என் மலர்tooltip icon

    இந்தியா

    • இந்தியா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.
    • பயங்கரவாதத்தின் கொடூரமான முகத்தை இது காட்டுவதாகவும் இந்தியா கருத்து.

    பாகிஸ்தான் - இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை புறக்கணித்தும் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    பயங்கரவாத பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், இத்தாக்குதலுக்கு இந்தியா மீது பழிபோடுவது துரதிர்ஷ்டவசமானது என்றும், அந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் பதிலடி கெடுத்துள்ளது.

    மேலும், தாக்குதலில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்குத் இரங்கல் தெரிவிப்பதாகவும், பயங்கரவாதத்தின் கொடூரமான முகத்தை இது காட்டுவதாகவும் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

    • உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் விசாரணை நடத்தவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
    • சபரிமலையில் இருந்து கொண்டு சென்ற தங்க கவசங்களை வைத்து வழிபாடு செய்யததாகவும் புகார் எழுந்தது.

    சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், உன்னிகிருஷ்ணன் போற்றி, தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு உள்பட 12 பேரை சிறப்பு விசாரணை குழுவினர் அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து கொச்சி அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முராரி பாபுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு மலையாள பிரபல நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் விசாரணை நடத்தவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர் சமீபத்தில் ஜாமின் பெற்று திருவனந்தபுரம் சிறையில் இருந்து வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

    உன்னிகிருஷ்ணன் போற்றி மீது துவார பாலகர் சிலைகள் மற்றும் சபரிமலை சன்னதி படிகளில் இருந்து தங்கத்தை பிரித்து எடுத்து கொள்ளையடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அத்துடன் கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான கோவர்தன் மற்றும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகியோருடன் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

    மேலும் உன்னிகிருஷ்ணன் போற்றி, சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் பூஜைகளை செய்ததாகவும், அங்கு சபரிமலையில் இருந்து கொண்டு சென்ற தங்க கவசங்களை வைத்து வழிபாடு செய்யததாகவும் புகார் எழுந்தது.

    இந்த சம்பவத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஏற்கனவே நடிகர் ஜெயராம் தெரிவித்து இருந்தார். சமீபத்தில் அவரிடம் சென்னையில் உள்ள வீட்டில் வைத்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி இருந்தனர். தற்போது விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இதன் மூலம் வருகிற நாட்களில் நடிகர் ஜெயராம் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளதாக தெரிகிறது.

    • பப்பு யாதவ் வீட்டுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
    • விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்றனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் பூர்ணியா தொகுதியைச் சேர்ந்தவர் சுயேட்சை எம்.பி. பப்பு யாதவ்.

    இந்நிலையில், பாட்னாவில் உள்ள பப்பு யாதவ் வீட்டுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். அவரை பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்ற போலீசார், அதன்பின் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், 1995-ம் ஆண்டு நடந்த பழைய குற்ற சம்பவம் தொடர்பாக பப்பு யாதவை கைது செய்துள்ளோம். விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. ஆகவே அவரை கைது செய்தோம் என தெரிவித்தனர்.

    சுயேட்சை எம்பி பப்பு யாதவை நள்ளிரவில் போலீசார் கைது செய்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தெலுங்கானாவை சேர்ந்த பிரபாகரின் தலைக்கு ரூ.25 லட்சம் விலை வைப்பட்டிருந்தது.
    • இந்தத் தாக்குதலின் போது பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.

    மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூத்த நக்சல் தலைவர் பிரபாகர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதற்குப் பதிலடி கொடுத்த கமாண்டோக்கள் நடத்திய தாக்குதலில் 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்டவர்களில் நக்சலைட் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான பிரபாகர் என்பவரும் அடங்குவார். தெலுங்கானாவை சேர்ந்த பிரபாகரின் தலைக்கு ரூ.25 லட்சம் விலை வைப்பட்டிருந்தது.

    கொல்லப்பட்டவர்களிடம் இருந்து ஏகே-47 ரகத் துப்பாக்கிகள் உள்ளிட்ட  ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்தத் தாக்குதலின் போது பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • ஆறாவது 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை பட்டம், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தைப் பறைசாற்றும் ஒரு பெருமிதமான அடையாளம்.
    • இந்திய அணியில் தமிழ்நாடு வீரர்கள் ஆர்.எஸ். அம்ப்ரீஷ் , தீபேஷ் தேவேந்திரன் இடம் பெற்றுள்ளனர்

    U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இதன்மூலம் ஆறாவது முறையாக U19 உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியுள்ளது.

    இந்திய அணியின் இந்த வெற்றிக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

    ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

    "அபாரமான உலகக் கோப்பை வெற்றியைப் பெற்றுள்ள நமது 19 வயதுக்குட்பட்டோர் ஆடவர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!உங்களுடைய நிதானம், அச்சமின்மை மற்றும் உறுதிப்பாடு ஆகியவையே இன்றைய இந்தியாவின் ஜென்-இசட் (Gen Z) தலைமுறையை வரையறுக்கிறது. இந்த ஆறாவது 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை பட்டம், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தைப் பறைசாற்றும் ஒரு பெருமிதமான அடையாளம். சிறப்பாக விளையாடினீர்கள், சாம்பியன்களே!" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், 

    "ஐசிசி ஆடவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று, நாட்டிற்கு மற்றொரு பெருமைமிக்க தருணத்தை வழங்கிய நமது இந்திய அணிக்கு வாழ்த்துகள். இது திறமை மற்றும் மனவுறுதியின் உண்மையான வெற்றி. இறுதிப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் பிரமிக்க வைக்கும் ஆட்டமும், இந்தத் தொடர் முழுவதும் அவரது அசாதாரணமான செயல்பாடும் வரும் ஆண்டுகளில் பலராலும் நினைவு கூரப்படும். இந்த இளம் வீரர்கள் எதிர்காலத்தில் இந்திய தேசிய அணிக்காக விளையாடும்போது, இப்போது காட்டும் அதே திறமையுடன் நாட்டுக்காகப் பல வெற்றிகளைப் பெற்றுத் தர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த யு19 உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழ்நாடு வீரர்கள் ஆர்.எஸ். அம்ப்ரீஷ் , தீபேஷ் தேவேந்திரன் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


    • இது 1.5 டன் எடையுள்ள அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • அக்னி-1 ஏவுகணை 700 கிமீ வரையும், அக்னி-2 ஏவுகணை 2,000 கிமீ வரையும் பாய்ந்து தாக்கக் கூடியது

    அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட தரை விட்டு தரை பாயும் அக்னி-3 பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.

    ஒடிசா கடற்கரையில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் உள்ள சந்திப்பூர் ஏவுதளத்திலிருந்து இன்று (பிப்ரவரி 6) இந்த சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் ராணுவம் இணைந்து இந்த சோதனையை நடத்தியது.

    ஏவுகணையின் அனைத்து தொழில்நுட்பக் கூறுகளும் வெற்றிகரமாக செயல்பட்டன எனவும் ஏவுகணை அதன் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அக்னி-3 ஏவுகணை சுமார் 3,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. இது 1.5 டன் எடையுள்ள அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த ஏவுகணையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    அக்னி-3 ஏவுகணையின் முந்தைய பதிப்புகளான, அக்னி-1 ஏவுகணை 700 கிமீ வரையும், அக்னி-2 ஏவுகணை 2,000 கிமீ வரையும் பாய்ந்து தாக்கக் கூடியது குறிப்பிடத்தக்கது. 

    • காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் இந்திய நிலங்கள் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டன.
    • அதற்குப் பதிலாக ராஜிவ் காந்தி பவுண்டேசன் பணத்தை பெற்றது.

    பாஜக எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான அனுராக் தாகூர், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்திய பகுதிகள் சீனாவிடம் இழக்கப்பட்டன. மோடி அரசுக்கு தேசிய பாதுகாப்பில் ராகுல் காந்தி பாடம் கற்பிக்க தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    ராகுல் காந்தியின் டோக்லாம் மோதல் மற்றும் இந்தியா- சீனா கொள்கை குறித்து மக்களவையில் குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு அனுராக் பதில்அளிக்கையில் கூறியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் இந்திய நிலங்கள் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டன. அதற்குப் பதிலாக ராஜிவ் காந்தி பவுண்டேசன் பணத்தை பெற்றது. சீனாவிடம் நிலத்தை இழந்தபோது ஆட்சியில் இருந்த அதே மக்கள் தற்போது எங்களிடம் கேள்வி கேட்கிறார்களா?. இந்திய அரசியலில் இதைவிடப் பெரிய துரதிர்ஷ்டம் வேறு என்ன இருக்க முடியும்?

    60 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த கட்சியும் அதன் குடும்பமும் அதிகாரத்தின் பலன்களை அனுபவித்தபோதிலும், அதன் அரசாங்கங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நிலத்தை சீனாவிடம் இழந்தன.

    பாகிஸ்தானிடமிருந்து நமது உரிமைகளை மீட்டெடுக்க முடியாதவர்கள், இப்போது பொய்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தைக் கேள்வி கேட்கிறார்கள். ராகுல் காந்தியிடமிருந்து எங்களுக்குத் தேசியப் பாதுகாப்பு குறித்த பாடங்கள் தேவையில்லை" என்றார்.

    • பள்ளத்தில் விழுந்த அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
    • 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    டெல்லியின் ஜனக்புரி பகுதியில், சாலையில் மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் விழுந்து 25 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    உயிரிழந்த இளைஞர் யுவராஜ் சிங் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஜனக்புரி மேம்பாலத்திற்கு அடியில் சென்றுகொண்டிருந்தார்.

    அந்தப் பகுதியில் டெல்லி பொதுப்பணித் துறையின் தண்ணீர் சப்ளை அமைப்பான ஜல் போர்டு கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன.

    இதற்காகத் தோண்டப்பட்ட பெரிய பள்ளம் முறையான எச்சரிக்கை பலகைகள் இன்றி மூடப்படாமல் இருந்துள்ளது.

    இரவு நேரத்தில் இருட்டில் இந்தப் பள்ளத்தைக் கவனிக்காத யுவராஜ் சிங், தனது பைக்கோடு பள்ளத்தில் விழுந்தார்.

    பள்ளத்தில் விழுந்த அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    கட்டுமானப் பணியின் போது பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அல்லது எச்சரிக்கை விளக்குகள் வைக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதற்கிடையே ஜல் போர்டை சேர்ந்த நிர்வாகப் பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகிய 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    முன்னதாக நொய்டாவில் சாலையில் உள்ள பள்ளத்தில் பொறியாளர் ஒருவர் விழுந்து உயிரிழந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

    • சித்தராமையா தலைமைத்துவம் மாற்றப்படலாம் என கர்நாடக காங்கிரசில் பேசப்பட்டு வருகிறது.
    • ஆனால் காங்கிரஸ் உயர் தலைமை இதுவரை வெளிப்படையாக ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.

    முதலமைச்சர் மாற்றம் குறித்த விவகாரத்தில், மாற்றத்திற்கான கோரிக்கைகளை உயர் தலைமை ஏற்கவில்லை. மாற்றம் கிடையாது என தெளிவான சிக்னல் கொடுத்துவிட்டதாக, சித்தராமையா மகனும், கர்நாடக மாநில மேலவை எம்.எல்.ஏ-வுமான யதீந்திரா சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சித்தராமையா மகன் யதீந்திரா கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரையில், உயர் தலைமை இது தொடர்பாக வெளிப்படையாக சொல்லியிருக்காது. ஆனால், எந்தவொரு தலைமைத்துவம் மாற்றமும் இருக்காது என தெளிவான சிக்னல் கொடுத்துள்ளது. ஆகவே, சித்தராமையா ஐந்து வருடம் முதல்வராக பணியாற்றுவார் என நம்புகிறேன். இது தீர்க்கப்பட்ட விசயம். இப்போது அப்படித்தான் தெரிகிறது. சித்தராமையாவை நீக்க வேண்டும் என்றோ அல்லது நீக்கப்படுவார் என்றோ யாரும் கூறவில்லை.

    இவ்வாறு யதீந்திரா சித்தராமையா தெரிவித்தார்.

    முன்னதாக,

    கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா முதல்வராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோது சித்தரமையா இரண்டரை ஆண்டுகள், டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பார்கள் என பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது. இதனால் டி.கே. சிவக்குமார் புதிய முதல்வராக பதவி ஏற்பார். கர்நாடக மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

    ஆனால், 5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன் என சித்தராமையா தொடர்ந்து பேசி வருகிறார்.

    • எந்தவொரு பெண்ணையும் தனது விருப்பத்திற்கு மாறாக கர்ப்பத்தைத் தொடர கட்டாயப்படுத்த முடியாது
    • இந்தியச் சட்டப்படி பொதுவாக 24 வாரங்கள் வரை மட்டுமே கருக்கலைப்புக்கு அனுமதி உண்டு

    18 வயது பெண்ணின் 30 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக மும்பை உயர் நீதிமன்றம்  இந்தக் கருக்கலைப்புக்கு அனுமதி மறுத்து, குழந்தையை வளர்க்க விரும்பவில்லை என்றால் தத்துக் கொடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் கருக்கலைப்பிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

    கருவை கலைப்பது பெண்ணின் ஆரோக்கியத்திற்கு எந்தப் பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று கூறிய மருத்துவக் குழுவின் அறிக்கையை மதிப்பாய்வு செய்தபிறகு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 17 வயதில் கருத்தரித்து தற்போது 18 வருடம் மற்றும் நான்கு மாத வயதாகிறது அப்பெண்ணுக்கு. தனது பக்கத்து வீட்டுச் சிறுவனுடன் இருந்த உறவினால் கர்ப்பமடைந்துள்ளார். 

    கருக்கலைப்பு சட்டத்தில் உள்ள காலக்கெடுவைவிட, சிறுமியின் மனநலன் மற்றும் அவரது விருப்பத்திற்கே முன்னுரிமை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அப்பெண்ணிற்கு விருப்பமில்லை என்றால், கர்ப்பத்தை தொடர கட்டாயப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

    எந்தவொரு பெண்ணையும், குறிப்பாக மைனர் சிறுமியை, அவரது விருப்பத்திற்கு மாறாக கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு தெரிவித்தது. பெண்ணின் இனப்பெருக்க சுயாட்சி மற்றும் உடல் மீதான உரிமை மிக முக்கியமானது. பாதுகாப்பான மருத்துவக் கருக்கலைப்புக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்தால், அது போன்ற சூழலில் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்படாத மற்றும் பாதுகாப்பற்ற இடங்களை நாடும் அபாயம் உள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

    மும்பையிலுள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அனைத்து மருத்துவப் பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி இந்தக் கருக்கலைப்பை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியச் சட்டப்படி பொதுவாக 24 வாரங்கள் வரை மட்டுமே கருக்கலைப்புக்கு அனுமதி உண்டு. அதற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் கருவை கலைக்க நீதிமன்றத்தின் சிறப்பு அனுமதி கட்டாயமாகும்.

    • விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் போன்றவை கலந்திருந்தது ஏற்கனவே தெரிந்தது.
    • புனிதமான திருப்பதி லட்டுவின் தரத்தைச் சீரழித்து, கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை முந்தைய அரசு புண்படுத்திவிட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யின் தரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.

    கர்னூல் மாவட்டம் களுகோட்லாவில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய சந்திரபாபு நாயுடு, முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சிக் காலத்தில், திருப்பதி லட்டு தயாரிப்பதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட நெய், பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படும் ரசாயனங்களை கொண்டு தயாரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    நெய் மாதிரிகளைப் பரிசோதனை செய்தபோது, அதில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் போன்றவை கலந்திருந்தது ஏற்கனவே தெரிந்த நிலையில், இப்போது ரசாயனக் கலப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    புனிதமான திருப்பதி லட்டுவின் தரத்தைச் சீரழித்து, கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை முந்தைய அரசு புண்படுத்திவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

    இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கத் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

    முன்னதாக நேற்று இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை சந்திரபாபு நாயுடு அமைத்தது குறிப்பிடத்தக்கது. 

    • அவர் விழித்துக்கொண்டு சத்தம் போடக்கூடும் என்று திருடர்கள் அஞ்சினர்.
    • பெண் ஒருவர் கொல்லப்பட்டு அவரது கால்களை வெட்டி, வெள்ளி கால் கொலுசுகள் திருடப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ராஜஸ்தானில் 90 வயது மூதாட்டியைப் படுக்கையோடு தூக்கிச் சென்று மர்ம நபர்கள் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டின் வராந்தாவில் கட்டிலில் 90 வயதான அந்த மூதாட்டி நேற்று உறங்கிக் கொண்டிருந்தார்.

    கடந்த புதன்கிழமை நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள், மூதாட்டி அணிந்திருந்த கனமான வெள்ளி நகைகளைக் கழற்ற முயன்றனர்.

    ஆனால், அவர் விழித்துக்கொண்டு சத்தம் போடக்கூடும் என்று அஞ்சிய திருடர்கள், அவரை அவர் படுத்திருந்த கட்டிலோடு அப்படியே தூக்கிக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு வயல்வெளிக்குச் சென்றனர்.

    ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்றதும், மூதாட்டி அணிந்திருந்த வெள்ளி மற்றும் பிற நகை நகைகளை திருடர்கள் பிடுங்கிச் சென்றனர்.

    மறுநாள் காலையில், மூதாட்டி கைகள் கட்டப்பட்ட நிலையில் வயல்வெளியில் கட்டிலுடன் மிகுந்த அச்சத்தில் இருந்த மூதாட்டியை கண்ட கிராம மக்கள் அவரை மீட்டனர்.

    இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    முன்னதாக ராஜஸ்தானின் சாவாய் மாதோபூர் நகரில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு அவரது கால்களை வெட்டி, வெள்ளி கால் கொலுசுகள் திருடப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.  

    ×