என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  ஒரத்தநாடு அருகே குடும்ப தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் - வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒரத்தநாடு அருகே குடும்ப தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஒரத்தநாடு:

  ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் சரகத்துக்கு உட்பட்ட ஆம்பலாப்பட்டு கண்டியர் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது45). இவரது மனைவி ராஜம்மாள்(38). தர்மலிங்கத்தின் சகோதரர் வீரையன். இவரது மகள் அபிநயா(16). வீரையனின் மனைவி இறந்து விட்டதால் அபிநயாவை தர்மலிங்கமும், ராஜம்மாளும் வளர்த்து வந்துள்ளனர்.

  இந்நிலையில் கடந்தசில நாட்களுக்கு முன்பு அபிநயாவை ராஜம்மாள் கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர் இதுபற்றி தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வீரையன் அப்பகுதியில் இறைச்சிக்கடை வைத்துள்ள அருமைக்கண்ணு மகன்கள் பிரசாந்த், பிரபாகர் ஆகியோரிடம் கூறி ராஜம்மாளை மிரட்டி வைக்குமாறு கூறியுள்ளார். இதைத் தொடாந்து இருவரும் ராஜம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

  இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ராஜம்மாளை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அவர் பாப்பாநாடு போலீசில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிரசாந்த், பிரபாகர் ஆகியோரை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×