என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vandhe bharath"

    • பிரதமர் மோடி இன்று 4 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார்.
    • தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

    பிரதமர் மோடி இன்று வாரணாசியில் நடந்த விழாவில் 4 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார்.

    அதன்படி, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்தேபாரத் புதிய ரெயிலை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    இந்த ரெயில் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

    இந்தநிலையில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு கோவை வந்த வந்தேபாரத் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • நாடு முழுவதும் 160 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.
    • உத்தரபிரதேசத்தில் உள்ள ஆன்மீக தலங்கள் மிக சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடி இன்று வாரணாசியில் நடந்த விழாவில் 4 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    உலகம் முழுவதும் வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு மிக பெரிய காரணமாக உள்கட்டமைப்பு அமைந்து உள்ளது. ஒவ்வொரு நாடும் சாதனை படைக்கும் வகையில் வளர்ந்து இருக்கிறது என்றால் அதன் பின்னணியில் உள்கட்டமைப்பு மேம்பாடுதான் இருக்கிறது.

    உள்கட்டமைப்பு என்பது வெறும் பாலங்கள் கட்டுவதும், சாலைகள் அமைப்பதும் மட்டுமல்ல. ஒவ்வொரு பகுதியும் ஒருங்கிணைந்த வகையில் ஒட்டுமொத்த வளர்ச்சி பெறுவதுதான் உள்கட்டமைப்பின் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் நாங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம்.

    அதனால்தான் இந்தியா சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில் மிக வேகமான வளர்ச்சி பாதையில் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இதற்கு துணைபுரியும் வகையில் நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களும், வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களும் அமைந்துள்ளன. இது இந்தியாவை வேகமாக வளர செய்கிறது.

    தற்போது, இந்திய ரெயில்வேயில் வந்தே பாரத், நமோ பாரத், அம்ரித் பாரத் வகை ரெயில்கள் அடுத்த தலைமுறைக்கான ரெயில்களாக உருவெடுத்து உள்ளன. நாடு முழுவதும் 160 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 11 ஆண்டுகளில் உத்தரபிரதேசம் புதிய வளர்ச்சி பாதையை எட்டி இருக்கிறது.

    மற்ற மாநிலங்களில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. அவர்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் உத்தரபிரதேச மாநில அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது.

    உத்தரபிரதேசத்தில் உள்ள ஆன்மீக தலங்கள் மிக சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வாரணாசிக்கு மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் வருவதை ஒரு புதிய எழுச்சியாக மாற்றி உள்ளனர். வாரணாசியில் ஒருநாள் தங்கியிருந்து இறைவழிபாடு செய்வது ஒவ்வொருவருக்கும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும்.

    இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 4 வந்தே பாரத் ரெயில்களும் நாட்டின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும். இந்த ரெயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும். நேரத்தை கணிசமாக குறைக்கும். பனாரஸ்- கஜுர்கோ நகரங்களுக்கு இடையே விடப்பட்டுள்ள வந்தே பாரத் ரெயில் வாரணாசி, பிரயாக்ராஜ், சித்தரகூட் போன்ற ஆன்மீக கலாச்சார நகரங்களை இணைக்கிறது.

    நாட்டின் வளர்ச்சியில் வந்தே பாரத் ரெயில்கள் புதிய மைல்கல்களாக இருக்கின்றன. தற்போது உத்தர பிரதேச மக்கள் தேவ் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தற்போது நடக்கும் விழாவை வளர்ச்சிக்கான திருவிழாவாகவும் கொண்டாடலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விபத்துக்கு பிறகு, அரை-அதிவேக ரெயில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
    • இரண்டு நிமிடங்களில் இந்த ரெயில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும்.

    குஜராத் மாநிலம் காந்திநகர்- மும்பை வழித்தடத்தில் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்று காலை 8 மணியளவில்  மாடு மீது மோதியது. அதுல் ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் ரெயிலின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

    மேலும் இந்த விபத்து கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறையாகும். இந்த விபத்துக்கு பிறகு, அதிவேக ரெயில் சேவை சுமார் 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.

    ஏற்கனவே, இந்த மாத தொடக்கத்தில், குஜராத்தில் உள்ள ஆனந்த் ஸ்டேஷன் அருகே அதிவேக ரெயிலான வந்தே பாரத் நான்கு எருமை மாடுகள் மீது மோதியது. பிறகு இரண்டு நாட்களில் மீண்டும் மற்றொரு மாடு மீது மோதியது.

    இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "கால்நடைகளுடன் இதுபோன்ற மோதலை தவிர்க்க முடியாது. இருப்பினும், ரயிலை வடிவமைக்கும் போது இது மனதில் வைக்கப்படும்" என்றும் கூறினார்.

    வந்தே பாரத் ரெயிலின் மூன்றாவது சேவையான இந்த ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இரண்டு நிமிடங்களில் இந்த ரெயில் மணிக்கு 160 கிமீ வேகத்தை எட்டும் என்றும் மற்ற ரெயில்களை விட சிறந்த சேவை வசதியைக் கொண்டுள்ளது என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

    • நாக்பூர்-ஷீரடி இடையே முதல்கட்ட மெட்ரோ சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
    • நாக்பூர் மெட்ரோவின் 2-ம் கட்ட திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

    மராட்டிய மாநிலத்தின் 2-வது தலைநகரமான நாக்பூரில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்கள் தொடக்கம் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடந்தது.

    விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். மேலும் நாக்பூர்-ஷீரடி இடையே முதல்கட்ட மெட்ரோ சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து நாக்பூர் மெட்ரோவின் 2-ம் கட்ட திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நாக்பூர் மெட்ரோவின் ஃப்ரீடம் பார்க் நிலையத்தில் பிரதமர் தனது பயணச் சீட்டை வாங்கினார். பின்னர், நாக்பூர் மெட்ரோவில் ஃப்ரீடம் பார்க் முதல் காப்ரி வரை பயணித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    • தனது மாநிலத்தை அவதூறு செய்த ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
    • வந்தே பாரத் ரெயிலில் சிறப்பு எதுவும் இல்லை. இது ஒரு புதிய என்ஜின் பொருத்தி புதுப்பிக்கப்பட்ட பழைய ரெயில்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் ஹவுரா-புது ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் அதிவேக ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கிவைத்தார்.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை அந்த ரெயில் புது ஜல்பைகுரியில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்றது. மால்டா மாவட்டத்தின் குமார்கஞ்ச் ரெயில் நிலையம் அருகில் சென்றபோது அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி தாக்கினர்.

    அதில் ஒரு பெட்டியின் கண்ணாடி கதவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் ரெயில் தொடர்ந்து இயக்கப்பட்டு, அடுத்து வந்த வழக்கமான நிறுத்தமான மால்டா ரெயில் நிலையத்தில்தான் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், அண்டை மாநிலமான பீகாரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், தனது மாநிலம் அல்ல என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    மேலும், தனது மாநிலத்தை அவதூறு செய்த ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    மூன்று நாட்களாக நிறைய டி.வி. சேனல்கள் வங்காளத்தை அவதூறாகப் பேசி வருவதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். போலிச் செய்திகளைக் காட்டி, பொய்யான தகவலைப் பரப்பி வங்காளத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சட்டம் அதன் கடமையை செய்யும். இது வங்காளத்தில் நடக்கவில்லை. பீகாரில் நடந்துள்ளது. அவர்கள் ஏதாவது செய்திருந்தால் பீகார் மக்களுக்கு புகார் இருக்கும். இருப்பினும் பீகாரை அவமதிப்பது சட்டவிரோதமானது. இந்த சேவைகளை பெற அவர்களுக்கும் உரிமை உண்டு. அங்கு ஆட்சியில், அவர்களுக்கு இந்த சேவைகளை மறுக்க முடியாது.

    வந்தே பாரத் ரெயிலில் சிறப்பு எதுவும் இல்லை. இது ஒரு புதிய என்ஜின் பொருத்தி புதுப்பிக்கப்பட்ட பழைய ரெயில்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேற்கு வங்காளத்தில் ஹவுரா- நியூ ஜல்பை குரி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
    • சாதாரண ரெயிலுக்கு வந்தே பாரத் ரெயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிவேக ரெயிலின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரெயில்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ரெயிலின் முதல் சேவை டெல்லி- வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி- காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை- காந்தி நகர் வழித்தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி வழித்தடத்திலும், 5வது சேவையாக சென்னை- பெங்களூரு- மைசூரு வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் ஹவுரா- நியூ ஜல்பை குரி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    இந்நிலையில், சாதாரண ரெயிலுக்கு வர்ணம் பூசி வந்தே பாரத் என பெயர் வைத்து மக்களின் பணத்தை பயன்படுத்த வேண்டாம் என்று மேற்கு வங்காள அமைச்சர் உதயன் குஹா கூறியுள்ளார்.

    மேலும் அவர், "சாதாரண ரெயிலுக்கு வந்தே பாரத் ரெயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிவேக ரெயிலின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிவேக ரெயிலாக இருந்தால், ஹவுராவிலிருந்து நியூ ஜல்பைகுரிக்கு 8 மணிநேரம் ஆகும். சாதாரண ரெயிலுக்கு வர்ணம் பூசி வந்தே பாரத் என பெயர் வைத்து மக்களின் பணத்தை பயன்படுத்த வேண்டாம்" என்றார்.

    • ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாக இருந்தார்.
    • பிரதமர் மோடியின் தமிழக பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    சென்னை விழாவில் 2 வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 20ம் தேதி தமிழகம் வருகை தர இருந்தார்.

    சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே ஒரு வந்தே பாரத் ரெயில் விடப்படுகிறது. அதுபோல மதுரையில் இருந்து பெங்களூருக்கு சென்னை வழியாக மற்றொரு வந்தே பாரத் ரெயில் விடப்படுகிறது.

    இந்த 2 ரெயில் சேவைகளையும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதே சமயத்தில் மதுரை ரெயில் நிலையத்திலும் வந்தே பாரத் ரெயிலுக்கான தொடக்க விழா நடைபெற திட்டமிடப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    வந்தே பாரத் ரெயில் சேவையை துவக்கி வைப்பதற்காக ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாக இருந்தார்.

    இந்நிலையில், வரும் 20ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்த பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் தமிழக பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    • ரெயில் அம்பாலா, சண்டிகர், ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் உனா ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்படும்.
    • குஜராத்தில் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸை மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஹிமாச்சல பிரதேசத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இங்குள்ள உனா மாவட்டத்தில் நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

    இந்த ரெயில் டெல்லியில் இருந்து உனாவில் உள்ள அம்ப் ஆண்டவுரா ரெயில் நிலையத்திற்குச் செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த ரெயில் அம்பாலா, சண்டிகர், ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் உனா ஆகிய நிறுத்தங்களில் நிற்கும் என்றும் புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் ரெயில் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதம், தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தில் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸை மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் காந்தி நகரில் இருந்து மும்பைக்கு இயக்கப்படுகிறது.

    ×