என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இன்று திருமணம் நடைபெறுவதையடுத்து சென்னையில் இருந்து மணமகன் ஊருக்கு வந்திருந்தார்.
    • திருமணம் நிறுத்தப்பட்டது பற்றி தகவல் தெரியாத உறவினர்கள் பலரும் இன்று திருமண வீட்டிற்கு வந்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் என்ஜினீயருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதையடுத்து இருவருக்கும் இன்று திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனால் என்ஜினீயரின் வீட்டாரும் மணமகளின் வீட்டாரும் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கினார்கள். இன்று திருமணம் நடைபெறுவதையடுத்து சென்னையில் இருந்து மணமகன் ஊருக்கு வந்திருந்தார்.

    நேற்று காலையிலேயே திருமண வீட்டிற்கு உறவினர்கள் சிலர் வந்து இருந்தனர்.அவர்களுடன் மாப்பிள்ளை அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். திருமண வீட்டுக்கு உறவினர்கள் பலரும் வந்திருந்ததால் திருமண வீடு களைகட்டி இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து திடீரென புதுமாப்பிள்ளை மாயமானார். மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மணமகளின் வீட்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மணமகளின் குடும்பத்தார் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை மாயமானதால் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தனர். இந்த நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.

    திருமணம் நிறுத்தப்பட்டது பற்றி தகவல் தெரியாத உறவினர்கள் பலரும் இன்று திருமண வீட்டிற்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதே போல் மணமகள் வீட்டிற்கு வந்த உறவினர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாயமான மாப்பிள்ளையை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருமண நாளில் மாப்பிள்ளை எதற்காக மாயமானார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை கண்டுபிடித்தால் தான் எதற்காக மாயமானார் என்ற விவரம் தெரியவரும். திருமண நாளில் மணமகன் மாயமான சம்பவம் சுசீந்திரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.
    • திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    போரூர்:

    பிரசித்தி பெற்ற வட பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. கடந்த 3 நாட்களாக தினசரி காலை மற்றும் மாலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.

    இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வடபழனி முருகன்கோவிலில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு உச்சி காலத்துடன் தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து ஏராளமான பெண்கள், ஆண்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பால் குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இன்று இரவு 7மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சாமி புறப்பாடு நடக்கிறது. இதைத்தொடர்ந்து நாளை முதல் வருகிற 27-ந்தேதி வரை 3 நாட்களும் இரவு 7 மணிக்கு திருக்குளத்தில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

    பாரிமுனை, ராசப்பா செட்டி தெருவில் உள்ள கந்தக்கோட்டை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோவிலில் கருட சேவையுடன், கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.

    மேலும் 3 பெருமாளும் கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவில் வளாகத்தை சென்றடைந்தனர். மற்ற கோவில்களில் ஒரு கருட சேவை மட்டும் நடைபெறும். ஆனால் இங்கு மட்டும் 3 கருட சேவை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மாலையில் 3 பெருமாளுக்கும், திருக்கச்சி நம்பிகளுக்கும் அலங்கார திருமஞ்சனமும், திருப்பாவை சாற்று முறை தீர்த்த பிரசாத விநியோகமும் நடைபெறுகிறது.

    திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தங்கவேல், தங்கக் கீரிடம், வைர ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடு முறை மற்றும் பங்குனி உத்திரம் என்பதால் மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்து இருந்தனர். இதனால் பொது வழியில் மூலவரை தரிசிக்க பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

    • மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது.
    • தி.மு.க.கூட்டணிக்கு எதிராக பரப்பப்படும் எந்த அவதூறும் எடுபடாது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்களின் பேராதரவு உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் பேராதரவை கொடுக்க காத்திருக்கிறார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது.

    சிதம்பரம் தொகுதியில் வருகிற 25-ந் தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன். 27-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். முதலமைச்சர்களை கைது செய்யும் புதிய நடைமுறையை அரசியலில் பா. ஜனதா கையாண்டு வருகிறது. பழிவாங்கும் வெறியோடு பா.ஜ.க. செயல்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். பா.ஜனதா தோல்வி பயத்தில் இது போன்று செய்து வருகிறது.

    தி.மு.க.கூட்டணிக்கு எதிராக பரப்பப்படும் எந்த அவதூறும் எடுபடாது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இந்த முறை 40-க்கு 40தையும் வெல்வோம். தேர்தல் முடிவுகள் வரத் தான் போகிறது. அப்போது மக்கள் பா.ஜனதாவிற்கு எவ்வளவு மதிப்பெண் போட போகிறார்கள் என்பது தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 40 தொகுதிகளிலும் தி.மு.க.-இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.
    • தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தான் போட்டி நிலவுகிறது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி.நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நிச்சயமாக தி.மு.க.வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். தூத்துக்குடி மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க.-இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.

    நான் எனது தூத்துக்குடி தொகுதியில் மட்டும் இல்லாமல், மேலும் 10 அல்லது 12 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். சென்னை தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வது பற்றி திட்டம் உள்ளது. எனது தேர்தல் பிரச்சார பயணத் திட்டம் தயாராகிக் கொண்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டி என்று பார்க்கும் போது, தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தான் போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் நிச்சயமாக பா.ஜ.க.வை, தமிழக மக்கள் கருத்தில் கொள்ளமாட்டார்கள்.

    அண்ணாமலை சவால் விட்டுக் கொண்டு இருக்கட்டும். தேர்தல் முடிந்து, ஓட்டு எண்ணிக்கை நடக்கும்போது, பார்த்துக் கொள்ளட்டும். பா.ஜனதா ஆட்சி நடத்தும் மாநிலங்களின் நிலை என்னவாக இருக்கிறது என்று நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். தமிழ்நாடு முன்னேறிய மாநிலங்களில் முக்கியமான ஒரு மாநிலமாக இருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்துறை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதற்குக் காரணம், திராவிட இயக்கங்களின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு இருக்கின்ற, ஆட்சி நடப்பதால்தான்.

    தமிழ்நாட்டில் பா.ஜனதா ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பு ஒருபோதும் உரு வாகாது. அந்த நிலை ஏற்பட்டால், தமிழ்நாட்டை யாருமே காப்பாற்ற முடியாது. இப்போது முதலில் அனைவரும் சேர்ந்து, நமது இந்திய நாட்டை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டவுன் குறுக்குத்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பாளையில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான குழுவினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபடும் அந்த குழுவினர், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக பணம், பரிசு பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகிறதா என்று சோதனை செய்கின்றனர்.

    அந்த வகையில் நேற்று மாலை டவுன் குறுக்குத்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தினர். காரில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் என்பவர் வந்தார். அவரது காரை பறக்கும் படையினர் சோதனை செய்தபோது அதில் ரூ.70 ஆயிரம் இருந்தது.

    அந்த பணம் குறித்து அவரிடம் கேட்டபோது, நெல்லையில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருவதாகவும், வியாபாரம் விற்ற பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால் அதற்குரிய ஆவணம் ஏதும் இல்லாததால், அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பாளையில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • மார்ச் 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது
    • மலையாள சினிமாவில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது

    இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. அன்றைய தினம் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

    டோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கினார். இப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

    இதனையடுத்து, மார்ச் 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. இதனால் சென்னை அணி வீரர்கள் சென்னையில் ஊர் சுற்றி பொழுது போக்கினர்.

    இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் கேப்டானான எம்.எஸ்.டோனி நேற்று இரவு மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்து ரசித்திருக்கிறார். பந்துவீச்சாளர் தீபக் சஹார் உடன் சென்று சென்னை சத்யம் திரையரங்கில் அவர் இப்படத்தை கண்டுகளித்துள்ளார். அப்போது படம் முடிந்து வெளியே வந்த டோனியை பார்த்ததும் ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மலையாள சினிமாவில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ஐம்பது கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் தமிழில் பல முன்னணி ஹீரோக்கள் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை பார்த்து பாராட்டிய நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை திரையில் பார்த்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
    • மராட்டியத்தில் ஒரு தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

    இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தை தவிர மேலும் 4 மாநி லங்களிலும் போட்டியிடுகிறது. தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. இந்த 4 மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

    கேரளாவில் 5 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும், தெலுங்கானாவில் 10 தொகுதிகளிலும், மராட்டியத்தில் ஒரு தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் ஆந்திராவிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    • தந்தையின் உடல்நலனைக் கருத்தில்கொண்டே அரசியலுக்கு வந்தேன்.
    • முன்னாள் முதல்வர் கருணாநிதியை, உதயசூரியன் சின்னத்தை நாங்கள் மதிக்கிறோம்.

    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் அந்த தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேசியதாவது:

    * அரசியலுக்கு வருவேன் என நான் கனவில் கூட எண்ணிப்பார்த்தது இல்லை.

    * தந்தையின் உடல்நலனைக் கருத்தில்கொண்டே அரசியலுக்கு வந்தேன். தந்தைக்கு தலைகுனிவு ஏற்பட்டுவிடக்கூடாது என அரசியலுக்கு வந்தேன் என்று உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.

    * செத்தாலும் எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். நான் சுயமரியாதைக்காரன்.

    * முன்னாள் முதல்வர் கருணாநிதியை, உதயசூரியன் சின்னத்தை நாங்கள் மதிக்கிறோம்.

    * என் அப்பா இதே திமுகவில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார்.

    * மதிமுக தொண்டர்கள் உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்துள்ளனர் என்று கூறினார்.

    • சிவில் வழக்கில் நிவாரணம் கிடைத்தால் அவர் முயற்சி செய்து பார்க்கலாம்.
    • பா.ஜ.க. கூட்டணியில் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டி என்பதுதான் ஓ.பி.எஸ்.சின் நிலைப்பாடாகும்.

    அ.தி.மு.க.வில் ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் சுயேட்சை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.

    அ.தி.மு.க. மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நடத்தி வரும் சட்ட போராட்டத்தை தொடர வேண்டும் என்றால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதே சரியாக இருக்கும் என்கிற கணக்கிலேயே ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் அரசியல் விமர்சகரான தராசு ஷியாமிடம், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பி.எஸ். ஒரு வேளை வெற்றி பெற்றால் அவரால் இரட்டை இலை சின்னத்தை உரிமை கோர முடியுமா? அவரது தற்போதைய நடவடிக்கைகள் பலன் அளிக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வத்தால் இரட்டை இலை சின்னத்தை இப்போதைக்கு பெற முடியாது. ஏனென்றால் உயர்நீதிமன்றத்தில் தடை இருக்கிறது. சிவில் வழக்கில் நிவாரணம் கிடைத்தால் அவர் முயற்சி செய்து பார்க்கலாம்.

    அப்போதும் எதிர் தரப்பு மேல்முறையீட்டுக்கு போகும். பா.ஜ.க. கூட்டணியில் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டி என்பதுதான் ஓ.பி.எஸ்.சின் நிலைப்பாடாகும். அது வெற்றியைத் தேடித் தராது. மேலும் அவரது அணியில் இருந்து பலர் தாய் கட்சியான அ.தி.மு.க.வுக்கு திரும்புவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.76 லட்சம் மதிப்பிலான கடத்தல் மதுபாட்டில்களும் குவியல் குவியலாக பறி முதல் செய்யப்பட்டுள்ளன.
    • சென்னையில் இதுவரை 14 கிலோ தங்கம் பிடிபட்டிருப்பதாக மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி பணப்பட்டு வாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி கடந்த வாரம் சனிக்கிழமை மாலையில் அறிவிக்கப்பட்டது. அப்போதில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

    இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் கடந்த 8 நாட்களாக வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மாலை வரையில் ரூ.11கோடியே 41 லட்சம் பணம் பிடிபட்டு உள்ளது.

    இந்த சோதனையில் மதுபாட்டில்கள், போதை பொருட்கள் உள்ளிட்டவைகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன. கடந்த 8 நாட்களில் மட்டும் ரூ.38 லட்சம் மதிப்பி லான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    ரூ.76 லட்சம் மதிப்பிலான கடத்தல் மதுபாட்டில்களும் குவியல் குவியலாக பறி முதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.13 கோடியே 22 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையில் சென்னையில் நேற்று பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் 7½ கிலோ தங்கம் பிடிபட்டு உள்ளது. தி.நகரில் 5½ கிேலா தங்கமும், சைதாப்பேட்டையில் 2 கிலோ தங்கமும் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கி உள்ளது. சென்னையில் இதுவரை 14 கிலோ தங்கம் பிடிபட்டிருப்பதாக மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
    • கமல்ஹாசன் வரும் 29-ந்தேதி முதல் ஏப். 16-ந்தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-9, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகிறது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

    இந்நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 29-ந்தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார்.

    அவர் வரும் 29-ந்தேதி முதல் ஏப். 16-ந்தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளார். ஈரோட்டில் 29-ந்தேதி பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.

    • சென்னையில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார்.
    • புதுச்சேரி மாநிலத்துக்கு அடுத்த மாதம் 7-ந்தேதி சென்று பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

    கடந்த 22-ந்தேதி திருச்சி, பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சிறுகனூரில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் பேசினார். நேற்று (23-ந்தேதி) தஞ்சை, நாகை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து கொரடாச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அதன்பிறகு இரவு திருச்சி வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

    இன்று சென்னையில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் நாங்குநேரி சென்று அங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இந்த பிரசார பொதுக்கூட்டத்தை மிகப் பிரமாண்டமாக நடத்துவதற்காக மாவட்ட கழக செயலாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    நாங்குநேரி பொதுக்கூட்டத்தை முடித்ததும் 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி, ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

    தொடர்ச்சியாக அடுத்த மாதம் 17-ந்தேதி வரை ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்துக்கு அடுத்த மாதம் 7-ந்தேதி சென்று பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

    ×