
    • புயலின் காரணமாக மழையின் அளவு இயல்பைவிட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

    தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா கூறியதாவது:-

    சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு, வடமேற்கு நோக்கி டிட்வா புயல் நகரும்.

    வரும் 27, 28-ல் கடலோர தமிழகம், புதுவை, காரைக்காலில் அதிகபட்சமாக மணிக்கு 40-50 கி.மீ.வரை தரைக்காற்று வீசும்.

    புயலின் காரணமாக மழையின் அளவு இயல்பைவிட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

    இப்போதைக்கு புயலாக இருந்தாலும் நகர்வை பொருத்துதான் மழை எங்கு, எவ்வளவு பெய்யும் என்பது தெரியும்.

    இருப்பினும், நாளை மறுநாள் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.

    திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.
    • விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார்.

    அ.தி.மு.க.-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைவதாக கூறப்பட்டது. செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் இணைவதாக நேற்று முதல் தகவல் வெளியாகி வந்தது.

    இந்த நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பேருந்தில் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.

    தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசானா, புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பனையூர் அலுவலகம் வந்தார். இதற்கிடையே, செங்கோட்டையனும் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை புஸ்சி ஆனந்த் வரவேற்று அழைத்து சென்றார்.

    இதனை தொடர்ந்து, த.வெ.க. அலுவலகத்திற்கு தலைவர் விஜய், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதர் அர்ஜூனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர்.

    இதன்பின் நடைபெற்ற இணைப்பு விழாவில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் இணைந்தனர்.

    இந்நிலையில், த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, எம்ஜிஆர் நினைவிடத்திற்கும், ஜெயலலிதா நினைவிடத்திற்கும் சென்ற செங்கோட்டையன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அப்போது, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சத்தியபாமா ஆகியோரும் உடன் மரியாதை செலுத்தினர்.

    • கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    கரூர்:

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் நடைபெற்றபோது அங்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தனர். இதில் இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கூட்ட நெரிசல் சம்பந்தமாக தொடர்பாக ஏற்கனவே விசாரணைக்காக சி.பி.ஐ. தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டவர்களில் உயிரிழந்தவர்களின் 9 குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் இன்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜர் ஆனார்கள்.

    அவர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி விசாரணை நடத்தி வரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகைக்கு வந்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. இதனயடுத்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • மனமுடைந்த சந்தனகுமார் கடந்த 24-ந் தேதி எலி பேஸ்டை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார்.
    • சம்பவம் குறித்து எருமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம், நவ.27-

    சேலம் எருமாபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் சந்தானகுமார் (38). இவருக்கு சரியான வேலை கிடைக்காத நிலையில் போதுமான வருமானமும் இன்றி தவித்து வந்தார். இதனால் பண பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணமும் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த சந்தனகுமார் கடந்த 24-ந் தேதி எலி பேஸ்டை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சந்தானகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். சம்பவம் குறித்து எருமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    தூத்துக்குடி:

    வங்கக்கடல் பகுதியில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வங்கக்கடலில் இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டு வருகிறது.

    இலங்கை கடல் பகுதியில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது,

    இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிம், ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்து அறிவித்துள்ளது

    இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 4-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத காரணத்தால் மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    ×