என் மலர்
உத்தரப் பிரதேசம்
- போலீசார் வந்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார்.
- கொலைக்கு உதவியாக இருந்த மேலும் ஒருவரை பிடிக்க போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் திகம்கர் பகுதியை சேர்ந்தவர் ரச்னா தேவி. கணவனை இழந்த இவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ரச்னா தேவிக்கு இருந்த ஒரு பிரச்சினையை தீர்க்க அருகில் உள்ள பக்கத்து கிரமமான கிஷோர்புராவில் வசித்து வரும் முன்னாள் கிராம பஞ்.தலைவர் சஞ்சை பட்டேலிடம் உதவி கேட்டார். அந்த பிரச்சினை தொடர்பாக அடிக்கடி அவரை ரச்னாதேவி சந்தித்து வந்தார்.
நாளடைவில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து இருந்துள்ளனர்.
இந்த நிலையில் ரச்னா தேவி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கிஷோர் பட்டேலிடம் வற்புறுத்தியுள்ளார். கிஷோர் பட்டேலும், திருமணம் செய்து கொள்வதாக கூறி நாட்களை கடத்தினார். ஆனால் தொடர்ந்து ரச்னா தேவி வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த கிஷோர் பட்டேல், ரச்னா தேவியை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினார்.
வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு ரச்னா தேவியை வரச்சென்னார். அங்கு காத்திருந்த தனது மருமகன் சந்தீப் பட்டேலுடன் சேர்ந்து ரச்னா தேவிவை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி அவரை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ரச்னா தேவி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அவரது உடலை 7 துண்டுகளாக வெட்டி, உடல் பாகங்களை பிரித்து தனிதனி சாக்கு மூட்டையில் கட்டினர். ஒரு மூட்டையை கிணற்றிலும், மற்றொரு மூட்டையை பாலத்திற்கு அடியிலும் வீசி சென்றனர்.
இந்த நிலையில் நிலத்தை பார்க்க வந்த விவசாயி தனது கிணற்றில் இருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்து கிணற்றை பார்த்த போது, ஒரு சாக்கு மூட்டை மிதப்பதை பார்த்து சந்தேக மடைந்தார். அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் ஒரு பெண்ணின் வெட்டப்பட்ட கைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தோடிபதேபூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார். இதில் இறந்த பெண்ணின் தலை கிடைக்காததால் குழப்பமடைந்தனர். தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த கிராமத்திற்கு அருகில் உள்ள லகேரி ஆற்றிலிருந்து அந்த பெண்ணின் தலையை போலீசார் கண்டெடுத்தனர். இறந்தவர் யார் என்பதை தெரிந்து கொள்ள சுவரொட்டிகள் அடித்து அருகில் உள்ள கிராமங்களில் வினியோகித்தனர்.
காணாமல் போன தன் அக்காவை தேடிக் கொண்டிருந்த ரச்னா தேவின் சகோதரன், ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை பார்த்து போலீசாரை அனுகினார். அப்போதுதான் நடந்த சம்பவம் போலீசாருக்கு தெரியவந்தது. தகவல் அறிந்த போலீசார் உடனடியாக செயல்பட்டு, கொலை செய்த சஞ்சை பட்டேல் மற்றும் அவரது மருமகன் சந்தீப் பட்டேலை கைதுசெய்தனர். கொலைக்கு உதவியாக இருந்த மேலும் ஒருவரை பிடிக்க போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் சொல்லி அழுதார்.
- கணவன் தனக்கு விருப்பமில்லாத பல விஷயங்களை செய்ய சொல்கிறார்.
உத்தரபிரேதச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் சிவம் உஜ்வால். அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு ஆடம்பரமான முறையில் ஷானவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இவர் தனது மனைவி சினிமா நடிகை நோரா பதேகி போல் கட்டுடலாக உடலமைப்பை பெற வேண்டும் எனக்கூறி மனைவி ஷானவியை தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
கணவனின் வற்புறுத்தலால் ஷானவி தினமும் உடற்பயிற்சி செய்து வந்தார். உடல் நல பிரச்சனையால் ஒரு நாள் உடற்பயிற்சி செய்ய தவறினாலும், அவருக்கு சாப்பாடு தராமல் பட்டினி போட்டார். கையில் கிடைத்த பொருட்களால் அவரை அடித்துள்ளார். மேலும் உடலளவிலும், மனதளவிலும் அவரை துன்புறுத்தி சித்ரவதை செய்து வந்துள்ளார்.
ஆபாச படங்கள் பார்த்து அந்த படங்களில் வருவதுபோல் மனைவியோடு முறையற்ற உறவில் ஈடுபட ஷானவியின் கரு கலைந்தது. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட ஷானவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன் கணவன் செய்யும் இந்த கொடுமைகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவரை மாமியார் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்து போன ஷானவி அந்த வீட்டிலிருந்து வெளியேறினார்.
தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் சொல்லி அழுதார். தாய், தந்தை வீட்டிலேயே இருந்து விட முடிவு செய்தார். மகளை சமாதானப்படுத்திய பெற்றோர் மீண்டும் அவளை கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டிற்கு வந்த ஷானவியை ஏற்க மறுத்த கணவன் வீட்டார், வரதட்சணை கொண்டு வரச்சொல்லி விரட்டி விட்டனர். ஒரு கட்டத்தில் கணவன் வீட்டாரின் செயலை பொறுக்க முடியாத அவர் போலீஸ் நிலையம் சென்றார்.
கணவன் தனக்கு விருப்பமில்லாத பல விஷயங்களை செய்ய சொல்கிறார். நடிகை போல் உடலமைப்பு பெற தினமும் 3 நேரம் உடற்பயிற்சி செய்ய சொல்கிறார். நிறைய ஆபாச படங்கள் பார்க்கிறார். நான் அதைப் பற்றி கேட்டால் உன்னை திருமணம் செய்து கொண்டதால் என் வாழ்க்கையே வீணானது என்று அடித்தும் தன்னை தினமும் பட்டினி போட்டும் கொடுமைப்படுத்துகிறார். இதனால் தான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.
எனது வீட்டில் வரதட்சணையாக அவர்கள் கேட்டபடி ரூ.24 லட்சத்தில் கார் வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல், ரூ. 10 லட்சம் ரொக்கமாகவும் கொடுத்தார்கள். ஆனாலும் எனது மாமியார் தினமும் உன் வீட்டிலிருந்து, நகை கொண்டு வா, பணம் கொண்டு வா என தன்னை கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்துவதாகவும் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கனமழையால் முதலைகள் வெள்ளத்தில் அடித்து வரப்படலாம்.
- அவை நீர்நிலைகளை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
லக்னோ:
உத்தரபிரதேசத்தில், இருவேறு இடங்களில் பெண்கள், முதலைகளுடன் சண்டையிட்டு தங்கள் குழந்தை மற்றும் கணவரை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் வீரப்பெண்மணிகள் தங்கள் அன்புக்குரியவர்களை காப்பாற்ற முதலைகளுடன் போராடிய சம்பவங்கள் நடந்துள்ளது. ஒரு சம்பவம் இங்குள்ள கைரிகாட் பகுதியில் உள்ள தாகியா கிராமத்தில் நடந்தது.
இங்குள்ள காக்ரா ஆற்றின் கால்வாயில் 5 வயது சிறுவன் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது, அவன் திடீரென அலறும் சத்தம் கேட்டது.
உடனே அருகில் நின்ற அவனது தாய் மாயா, ஓடிச் சென்று பார்த்தபோது ஒரு ராட்சத முதலை சிறுவனை தண்ணீருக்குள் இழுத்துச் செல்ல முயல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே எதையும் யோசிக்காமல் சட்டென்று ஆற்றில் குதித்து மகனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள் அந்த வீரத்தாய். குழந்தையை இறுக்கமாக பிடித்துக் கொண்ட தாய், சிறுவனை கவ்விக் கொண்டிருந்த முதலையின் தாடையை குறிவைத்து தன்னிடம் இருந்த சிறு கம்பியால் மீண்டும் மீண்டும் தாக்கினார்.
இதை தாக்குப்பிடிக்க முடியாமல் முதலை பிடியைத் தளர்த்தி சிறுவனை விடுவித்தது. பின்னர் ஆழமான தண்ணீருக்குள் முதலை ஓடி மறைந்தது.
முதலை தாக்கியதில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.சுமார் 7 அடி நீளமுள்ள அந்த முதலையைப் பிடிக்க அந்த கால்வாயில், 3 இடங்களில் வலை விரிக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதேபோல மோதிபூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தில், ஒரு பெண்மணி தனது கணவரை முதலையிடம் இருந்து காப்பாற்றி உள்ளார்.
மாதவபூர் கிராமத்தில் சைபு (வயது 45) என்பவர், தனது மனைவி சுர்ஜனா மற்றும் மைத்துனியுடன் ஒரு கால்வாயை கடக்க முயன்றார். அப்போது ஒரு முதலை சைபுவின் காலைக் கடித்து இழுத்தது. இதனால் அவர் கூச்சலிட்டார்.
உடனே சுர்ஜனா தனது புடவையை தண்ணீரில் வீசி, கணவரை பிடித்துக் கொள்ளச் செய்தார். பின்னர் முதலையை தாக்கினார். அப்போது அக்கம்பக்கத்தினரும் திரண்டு வந்து முதலையை தடிகளால் தாக்கினார்கள். இதனால் முதலை சைபுவை விட்டுவிட்டு ஓடியது. காயம் அடைந்த சைபு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
கனமழையால் ஆறுகள், கால்வாய்களில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், முதலைகள் வெள்ளத்தில் அடித்து வரப்படலாம் என்றும், அவை நீர்நிலைகளை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும் வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
- சுங்கச்சாவடியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், ராணுவ வீரர் காரில் இருந்து இறங்கிய விசாரித்துள்ளார்.
- அப்போது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் அவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் மீரட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் ராணுவ வீரர் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருபவர் கபில் கவாத். இவர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீநகரில் பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார். விடுமுறை முடிந்த நிலையில் டெல்லிக்கு வாகனம் மூலம் சென்று அங்கிருந்து ஸ்ரீநகருக்கு விமானத்தில் செல்ல முடிவு செய்தார்.
தனது உறவினர் உடன் காரில் சென்றபோது, மீரட்டில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்கள் அதிகமாக நின்றுள்ளது. விமான நிலையத்திற்கு செல்ல தாமதம் ஏற்பட்டதால் கபில் கவாத் கீழே இறங்கி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் பேசியுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அவரை தாக்கினர். அத்துடன் அங்கிருந்து ஒரு கம்பியில் கட்டிவைத்து கடுமையாக அடித்து உதைத்தனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீதியை பெற்று தந்ததற்காக முதல் மந்திரிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார் பூஜா பால்.
- கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி பூஜா பால் சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
லக்னோ:
உ.பி.யின் பிரயாக்ராஜில் 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வான ராஜு பால் சுட்டுக் கொல்லப்பட்டார். பூஜா பாலை திருமணம் செய்த சில நாட்களில் இந்தச் சம்பவம் நடந்தது. இதற்கு முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் 2023-ம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சமீபத்தில் நடந்த உத்தர பிரதேச சட்டசபை கூட்டத்தொடரின்போது சமாஜ்வாதி கட்சி பெண் எம்.எல்.ஏ.வான பூஜா பால், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்தும், அவரை புகழ்ந்தும் பேசினார்.
இதற்கிடையே, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என கூறி பூஜா பாலை சமாஜ்வாதி கட்சியில் இருந்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நீக்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், லக்னோ நகரில் உள்ள முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் இல்லத்துக்கு சென்ற பூஜா பால், அவரை நேரில் சந்தித்துப் பேசினார். இது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றி உரையாற்றினார்.
- சிவலிங்கத்துக்கு தேசிய கொடி வண்ணங்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
லக்னோ:
நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடி ஏற்றி உரையாற்றினார்.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இந்நிலையில், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு தேசிய கொடி வண்ணங்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் காசி விஸ்வநாதருக்கு தீப ஆராதனை நடந்தது. இந்த சிறப்பு அலங்காரத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- ஸ்ரீவத்சவாவை நோக்கி விரைந்த சவுத்ரியை, மற்ற எம்.எல்.ஏ.க்கள் தடுத்து நிறுத்தினர்.
- இதுபோல் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் தலைவர்களை ஆதரிக்கிறீர்களா என்று அகிலேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரின் போது பாஜக எம்எல்ஏக்கள் சண்டையிட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.
எம்எல்ஏ ராஜேஷ் சவுத்ரிக்கும், சவுரப் ஸ்ரீவஸ்தவாவுக்கும் இடையே சண்டை நடந்தது. விஷன் 2047 திட்டம் தொடர்பான விவாதத்தின் போது இந்த மோதல் நடந்தது.
வாக்குவாதத்தின் போது, ஸ்ரீவத்சவாவை நோக்கி விரைந்த சவுத்ரியை, மற்ற எம்.எல்.ஏ.க்கள் தடுத்து நிறுத்தினர்.
சட்டமன்றத்தில் பாஜக சார்பில் யார் பேசுவது என்ற சர்ச்சையால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.
இருவரும் வாக்குவாதம் செய்யும் வீடியோவை அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் இல் வெளியிட்டார். இதுபோல் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் தலைவர்களை ஆதரிக்கிறீர்களா என்று அகிலேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
- தனது கணவர் கொலை வழக்கில் நீதி பெற்றுத் தந்ததற்தாக முதல் மந்திரிக்கு நன்றி என்றார் பூஜா பால்.
- கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு பூஜா பால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
லக்னோ:
கட்சி விரோத நடவடிக்கை காரணமாக, உத்தரபிரதேசத்தில் பூஜா பால் எம்எல்ஏ, கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக, சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச சட்டசபையில் சமாஜ்வாதி எம்.எல்.ஏ.வான பூஜா பால் பேசுகையில், தனது கணவர் கொலை வழக்கில் நீதியை பெற்றுத் தந்ததாக முதல் மந்திரி ஆதித்யநாத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், முதல் மந்திரியைப் பாராட்டி பேசிய சில மணி நேரங்களுக்கு பிறகு, பூஜா பாலை கட்சியை விட்டு நீக்கி உள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். கட்சி விரோத நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டு அவரை கட்சியை விட்டு நீக்கி உள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பூஜா பால், சமாஜ்வாதி கட்சியினரின் பெண்களுக்கு எதிரான நிலையை இது காட்டுகிறது என கடுமையாகச் சாடினார்.
- இவர்களுக்கு தமன்னா, நிஷா என்ற மகள்கள் உள்ளனர்.
- மூத்தவரான மாமனாரின் ஆலோசனைக்கு இணங்க கொலை செய்ய முடிவாகியது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது மகளை குடும்பமே சேர்ந்து ஆணவக்கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி சதாபாத் பகுதியில் உள்ள பாரதோய் கிராமத்தில் இளம்பெண்ணின் தலையில்லாத உடல் ஒன்று கால்வாய் அருகில் சாக்கில் கண்டுபிடிக்கப்ட்டது.
இதுதொடர்பாக விசாரிக்க 5 குழுக்களை போலீஸ் அமைத்தது. பெண் உடலில் இருந்த அடையாளங்களை போலீசார் சமுக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
தையல்கார பெண் ஒருவர் தான் தைத்த துணி இளம்பெண்ணின் உடலில் இருந்ததை அடையாளம் கண்டு போலீசுக்கு தெரிவித்தார்.
அதன்படி உயிரிழந்தது அலிகாரின் தவுனா கிரமத்தை சேர்ந்த ஹஸ்ரத் அலி என்பவரின் மகள் தமன்னா (19 வயது) என்பது தெரியவந்தது.
ஹஸ்ரத் அலி 2005 இல் பிர்தவ்ஸ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு தமன்னா, நிஷா என்ற மகள்கள் உள்ளனர்.
தொடர்ந்து பெண் குழந்தைகளாக பெற்றெடுப்பதால் பிர்தவ்ஸ்-ஐ பிரிந்த அலி, ராஜா பெஹல்வான் என்பவற்றின் மகள் ராணியை மணந்தார். தமன்னாவும், நிஷாவும் அலியின் வளர்ப்பில் வளந்தனர்.
இந்நிலையில் தமன்னா அண்மையில் வாலிபர் ஒருவருடன் கிராமத்திலிருந்து நகரத்துக்கு சென்று 2 நாள் கழித்து திரும்பினார். இவ்வாறு தமன்னா ஊர்சுற்றுவது குடும்பத்துக்கு அவமானம் என தந்தை அலி, வளர்ப்பு தாய் ராணி கண்டித்துள்ளனர்.
இருப்பினும் தமன்னா அந்த இளைஞருடன் கடந்த 8 ஆம் தேதி பைக்கில் சென்றுள்ளார். அப்போது பாலத்தில் வைத்து அவர்களை மரித்த அலி, தமன்னாவை தன்னுடன் அழைத்துக்கொண்டு மாமனார் ராஜா பெஹ்லவான் வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.
அங்கு மூத்தவரான மாமனாரின் ஆலோசனைக்கு இணங்க கொலை செய்ய முடிவாகியது. தமன்னாவுக்கு உணவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.
பின்னர் மனைவி ராணி உள்ளிட்டவர்களின் தமன்னாவை பிடித்துக்கொள்ள தந்தை அலி தமன்னாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர் உடலை கால்வாய்க்கு எடுத்துசென்று, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக தலையை துண்டித்து, உடலில் பல காயங்களை ஏற்படுத்தி சாக்கில் கட்டி வீசியுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அலி, ராணி, ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- 33 வயதான சுர்ஜித் தனது மாமா வீட்டுக்கு சென்றுள்ளார்.
- மாமாவின் மகள் சுர்ஜித்துக்கு ராக்கி கட்டிவிட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ரக்ஷா பந்தன் அன்று தனது கையில் ராக்கி கட்டிய தங்கை முறை உறவு கொண்ட 14 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
33 வயதான சுர்ஜித் தனது மாமா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவனது மாமாவின் மகள் சுர்ஜித்துக்கு ராக்கி கட்டிவிட்டுள்ளார். இதனையடுத்து இரவில் மது அருந்திய சுர்ஜித் போதையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். பின்னர் அவளது உடலை அந்த அறையில் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை போல சித்தரித்துள்ளான்.
அடுத்த நாள் தனது மகள் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியைடந்த அவளது அப்பா போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
முதலில் இதை தற்கொலை என நினைத்த போலீசார் சிறுமியின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தான் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொள்ளப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் உறவினர்களிடம் விசாரித்த போலீசார் முன்னுக்கு பின் முரணாக பேசிய சுர்ஜித்தை கைது செய்து விசாரித்தனர். பின்னர் சுர்ஜித் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
- போலீசாரின் சின்னங்களைப் பயன்படுத்தி பணம் பறித்தது தெரிய வந்தது.
- போலீசாரின் சின்னங்களைப் பயன்படுத்தி பணம் பறித்தது தெரிய வந்தது.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி வந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவரை காசியாபாத் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள், வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தி தருவதாக கூறியும், போலி நிறுவனங்கள் மூலம் ஹவாலா பரிமாற்றம் செய்தும் வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், உ.பி.யின் நொய்டாவில் மோசடி கும்பல் ஒன்று சர்வதேச போலீஸ் நிலையம் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை அலுவலகம் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தர்.
விசாரணையில், அரசு அதிகாரிகளைப் போல நடித்தும், போலி ஆவணங்கள், போலி அடையாள அட்டைகள் மற்றும் போலீசாரின் சின்னங்களைப் பயன்படுத்தி பணம் பறித்ததும், அரசு ஊழியர்களைப் போல நடித்து www.intlpcrib.in என்ற இணையதளத்தின் மூலம் பணத்தை பெற்று வந்ததும் தெரிய வந்தது.
- நான்கு பேரையும் காணாததையடுத்து, அகிலேஷின் பெற்றோர் அவர்களைத் தேடத் தொடங்கினர்.
- அவர்கள் நான்கு பேரின் உடல்களும் துணியால் ஒன்றாகக் கட்டப்பட்டிருந்தன
உத்தரப் பிரதேசத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி மூன்று குழந்தைகளுடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இறந்தவர்கள் பண்டா மாவட்டத்தில் உள்ள ரிசௌரா கிராமத்தை சேர்ந்த ரீனா (30), மற்றும் அவரது குழந்தைகள் ஹிமான்ஷு (9), அன்ஷி (5), மற்றும் பிரின்ஸ் (3) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு, ரீனாவுக்கும் அவரது கணவர் அகிலேஷுக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, அவர் தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மறுநாள் காலை, நான்கு பேரையும் காணாததையடுத்து, அகிலேஷின் பெற்றோர் அவர்களைத் தேடத் தொடங்கினர்.
கால்வாய் அருகே ரீனா மற்றும் அவரது குழந்தைகளின் உடைகள், வளையல்கள், செருப்புகள் மற்றும் பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, காணாமல் போனவர்கள் கால்வாயில் குதித்திருக்கலாம் எனச் சந்தேகித்தனர். நீண்ட தேடலுக்குப் பிறகு, ரீனா மற்றும் அவரது மூன்று குழந்தைகளின் உடல்கள் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
அவர்கள் நான்கு பேரின் உடல்களும் துணியால் ஒன்றாகக் கட்டப்பட்டிருந்தன என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அகிலேஷை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.






