என் மலர்
இந்தியா

அஞ்சலி- கொலையுண்ட ராகுல்- அஜய்
உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலனை ஏவி கணவரை சுட்டுக்கொன்ற பெண்
- தன் கணவரை யாரோ கொலை செய்து விட்டதாக போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் முதலில் கொள்ளை முயற்சியில் கொலை நடந்து இருக்கலாம் என கருதினர்
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் அக்வான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகுல், இவரது மனைவி அஞ்சலி. இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அஞ்சலிக்கு அதே கிராமத்தை சேர்ந்த அஜய் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதை அறிந்த ராகுல் மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து அஜய்யுடன் நெருக்கம் காட்டி வந்தார்.
கள்ளக்காதலுக்கு கணவர் தடையாக இருக்கிறார் என அஞ்சலி அஜய்யிடம் கூறினார். இதையடுத்து இருவரும் சேர்ந்து ராகுலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
சம்பவத்தன்று அஜய், ராகுலை ஊருக்கு வெளியில் இருக்கும் வயல்வெளி பகுதிக்கு வாருங்கள் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது என்று அழைத்தார்.
நடக்கப் போகிற விபரீதம் தெரியாமல் ராகுல் அவர் சொன்ன வயல் வெளிபகுதிக்கு சென்றார். அப்போது அஜய் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து ராகுலை 3 முறை சுட்டார். இதில் உடலில் குண்டு பாய்ந்த ராகுல் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
உடனே அஜய் அவரது உடலை வயல் வெளியில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அஞ்சலியும் எதுவும் தெரியாதது போல இருந்தார். தன் கணவரை யாரோ கொலை செய்து விட்டதாக அவர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் முதலில் கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என கருதினர். மேலும் இது தொடர்பாக அஞ்சலியிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் வீட்டில் அவர் இல்லை. கிராமத்தினரிடம் விசாரித்த போது அஜய்யுடன் அவர் மாயமானது தெரியவந்தது.
இதனால் இருவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அஜய்யை தேடி கண்டு பிடித்து கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அஞ்சலியுடனான கள்ளக்காதலால் ராகுலை சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபகாலமாக கள்ளக்காதல் விவகாரத்தால் தொடர்ச்சியாக பெண்கள் கணவரை கொலை செய்வது அதிகரித்து வருகிறது.
தற்போது கொலை சம்பவம் அரங்கேறி உள்ள மீரட் மாவட்டத்தில் கடந்த மாதம் காஜல் என்ற பெண் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்றார். கணவருக்கு மயக்க மருந்து கொடுத்த அவர் கள்ளக்காதலனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் நீண்ட தூரம் சென்றனர்.
பின்னர் ஒரு கால்வாய் அருகே கணவரை காஜல் தனது சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதையடுத்து கணவர் உடலை கால்வாயில் வீசி விட்டு தப்பினார்.
கடந்த மார்ச் மாதம் உத்தரபிரதேசத்தில் முஸ்கான் என்ற பெண் சாஹித் என்ற கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் சவுரப்பை கொன்றார். அதன்பிறகு கணவர் உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு பெரிய டிரம்மில் அடைத்து சிமெண்டால் மறைத்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.






