என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருநெல்வேலி, கன்னியாகுமரி வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்
    X

    திருநெல்வேலி, கன்னியாகுமரி வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்

    • சென்னையில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார்.
    • புதுச்சேரி மாநிலத்துக்கு அடுத்த மாதம் 7-ந்தேதி சென்று பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

    கடந்த 22-ந்தேதி திருச்சி, பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சிறுகனூரில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் பேசினார். நேற்று (23-ந்தேதி) தஞ்சை, நாகை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து கொரடாச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அதன்பிறகு இரவு திருச்சி வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

    இன்று சென்னையில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் நாங்குநேரி சென்று அங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இந்த பிரசார பொதுக்கூட்டத்தை மிகப் பிரமாண்டமாக நடத்துவதற்காக மாவட்ட கழக செயலாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    நாங்குநேரி பொதுக்கூட்டத்தை முடித்ததும் 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி, ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

    தொடர்ச்சியாக அடுத்த மாதம் 17-ந்தேதி வரை ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்துக்கு அடுத்த மாதம் 7-ந்தேதி சென்று பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

    Next Story
    ×