என் மலர்
திண்டுக்கல்
- மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பல்வேறு அரிய வகை விலங்குகள், பறவைகள் ஆகியவை வசித்து வருகின்றன.
- கால்களில் குறியீடு பொறிக்கப்பட்ட வளையத்துடன் வலசை வரும், குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பல்வேறு அரிய வகை விலங்குகள், பறவைகள் ஆகியவை வசித்து வருகின்றன. உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவை இனங்களும் வலசையாக இடம்பெயர்ந்து இங்குள்ள வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆண்டுதோறும் கோடை காலம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக, விதவிதமான குருவிகள், வண்ணப் பறவைகள் ஆகியவை வலசை வரும். அதிலும் குறிப்பாக கால்களில் குறியீடு பொறிக்கப்பட்ட வளையத்துடன் வலசை வரும், குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தக்குருவிகள், குஞ்சுகளாக இருக்கும் பொழுதே, பறவை ஆய்வாளர்களால், குறியீடுகள் பொறிக்கப்பட்ட வளையத்தை கால்களில் அணிவித்து, பறக்க விட்டு விடுவதாகவும், இயற்கையில் அவைகள் வலசை வரும் இடங்களை, அதன் வாழும் காலத்திற்குப் பின்னர் இக்குறியீடுகளைக் கொண்டு அவற்றின் வலசை பாதைகளை அறிந்து கொள்ள உதவுவதாகவும், பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கொடைக்கானலில் தற்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு மற்றும் ரம்யமான குளிர் நிலவுவதால் பல்வேறு இடங்களில் பறவைகளின் ரீங்கார சத்தங்களும் கேட்டு வருகிறது. இவை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
- பல்வேறு மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
- போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து பணம் மற்றும் நகையை மீட்டனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அருகே உள்ள அண்ணாநகரில் கடந்த மாதம் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்கநகை, ரூ.70 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வீட்டிற்கு அருகே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் குற்றவாளியை தேடியபோது இதில் தொடர்புடையவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள தளவாய்புரம் வன்னியன்காடு பகுதியை சேர்ந்த முத்து மகன் பிரபாகரன் (வயது 42) என தெரியவந்தது. இவர் மீது சென்னை, திருச்சி. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து திருச்செந்தூர் சென்ற தனிப்படை போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து பணம் மற்றும் நகையை மீட்டனர். பின்னர் அவரை ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபர் பல வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரூ.2.70 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்பனை.
- அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி.
பழனி:
பழனியில் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழா கடந்த 5-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி, வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தந்த சப்பரம், தோலுக்கிணியாள் போன்ற வாகனங்களில் ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கடந்த திங்கள்கிழமை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டமும், செவ்வாய்கிழமை மாலை தைப்பூச தேரோட்டமும் நடைபெற்றது. தேரோட்டம் நிறைவடைந்த நிலையிலும் பழனி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நகரத்தார் காவடி குழுவினர் பழனி மலைக்கோவிலுக்கு சென்று தங்கள் காவடிகளை செலுத்தி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நேற்று இரவு 9ம் நாள் நிகழ்ச்சியாக துறையூர் மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாராசாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.
10ம் நாள் நிகழ்ச்சியாக இன்று தெப்ப தேேராட்டத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. பெரியநாயகி அம்மன் கோவில் அருகில் உள்ள தெப்பத்தில் இன்று இரவு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
அதன் பின்பு இரவு கொடியிறக்கம் நடத்தப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 3 நாட்களில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்தனர். தேவஸ்தானம் சார்பில் விற்பனை செய்யப்பட்ட அபிஷேக பஞ்சாமிர்தத்தை அதிக அளவில் பக்தர்கள் வாங்கிச் சென்றனர்.
3 நாட்களில் மட்டும் 4 லட்சத்தி 26 ஆயிராயிரத்தி 858 பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனையாகி உள்ளது. இதன் மூலம் ரூ.2 கோடியே 70 லட்சத்தி 13 ஆயிரத்தி 890 வருவாய் கிடைத்துள்ளது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி நகரில் இலவச பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு சிறப்பு பஸ்களும், பழனியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விழாக்கால பஸ்களும் இயக்கப்பட்டன. இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.40 லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது.
- விஜய் யாரை சந்தித்தாலும் எங்களுக்கு கவலையில்லை.
- அ.தி.மு.க.வில் நடைபெறுவது உட்கட்சி பிரச்சினை நாங்கள் தலையிட முடியாது.
பழனி:
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும். போலீசார் தங்கள் கடமையை முறையாக செய்ய வேண்டும் என்பதற்காக செருப்பு அணிய மாட்டோம் என ஒரு வேள்வி தொடங்கினோம். அதன் 48 நாட்கள் இன்று நிறைவடைந்ததால் பழனியில் வந்து சாமி தரிசனம் செய்தேன்.
அடுத்த மண்டலத்துக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட உள்ளேன். தைப்பூச நாளில் மக்கள் மிகுந்த எழுச்சியோடு அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.
ஆனால் கோவில்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு அறநிலையத்துறை பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர மறுத்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் அங்கிருந்து தைப்பூச திருவிழாவுக்கு வாழ்த்து தெரிவித்ததன் மூலம் அவரது மதிப்பு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறேன். கடந்த ஆண்டு அமைச்சர் காந்தியை சுட்டிக் காட்டினேன். இதேபோல் அமைச்சர் பெரியகருப்பன் கொடுத்த அறிக்கைக்கு நாங்கள் பதில் அளித்துக் கொண்டு வருகிறோம்.
சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டனர் என்றும், மத்திய அரசு வஞ்சித்து வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது பச்சைப்பொய்.
தமிழகத்தில் கல்விக்கடன், விவசாயக்கடன் ரத்து, தியாகிகள் செவிலியர்களுக்கு நிரந்தர வேலை என எதுவும் செய்யாமல் மக்களுக்கு முதலமைச்சர்தான் அல்வா கொடுத்து வருகிறார்.
அல்வா கடையை ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் முதல்-அமைச்சர் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே மக்களுக்கு தி.மு.க. அரசு அல்வா கொடுத்து வருகிறது.
விஜய் அரசியல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட யாரை சந்தித்தாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் மக்களை சந்தித்து வருகிறோம். ஏ.சி. அறையில் அரசியல் வல்லுனர்களுடன் கருத்துகளை கேட்டுக் கொண்டு செயல்பட்டால் வெற்றிபெற முடியாது. என் மண் என் மக்கள் என்பதைப் போன்ற யாத்திரையை நடத்தி மக்களை சந்திக்க வேண்டும்.
அ.தி.மு.க.வில் நடைபெறுவது உட்கட்சி பிரச்சினை என்பதால் அதில் நாங்கள் தலையிட முடியாது. அரசியலில் 18 வயதுக்கு குறைவாக உள்ளவர்களை சட்டப்படி பயன்படுத்தக்கூடாது. ஆனால் த.வெ.க.வில் சிறார் அணி அமைத்துள்ளதால் அதில் யாரை நியமிப்பார்கள் என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தைப்பூசத்திருவிழா தேரோட்டம் மாலை நடைபெறுகிறது.
- பக்தர்கள் குவிந்ததால் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பழனி:
பழனியில் இன்று தைப்பூசத்திருவிழா தேரோட்டம் மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கடந்த 3 நாட்களாக அதிக அளவில் வந்தவண்ணம் உள்ளனர்.
எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் 3 நாட்களுக்கு இலவச தரிசனம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பழனி நகரில் 3 நாட்களுக்கு இலவச பஸ் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு திண்டுக்கல்-கோவை, பழனி-மதுரை இடையே சிறப்பு ரெயில் சேவையும் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் பாதயாத்திரை பக்தர்கள் மட்டுமின்றி அரசு, தனியார் பஸ்கள் மூலமாகவும், சொந்த வாகனங்கள் மூலமாகவும், ரெயில்கள் மூலமாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.
இன்று மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் பழனியில் திரண்டதால் நகரமே திக்குமுக்காடியது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் வெயிலில் காத்துக்கிடந்தனர்.
இதனால் கைக்குழந்தைகள் உள்பட பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்து மருத்துவ முகாம் நடைபெறும் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். கூட்டத்தில் சிக்கியவர்களை ஒழுங்குபடுத்துவதிலும், தாமதம் ஏற்பட்டது.
பக்தர்களை கயிறு கட்டி ஒவ்வொரு இடமாக நிறுத்தி தரிசனத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பலர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் இங்கு கிடைக்கும் முக்கிய பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்வது வழக்கம். அவர்களுக்காக ரூ.20, ரூ.35, ரூ.45 ஆகிய 3 விலைகளில் பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பலருக்கு பஞ்சாமிர்தம் கிடைக்கவில்லை. இதனால் மலைக்கோவில் தேவஸ்தானம், பிரசாத ஸ்டால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறதா? என பக்தர்கள் தேடி அலையும் நிலை ஏற்பட்டது.
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து நேற்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், மாவட்ட எஸ்.பி.யுடன் ஆய்வு செய்த நிலையில் இன்று தென்மண்டல ஐ.ஜி. பிரேம் தலைமையிலான குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.
கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் திணறும் நிலையே ஏற்பட்டது.
பழனியில் தைப்பூசத் திருவிழாவுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாருக்கு சொந்தமான இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இங்கு கியாஸ் சிலிண்டரில் தீ பற்றியதில் தீ மளமளவென பரவி அருகில் இருந்த ஓட்டல் கடைகளுக்கும் பரவியது.
தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் கணேசன் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்று தீயை போராடி அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த இடத்தில் இந்த தீ விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் 139 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளித்துள்ளார்.
- இது தொடர்பாக சதீஷ் குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே ஓடும் ரெயிலில் இளம்பெண்ணுக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் ஓகா செல்லும் விரைவு ரெயிலில் தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்குச் சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் 139 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளித்துள்ளார்.
இது தொடர்பாக சதீஷ் குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சதீஸ் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
முன்னதாக, திருப்பூரில் இருந்து சித்தூருக்கு கடந்த 6-ந் தேதி ரெயிலில் பயணித்த 36 வயதுடைய 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதில் கர்ப்பிணி கை, கால் முறிவு ஏற்பட்டது. பலத்த படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்து 4 மாத சிசு நேற்று உயிரிழந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பாக ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பக்தர்கள் வசதிக்காக 3 நாட்களுக்கு இலவச பஸ்கள் இயக்கம்.
- முடி காணிக்கை செலுத்த சிறப்பு வசதி
பழனி:
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் பஸ் மற்றும் ரெயில்களிலும் வந்து குவிந்து வருவதால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்க உள்ளனர்.
பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்த வண்ணம் இருப்பதால் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை ஒவ்வொரு குழுவாக நிறுத்தி கோவில் நிர்வாகத்தினர் சாமி தரிசனம் செய்ய அனுப்புகின்றனர்.
பக்தர்கள் வசதிக்காக பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் சண்முக நதியில் இருந்து இன்று முதல் 3 நாட்களுக்கு அரசு நகர பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக இலவசமாக இயக்கப்படும் அரசு பஸ்களுக்கான கட்டணத்தை பழனி திருக்கோவில் நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது.
இலவச அரசு பேருந்துகள் இயக்கத்தை பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி, சச்சிதானந்தம் எம்.பி., ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இன்று முதல் 3 நாட்களுக்கு இலவசமாக பஸ்கள் இயக்கப்படுவது போலவே இன்று முதல் மூன்று நாட்களுக்கு பழனி மலைக்கோவிலில் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் இலவச தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் திருக்கோவில் நிர்வாகிகள் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போல் பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி எதிர்புறம் என 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரை வெளியூர் செல்லும் அனைத்து பஸ்களும் இங்கிருந்தே சென்று வரும். இதே போல பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் சாலை உள்ளிட்ட இடங்களில் 5 தற்காலிக வாகன நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்துவது வழக்கம். இதற்காக 7 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். சாதாரண நாட்களில் காலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.
தைப்பூச திருவிழா நாட்களில் கூட்டம் அதிகரித்து வருவதால் இன்று முதல் வருகிற 12-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் முடி காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு கியூ.ஆர்.கோடுடன் இலவச டிக்கெட் வழங்கப்படும். அதனை காண்பித்து இலவசமாக முடி காணிக்கை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் பாதுகாப்புக்காக 3 நாட்களுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடக்கிறது.
- நாளை தைப்பூச நாளன்று அதிகாலை சண்முகநதியில் தீர்த்தவாரியும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. விழாவையொட்டி தந்த பல்லக்கு, இரவில் தங்க மயில், வெள்ளி காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடக்கிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு சாமி மணக்கோலத்தில் வெள்ளிரத புறப்பாடும் நடைபெறுகிறது. பின்னர் நாளை தைப்பூச நாளன்று அதிகாலை சண்முகநதியில் தீர்த்தவாரியும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பழனி மலைக்கோவிலில் இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை சாமி தரிசனத்திற்கான கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. அதனால், அனைத்து வரிசைகளிலும் கட்டணமின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
- 10,000 விவசாயிகள் இதுவரை இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார்கள்.
- 50-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெற்றது.
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்" எனும் மாபெரும் கருத்தரங்கம் இன்று திண்டுக்கல் PSNA கல்லூரியில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கினை மண் காப்போம் இயக்கத்துடன் PSNA கல்லூரி மற்றும் HDFC வங்கி இணைந்து நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா கூறியதாவது:-
ஈஷா மண் காப்போம் இயக்கம் தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்தோடும் விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் மண்வளத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தோடும் கடந்த 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
விவசாயிகளிடமிருந்து விவசாயிகளுக்காக என்ற நோக்கத்தோடு, வெற்றி பெற்ற விவசாயிகளின் அனுபவ பகிர்வு விவசாயிகளையே சென்றடையும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் புதிதாக களம் காணும் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.
இதுவரை தமிழகம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாக இயற்கை விவசாய களப்பயிற்சி வழங்கியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு இயற்கை விவசாயம் சார்ந்த வழிகாட்டுதல்களை வாட்ஸ்-அப் குழுக்கள் மூலமாகவும் நேரடியாக அவர்களின் நிலங்களுக்கு சென்றும் வழங்கி வருகிறது. இதன் மூலம் 10,000 விவசாயிகள் இதுவரை இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையில், விவசாயிகள் ஒரே ஒரு பயிரை மட்டுமே நம்பி விவசாயம் செய்வதால், போதுமான விளைச்சலும், விளைச்சலுக்கு ஏற்ற விலையும் கிடைக்காமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இதற்கு தீர்வாக ஈஷா மண் காப்போம் இயக்கம் "ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்" என்ற மாபெரும் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் நல்ல வருமானம் பெற முடியும் என்பதை விவசாயிகளுக்கு உணர்த்தும் விதமாக ஆடு, மாடு, கோழி, வாத்து, மீன் ஆகியவைகளை உள்ளடக்கிய 'மாதிரி ஒருங்கிணைந்த பண்ணை' ஒன்றை நிகழ்ச்சி நடைபெறும் கல்லூரி வளாகத்திலேயே அமைக்கப்பட்டு இருந்தது.
இதனுடன் விதைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெற்றது.
- புகாரின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- போலீசார் கலாமை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் தனியார் சிமெண்ட் ஆலை குடியிருப்பு உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி இங்கு புகுந்த கொள்ளையர் சிமெண்ட் ஆலை பணியாளர்கள் கார்த்திகேயன், வேல்முருகன், தாமரைக்கண்ணன், பழனிசாமி, கருப்பையா, கவியரசன் ஆகியோரது வீடுகளின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 70 சவரன் நகை, ரூ.1 லட்சம், வெள்ளி குத்துவிளக்கு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் மத்தியபிரதேசம் தார் மாவட்டம் தண்டா கிராமத்தை சேர்ந்த திலீப் மகன் கலாம் (24) என்பவருக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மத்தியபிரதேசம் விரைந்த போலீசார் கலாமை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் போலீசில் இருந்து தப்பிக்க முயன்ற போது கால் முறிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கலாமை போலீசார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்களுக்கு கால்முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் மாவுக்கட்டு போடப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
- ஒரு கிலோ ரூ.10 என்று விற்கப்பட்ட நிலையில் தற்போது வெளி மாநில தேவை குறைந்துள்ளது.
- ஒரு சில வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கே சென்று தக்காளிகளை வாங்கி வாகனங்களில் வைத்து தெருக்களில் விற்பனை செய்து வந்தனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் செயல்பட்டு வரும் காந்தி, காமராஜர் மார்க்கெட்டுக்கு தினந்தோறும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வெங்காயம், தக்காளி மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து விற்பனையானது. 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.200 என விற்கப்பட்டது. இதனால் விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் விற்றுச் சென்றனர். ஒரு சில வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கே சென்று தக்காளிகளை வாங்கி வாகனங்களில் வைத்து தெருக்களில் விற்பனை செய்து வந்தனர்.
ஒரு கிலோ ரூ.10 என்று விற்கப்பட்ட நிலையில் தற்போது வெளி மாநில தேவை குறைந்துள்ளது. குறிப்பாக பெங்களூரில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து இங்கிருந்து அனுப்பப்படும் தக்காளி முற்றிலும் நின்று விட்டது. இதேபோல் ஒட்டன்சத்திரத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும் தக்காளி குறைந்து போனது.
இன்று காலை காமராஜர் மார்க்கெட்டுக்கு 15 ஆயிரம் பெட்டிகள் வரையிலும், காந்தி மார்க்கெட்டுக்கு 20 ஆயிரம் பெட்டிகள் வரையிலும் விற்பனைக்கு வந்தன. ஒரு பெட்டி ரூ.220 வரை விற்பனையான நிலையில் ஏற்கனவே இருப்பு வைத்த தக்காளி அழுகும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் தக்காளிகளை விற்பனை செய்யாமல் குப்பையில் கொட்டிச் சென்றனர். சாதாரணமாக இந்த சீசனில் தக்காளிக்கு போதிய விலை கிடைத்து வந்த போதிலும் வரத்து அதிகரித்து காணப்படுவதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கடும் பனிப்பொழிவுக்கு இடையே செடிகளை பாதுகாத்து பராமரித்து பின்னர் அவற்றுக்கு பறிப்பு கூலி கொடுத்து மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் கூலி வரை செய்த செலவு தொகை கூட சந்தையில் கிடைப்பதில்லை என வேதனையுடன் தெரிவித்தனர். ஏற்கனவே தக்காளி விலை வீழ்ச்சி அடையும் சமயங்களில் அதனை பதப்படுத்தி வைக்க எந்திரம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதுபோன்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டு தக்காளி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- டெல்லியில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ.க. தீவிரமாக களமாடியது.
- இனி வருகிற தேர்தலிலாவது இதனை உணர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்க வேண்டும்.
திண்டுக்கல்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
டெல்லியில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ.க. தீவிரமாக களமாடியது. சமூக ஊடகங்களில் கூட வாக்காளர்களுக்கு அந்த கட்சியினர் பணம் கொடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்தியா கூட்டணியில் ஒற்றுமையாக இருக்க வேண்டிய காங்கிரஸ், ஆம் ஆத்மி ஈகோ பிரச்சனையால் பிரிந்து தேர்தலை சந்தித்தது. இது பா.ஜ.க. வெற்றிக்கு பெரிதும் உதவியாக அமைந்து விட்டது. பா.ஜ.க.வின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது.
பாராளுமன்ற தேர்தலோ, சட்டமன்ற தேர்தலோ இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால் தான் பா.ஜ.க. என்ற மதவாத சக்தியை வீழ்த்த முடியும். இனி வருகிற தேர்தலிலாவது இதனை உணர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தனி வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தமிழக அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






