என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • தனது பையில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
    • பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் வழியாக குதித்தனர்.

    மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டம் பத்னாபூர் பகுதியில், கடந்த ஞாயிறு இரவு, புனேவிலிருந்து புசேடுக்குச் சென்ற பேருந்தில் அமர்ந்திருந்த 50 வயது பயணி ஒருவர் திடீரென்று, தனது பையில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    இதனால் அவர் சம்பவ உடல் கருகி இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் வழியாக குதித்தனர். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி அனைவரையும் வெளியேற்றினார்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றினர். விசாரணையில், இறந்தவரின் பெயர் சுனில் சஜ்ஜன்ராவ் டேல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் புல்தானா மாவட்டத்தின் மெஹ்கர் தாலுகாவின் அரேகான் கிராமத்தில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

    தற்கொலை குறித்த காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. பேருந்தில் இருந்த 40 பயணிகள் பாத்திரமாக உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.   

    • ஃப்ளாப் ட்ரான்சிட் லைட் கோளாறை விமான குழு கண்டறிந்தது.
    • மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.

    மகாரஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து டெல்லி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம், நடுவானில் ஏற்பட்டதொழில்நுடப கோளாறு காரணமாக திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இன்று காலையில், 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் ஃப்ளாப் ட்ரான்சிட் லைட்' (flap transit light) கோளாறை விமான குழு கண்டறிந்த நிலையில் மீண்டும் புனே விமான நிலையத்துக்கே விமானம் திரும்பியது.

    இருப்பினும் அவசர நிலை ஏதும் இல்லை என நிறுவனம் விளக்கம் அளித்தது. மேலும் பயணிகள் பத்திரமாக வெளிற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது. 

    • துர்வாஸ் தர்ஷன்பாட்டீல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
    • ஆவேசமடைந்த துர்வாஸ் தர்ஷன் பாட்டீல் தனது காதலியை அடித்து கொலை செய்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி பகுதியை சேர்ந்த பெண் பக்தி ஜிதேந்திர மாயேகர் (வயது 26).

    இவர் கடந்த 17-ந் தேதி நண்பர் ஒருவரை சந்திக்க செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். மாயேகரின் தோழிகளிடம் விசாரித்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாயேகரின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மாயேகரின் செல்போன் சிக்னல் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் அது கண்டாலா பகுதியை காட்டியது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் துர்வாஸ் தர்ஷன்பாட்டீல் என்பவரை மாயேகர் காதலித்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் துர்வாஸ் தர்ஷன்பாட்டீலை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் பக்தி ஜிதேந்திர மாயேகரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். துர்வாஸ் தர்ஷன்பாட்டீலும், பக்தி ஜிதேந்திர மாயேகரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் திடீரென அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு துர்வாஸ் தர்ஷன்பாட்டீல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

    இதையறிந்த பக்தி ஜிதேந்திர மாயேகர் ஆத்திரமடைந்துள்ளார். சம்பவத்தன்று அவர் இதுதொடர்பாக காதலன் துர்வாஸ் தர்ஷன்பாட்டீலுடன் தகராறு செய்துள்ளார்.

    அப்போது ஆவேசமடைந்த துர்வாஸ் தர்ஷன் பாட்டீல் தனது காதலியை அடித்து கொலை செய்துள்ளார்.

    பின்னர் தனது கூட்டாளிகளான விஸ்வாஸ் விஜய் பவார், சுசாந்த் சாந்தாராம் நரால்கர் ஆகியோருடன் சேர்ந்து பக்தி ஜிதேந்திர மாயேகர் உடலை அம்பாகாட் பகுதியில் உள்ள சாக்கடையில் வீசியதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து அம்பாகாட் பகுதிக்கு சென்ற போலீசார் பக்தி ஜிதேந்திர மாயேகரின் உடலை கைப்பற்றினர்.

    மேலும் அவரது காதலன் துர்வாஸ் தர்ஷன்பாட்டீல் மற்றும் கூட்டாளிகளான விஸ்வாஸ் விஜய் பவார், சுசாந்த் சாந்தாராம் நரால்கர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • இந்தியா, இலங்கையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.
    • கடந்த 2021 டி20 உலகக் கோப்பையிலும் தோனி இந்திய அணி ஆலோசகராக செயல்பட்டிருந்தார்.

    மும்பை:

    இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் விளையாடுகின்றன. தொடரை நடத்தும் அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தானாகவே தகுதி பெற்றன.

    இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை தக்கவைக்கும் நோக்கில் இந்திய அணி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக சுப்மன் கில்லை இந்திய டி20 அணியின் புதிய துணை கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தோனியை பி.சி.சி.ஐ. நிர்வாகம் அணுகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    ஆனாலும், இதற்கு தோனி என்ன முடிவெடுத்துள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

    ஏற்கனவே, எம்.எஸ்.தோனி 2021-ல் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்டார். ஆனால் அந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றோடு நடையை கட்டியது.

    • ஆரம்பத்தில் இருந்தே மனைவியின் நடத்தை மீது விஜய் ரத்தோட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • மனைவியை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டம் வாடி கிராமத்தில் வசித்து வருபவர் விஜய் ரத்தோட் (வயது 35) இவருக்கும் சோனாபூர் தாண்டா கிராமத்தை சேர்ந்த வித்யா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நடந்தது.

    ஆரம்பத்தில் இருந்தே மனைவியின் நடத்தை மீது விஜய் ரத்தோட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு வாய்த்தகராறு முற்றியதால் இனிமேலும் உன்னுடன் வாழ முடியாது என கணவரிடம் கூறி விட்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ரத்தோட் தனது செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் மனைவி புகைப்படத்தை வெளியிட்டு இரங்கல் செய்தியை பதிவிட்டார். இது அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் அவர் மனைவியை தேடி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மனைவியை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. என் புகைப்படத்தை வெளியிட்டு எப்படி இரங்கல் தெரிவிக்கலாம் என கூறி வித்யா கணவரிடம் சண்டை போட்டார்.

    தகராறு முற்றவே விஜய் ரத்தோட் கத்தியால் மனைவி வித்யாவை சரமாரியாக குத்தினார். 12 தடவை அவர் குத்தியதில் வித்யாவின் கழுத்து, வயிறு, முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த வித்யா அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விஜய் ரத்தோட்டை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மாமியார் மற்றும் விஜய் ரத்தோட்டின் தம்பி உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • உங்களுடைய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஏதும் சொல்லப் போவதில்லை.
    • நாங்கள் முடிவு செய்வதில்லை.

    பாஜக கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா உள்ளார். இவர் இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக வேறு தலைவர் நியமிக்கப்பட வேண்டியது உள்ளது. அடுத்த தேசிய தலைவரை தேடும் பணியில் பாஜக மேலிடம் ஈடுபட்டு வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவராக இருப்பார். இதனால் பாஜக தலைவர் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முக்கிய பங்கு வகிக்கும். ஆர்எஸ்எஸ் கைக்காட்டும் நபர்தான் பாஜக-வின் தேசிய தலைவராவார் என்ற பார்வையும் உள்ளது.

    இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 3 நாள் விழா நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசும்போது கூறியதாவது:-

    உங்களுடைய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஏதும் சொல்லப் போவதில்லை (நகைச்சுவையாக). நாங்கள் முடிவு செய்வதில்லை. நாங்கள் முடிவு செய்வதாக இருந்தால், இவ்வளவு காலம் எடுத்திருக்கமாட்டோம். ஆர்எஸ்எஸ் அமைப்பை இயக்குவதில் நான் நிபுணர். அரசை இயக்குவதில் பாஜக நிபுணர். நாங்கள் ஒருவருக்கொருவர் கருத்துகளை மட்டுமே சொல்ல முடியும். எங்கேயும் மோதல் இல்லை. ஆனால், எல்லா பிரச்சனையிலும் ஒரே பக்கமாக இருக்கும் என்பது சாத்தியமற்றது. நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் நம்புகிறோம்.

    இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார்.

    • நல்ல பணிகளை செய்வதில் எங்கள் உதவி தேவைப்பட்டால், பாஜக-வுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் நாங்கள் உதவுகிறோம்.
    • மதம் என்பது தனிப்பட்டவரின் விருப்பத்தின் அடிப்படையிலானது. இதில் எந்த வசீகரமோ அல்லது வற்புறுத்தலோ இருக்கக்கூடாது.

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:-

    * தற்போதைய அரசாங்கத்துடன் மட்டுமல்லாமல், ஒவ்வொரு அரசாங்கத்துடனும் எங்களுக்கு நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது

    * பாஜக-வுடன் எங்கும் மோதல் இல்லை. ஆனால் எல்லாப் பிரச்சினைகளிலும் ஒரே நிலை எடுப்பது சாத்தியமில்லை, நாங்கள் எப்போதும் ஒருவரையொருவர் நம்புகிறோம்.

    * நான் 'ஷாகாக்கள்' நடத்துவதில் நிபுணர், பாஜக அரசாங்கத்தை நடத்துவதில் நிபுணர், நாங்கள் ஒருவருக்கொருவர் பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும்

    * நல்ல பணிகளை செய்வதில் எங்கள் உதவி தேவைப்பட்டால், பாஜக-வுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் நாங்கள் உதவுகிறோம்

    * கல்வி அறிவு மற்றும் திறன்களை வழங்குவதற்காக இருக்க வேண்டும். வேலைகளுக்கு மட்டும் என இருக்கக் கூடாது

    * மதம் என்பது தனிப்பட்டவரின் விருப்பத்தின் அடிப்படையிலானது. இதில் எந்த வசீகரமோ அல்லது வற்புறுத்தலோ இருக்கக்கூடாது.

    * இந்திய பிரிவினையை ஆர்எஸ்எஸ் எதிர்க்கவில்லை என்று சொல்வது தவறு. நாங்கள் அதை எதிர்த்தோம். ஆனால் அப்போது ஆர்எஸ்எஸ்-க்கு போதுமான பலம் இல்லை

    * மதமாற்றம், சட்டவிரோத இடம் பெயர்வு மக்கள் தொகை ஏற்றத்தாழ்வுக்கு முக்கிய காரணங்கள்

    * சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் சமூகமும் அதன் பங்கைச் செய்ய வேண்டும்.

    * சட்டவிரோத குடியேறிகளுக்கு நாம் வேலை கொடுக்கக்கூடாது. முஸ்லிம்கள் உட்பட நமது சொந்த மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்

    * அனைத்து இந்திய குடிமக்களும் மூன்று குழந்தைகளைப் பெறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும், இதனால் மக்கள் தொகை போதுமானதாகவும் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.

    * அகண்ட பாரதம் என்பது வாழ்க்கையின் உண்மை. நமது கலாச்சாரமும் முன்னோர்களும் ஒன்றே என்பதை நாம் உணர வேண்டும்

    * எல்லோரும் சமமாக இருக்கும்போது இந்து- முஸ்லிம் ஒற்றுமை பற்றி ஏன் பேச வேண்டும்?. நாம் அனைவரும் இந்தியர்கள்.

    * இஸ்லாம் இங்கே இருக்காது என்று இந்து சிந்தனை கூறவில்லை.

    * சாலைகள், இடங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்கள் வைக்கக்கூடாது. அவை முஸ்லிம்களின் பெயர்களால் சூட்டப்படக் கூடாது என்று நான் கூறவில்லை.

    * மத அடிப்படையில் உட்பட யாரையும் தாக்குவதில் ஆர்எஸ்எஸ் நம்பிக்கை கொள்ளவில்லை

    * காலாவதியானவை அனைத்தும் ஒழிய வேண்டும், சாதி அமைப்பு ஒரு காலத்தில் இருந்தது, ஆனால் இன்று அதற்கு எந்த சம்பந்தமும் இல்லை

    * அரசியலமைப்புச் சட்டத்தின்படி கட்டாயப்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை ஆர்எஸ்எஸ் முழுமையாக ஆதரிக்கிறது, மேலும் அது தேவைப்படும் காலம் வரை அதை ஆதரிப்போம்.

    • விநாயகர் சிலைகளுக்காக அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டு சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
    • விநாயகர் சிலை ஒன்றின் கையில் பூனை ஒன்று அமைதியாக படுத்து தூங்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, நாக்பூர், நாசிக் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டன.

    மேலும் விநாயகர் சிலைகளுக்காக அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டு சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் உள்ள விநாயகர் சிலை ஒன்றின் கையில் பூனை ஒன்று அமைதியாக படுத்து தூங்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், விநாயகர் சிலையின் கையில் பூனை தூங்கும் காட்சிகள் உள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், சகோதரர் பாதுகாப்பான கைகளில் இருக்கிறார் என பதிவிட்டார். மற்றொருவர், அவர்கள் ஆறுதல் இருக்கும் இடத்தில் குடியேறுகிறார்கள் என பதிவிட்டிருந்தார்.



    • படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 10 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மும்பை அருகே பால்கர் மாவட்டத்தில் உள்ள விராரில் 4 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

    வசாய் தாலுகாவில் உள்ள நாரங்கி சாலையில் சாமுண்டா நகருக்கும் விஜய் நகருக்கும் இடையில் அமைந்துள்ள ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பின் நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி நள்ளிரவில் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 25 நபர்கள் வரை வசித்த நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 10 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

    • தான் நம்பும் பாதையைப் பின்பற்றுவதில் நம்பிக்கை கொண்டவர்.
    • வேறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டவர்களை மதிப்பவர்தான் இந்து.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடு வகையில் 3 நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் "இந்து என்பவர் யார்? தான் நம்பும் பாதையைப் பின்பற்றுவதில் நம்பிக்கை கொண்டவர். வேறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டவர்களை மதிப்பவர்தான்" என்றார்.

    • ரிசர்வ் வங்கியும் பொருளாதாரத்திற்குத் தேவையான ஆதரவை அளிக்கும்.
    • அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுகளைத் தரும் என நம்புகிறோம்.

    ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு தண்டனையாக இந்தியா மீது அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது. ஏற்கனவே விதித்த 25 வரியுடன் சேர்ந்து தற்போது வரிச்சுமை 50 சதவீதம் ஆகி உள்ளது. இந்த கூடுதல் வரிவிதிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.

    இந்நிலையில் இதன் விளைவுகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார்.

    நேற்று, மும்பையில் நடைபெற்ற வங்கிகள் மாநாட்டில் பேசிய அவர், "இந்த வரிவிதிப்பால், ரத்தினக் கற்கள், நகைகள், ஜவுளி, ஆடைகள் மற்றும் இறால் ஏற்றுமதி போன்ற துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.

    இந்த பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கியும் பொருளாதாரத்திற்குத் தேவையான ஆதரவை அளிக்கும்.

    ஏற்கெனவே, பொருளாதாரம் புழங்குவதற்கு வசதியாக ரெப்போ வட்டி விகிதத்தை 100 புள்ளிகள் குறைத்துள்ளோம்.

    அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுகளைத் தரும் என்றும் இந்த வரிவிதிப்பால் இந்தியாவின் வர்த்தக உறவுகள் பாதிக்கப்படாது நாங்கள் நம்புகிறோம்.

    ஆகஸ்ட் 15, 2025 நிலவரப்படி இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 695 பில்லியன் டாலர் ஆக உள்ளது. இது சுமார் 11 மாத இறக்குமதிக்கு போதுமானது.

    இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    • ராகுல் காந்தி ஒரு தொடர் பொய்யர் என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
    • அவர் இடைவிடாமல் தொடர்ந்து பொய்யை பரப்பி வருகிறார்.

    பாஜக-வுக்கு எதிராக வாக்கு திருட்டு குற்றச்சாட்டை தொடர்ந்து கூறிவரும் ராகுல் காந்தி, தொடர் பொய்யர் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ் தாக்கியுள்ளார்.

    இது தொடர்பாக பட்நாவிஸ் கூறியதாவது:-

    ராகுல் காந்தி ஒரு தொடர் பொய்யர் என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அவர் இடைவிடாமல் தொடர்ந்து பொய்யை பரப்பி வருகிறார். மகாராஷ்டிராவில் உள்ள தலைவர்கள், ராகுல் காந்தி உண்மையைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார் என திடீரென உணர்வதை பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது. பொய்களால் கட்டிய கோட்டை இடிந்து விழுகிறது.

    மக்களின் வாக்குகளை பெற, மக்களிடம் சென்று அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதை அவர்கள் உணராவிட்டால், அவர்களின் பொய்கள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே.

    இவ்வாறு பட்நாவிஸ் தெரிவித்தார்.

    ×