சாதாரண ரெயிலுக்கு வர்ணம் பூசி வந்தே பாரத் என பெயர் வைத்துள்ளனர்- மேற்கு வங்க அமைச்சர் குற்றச்சாட்டு

மேற்கு வங்காளத்தில் ஹவுரா- நியூ ஜல்பை குரி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.சாதாரண ரெயிலுக்கு வந்தே பாரத் ரெயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிவேக ரெயிலின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சாதாரண ரெயிலுக்கு வர்ணம் பூசி வந்தே பாரத் என பெயர் வைத்துள்ளனர்- மேற்கு வங்க அமைச்சர் குற்றச்சாட்டு
Published on

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரெயில்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாதாரண ரெயிலுக்கு வர்ணம் பூசி வந்தே பாரத் என பெயர் வைத்து மக்களின் பணத்தை பயன்படுத்த வேண்டாம் என்று மேற்கு வங்காள அமைச்சர் உதயன் குஹா கூறியுள்ளார்.

மேலும் அவர், "சாதாரண ரெயிலுக்கு வந்தே பாரத் ரெயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிவேக ரெயிலின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிவேக ரெயிலாக இருந்தால், ஹவுராவிலிருந்து நியூ ஜல்பைகுரிக்கு 8 மணிநேரம் ஆகும். சாதாரண ரெயிலுக்கு வர்ணம் பூசி வந்தே பாரத் என பெயர் வைத்து மக்களின் பணத்தை பயன்படுத்த வேண்டாம்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com