என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஹர்மன்பிரீத் கவுர் அதிரடி: குஜராத்தை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
    X

    ஹர்மன்பிரீத் கவுர் அதிரடி: குஜராத்தை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

    • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 192 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 193 ரன்கள் எடுத்து வென்றது.

    நவி மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் குஜராத்-மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது.

    கனிகா அஜா 35 ரன்னும், பெத் மூனி 33 ரன்னும் எடுத்தனர். ஜார்ஜியா வேரம் 43 ரன்னும், பார்தி புல்மாலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அமன்ஜோத் கவுர் அதிரடியாக ஆடி 26 பந்தில் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    4வது விக்கெட்டுக்கு ஹர்மன்பிரீத் கவுருடன் நிகோலா கேரி இணைந்து பொறுப்புடன் ஆடி ரன்களைக் குவித்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், மும்பை அணி 19.3 ஓவரில் 193 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி 2வது வெற்றியைப் பதிவு செய்தது. ஹர்மன்பிரீத் கவுர் 71 ரன்னும், நிகோலா கேரி 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    Next Story
    ×