என் மலர்
கிரிக்கெட் (Cricket)

லாரா வோல்வார்ட் போராட்டம் வீண்: டெல்லியை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 209 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
நவி மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 4-வது லீக் ஆட்டத்தில் குஜராத்-டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 209 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. சோபி டிவைன் 95 ரன்னும், அஷ்லே கார்ட்னர் 49 ரன்னும் எடுத்தனர்.
டெல்லி அணி சார்பில் நந்தனி ஷர்மா 5 விக்கெட்டும், சினேலி ஹென்றி, ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை லீசெல் லீ 54 பந்தில் 86 ரன்கள் எடுத்தார். லாரா வோல்வார்ட் 38 பந்தில் 77 ரன்கள் குவித்து கடைசி வரை போராடி அவுட்டானார்.
இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 4 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி 2வது வெற்றியைப் பதிவு செய்தது.






