என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • சிறுவனை காப்பாற்ற அடுத்தடுத்து இறங்கிய சிறுவர்களும் சேற்றில் சிக்கி உயிரிழப்பு.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    கர்நாடகாவில் திம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்க சென்ற 4 பள்ளி சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    ஒரே கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரு சிறுவன் சேற்றில் சிக்கிய நிலையில், அந்த சிறுவனை காப்பாற்ற அடுத்தடுத்து இறங்கிய சிறுவர்களும் சேற்றில் சிக்கிய பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் ஜீவன் (13), சாத்விக் (11), விஷ்வா (12), பிருத்வி (12) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆதித்யா எல்-1 விண்கலம் சூரிய வெடிப்பை படம்பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
    • கடந்த 2003-ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சூரியகாந்த புயல் இதுவாகும்.

    பெங்களூரு:

    ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இஸ்ரோ விண்ணில் ஏவியது.

    பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ. துாரம், 125 நாட்கள் பயணித்து சூரியனுக்கு அருகில் உள்ள எல் 1 எனப்படும் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நடப்பு ஆண்டு ஜனவரியில் எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடைந்தது.

    இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 10 மற்றும் 12-ம் தேதிகளில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை புகைப்படமாக எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

    கடந்த 2003-ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சூரியகாந்த புயல் இதுவாகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • ரேவண்ணாவை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
    • விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ தொடர்பாக ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தேடிப்படும் நபராக அறிவிக்க்ப்பட்டு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பிரஜ்வாலின் தந்தையும், எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகியோர் மீது வீட்டு பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மேலும் பிரஜ்வாலுடன் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவத்திலும் ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரேவண்ணாவை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி முன்பு வந்தது.

    இந்நிலையில், பெண்ணை கடத்திய வழக்கில், ஜேடிஎஸ் எம்எல்ஏ ஹெச்.டி ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, ஹெச்.டி. ரேவண்ணா ரூ.5 லட்சம் மதிப்பிலான பிரமாண பத்திரம் தாக்கல் செய்து ஜாமின் பெற்றுக்கொள்ள, பெங்களூரு மக்கள் பிரதிநிதி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    • ஐதராபாத்தில் இருந்து வனபர்த்தி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்மீது பயங்கரமாக மோதியது.
    • போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

    பெங்களூரு:

    கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பவித்ரா ஜெயராம். தெலுங்கு தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் அருகே காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஐதராபாத்தில் இருந்து வனபர்த்தி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் உடன் பயணித்த பவித்ரா ஜெயராமின் உறவினர் அபேக்ஷா, சக நடிகர் சந்திரகாந்த், டிரைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் உள்ள சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தபோது இந்த விபத்து நேர்ந்தது. போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

    • இதுதொடர்பாக 3 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
    • அதே நேரம் வைரலான இந்த புகைப்படத்தால் பயனர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

    பெங்களூரில் உள்ள காய்கறி கடை ஒன்றில் கோபம் அடைந்த பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிகாரிகா என்ற பயனர் எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக 3 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், காய்கறி கடையில் கோபம் அடைந்த பெண்ணின் புகைப்படம் உள்ளது. அதன் அருகில் ஒரு மரத்திலும் அந்த கோபக்கார பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    இந்த புகைப்படங்கள் எதற்காக அங்கு இடம்பெற்றுள்ளது என்ற விபரங்கள் வெளியாகவில்லை. அதே நேரம் வைரலான இந்த புகைப்படத்தால் பயனர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்த புகைப்படத்தின் பின்னால் ஏதேனும் கதை உள்ளதா? என ஒரு பயனரும், இந்த படம் போட்டோஷாப் செய்யப்பட்டதா? என மற்றொரு பயனரும் கேள்வி எழுப்பி உள்ளனர். சில பயனர்கள் கேலியான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமேதா, அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவை வீடியோ எடுத்து பதிவிட அது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளுடன் வைரலாகியது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பரவசமடைந்தனர்.

    சிலர் தங்களது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடுவதை காண முடியும். அதே நேரம் தனது மகளின் பிறந்தநாளையொட்டி ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவை பலூன்களால் அலங்கரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பெங்களூருவை சேர்ந்த சுமேதா உப்பல் என்ற பயனர் எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோ முழுவதும் இளஞ்சிவப்பு நிற பலூனால் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் உள்ளது. இதுதொடர்பாக அவர் ஆட்டோ டிரைவரிடம் கேட்ட போது, இன்று எனது மகளின் பிறந்தநாள் என்பதால் ஆட்டோவை அலங்கரித்துள்ளேன் என கூறி உள்ளார். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சுமேதா, அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவை வீடியோ எடுத்து பதிவிட அது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளுடன் வைரலாகியது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பரவசமடைந்தனர். இதுபோன்ற செயல்கள் கொண்டாட்டங்களை விட பெரியது என பயனர்கள் பதிவிட்டனர்.


    • பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி சீருடை அணியாமல், சாதாரண உடையுடன் வந்த போலீசார் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
    • இந்த விவகாரம் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், பென் டிரைவ் வெளியானது. இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என்றும், அவர்கள் பெயர் பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

    இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 9 பெண்கள் புகார் அளித்துள்ளனர். அவர்களில் 2 பெண் அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். மற்ற பெண்கள் புகார் அளிக்க தயங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி கட்டாயப்படுத்தி போலீஸ் பெயரில் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளது.

    இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி சீருடை அணியாமல், சாதாரண உடையுடன் வந்த போலீசார் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பொய் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். செல்போனில் போலீசார் எனக்கூறி புகார் அளிக்கும்படி தொல்லை கொடுத்துள்ளனர்.

    இதுபற்றி 3 பெண்களும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து, தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுள்ளனர், என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

    பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று விசாரணை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். அவர்களை பொய் புகார் செய்ய கட்டாயப்ப டுத்துகிறார்கள். கடத்தி செல்லப்பட்டு மீட்கப்பட்ட பெண்ணை நீங்கள் எங்கே வைத்திருந்தீர்கள். ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. எல்லோரும் சட்டத்தை மதிக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு புகார் செய்ய மறுக்கும் பெண்கள் மீது விபச்சார வழக்குகள் போடுவதாக மிரட்டப்படுகின்றனர். இதனால் அச்சுறுத்தலுக்கு பயந்து பெண்கள் போலீசில் பொய் புகார் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெங்களூருவில் நேற்று மாலையில் திடீரென்று மழை பெய்தது.
    • பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.

    பெங்களூரு:

    பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தநிலையில் 11 மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. பெங்களூருவை பொறுத்தவரையில் 93 சதவீதத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் காலை முதல் மதியம் வரை வெயில் வறுத்தெடுக்கிறது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.

    அதன்படி நேற்று பெங்களூரு நகரில் 93.56 சதவீதம் வெயில் பதிவாகி இருந்தது. இதனால் காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த வெயிலால் மக்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.

    பெங்களூருவில் நேற்று மாலையில் திடீரென்று மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த இந்த மழையால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

    கன மழையால் இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி விட்டு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களது வாகனங்களில் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். பெங்களூருவில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

    இந்தநிலையில் பெங்களூருவில் பெய்த பலத்த கனமழை, மோசமான வானிலை காரணமாக பெங்களூருவில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

    பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. வெளிநாட்டு, உள்நாட்டு விமானங்கள் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

    5 வெளிநாட்டு விமானங்கள், 8 உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு கார்கோ விமானம் சென்னையில் தரையிறங்கின. பின்னர் பெங்களூருவில் வானிலை சீரடைந்ததும் இன்று அதிகாலை 3 மணிக்கு அந்த விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.

    • ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
    • போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ தொடர்பாக ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தேடப்படும் நபராக அறிவிக்க்ப்பட்டு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பிரஜ்வா லின் தந்தையும், எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகியோர் மீது வீட்டு பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்ப ட்டது. மேலும் பிரஜ்வாலுடன் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவத்திலும் ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரேவண்ணாவை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று மாலை பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    இந்த நிலையில் ரேவண்ணாவிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் மேலும் 7 நாட்கள் காவலை நீட்டிக்குமாறு சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற நீதிபதி ரேவண்ணாவை வருகிற 14-ந் தேதி வரை விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்திரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் ரேவண்ணாவை சிறையிலிருந்து அழைத்துச் சென்று மீண்டும் விசாரணை நடத்துகிறார்கள்.

    இதற்கிடையே ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வால் ரேவண்ணா 7 நாட்கள் காலஅவகாசம் கேட்டிருந்தார். அந்த காலஅவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து சர்வதேச அளவில் பிரஜ்வால் ரேவண்ணாவை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பிரஜ்வால் ரேவண்ணா எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு திரும்பலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய விமான நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    • சர்வதேச அளவில் பிரஜ்வால் ரேவண்ணாவை போலீசார் தேடிவருகிறார்கள்.
    • விமான நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ தொடர்பாக ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தேடிப்படும் நபராக அறிவிக்க்ப்பட்டு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பிரஜ்வாலின் தந்தையும், எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகியோர் மீது வீட்டு பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரஜ்வாலுடன் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவத்திலும் ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரேவண்ணாவை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று மாலை பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு (வியாழக்கிழமை) நீதிபதி ஒத்தி வைத்தார். அதனால் எச்.டி.ரேவண்ணா சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருவாரா? இல்லையா? என்பது இன்று தெரியவரும்.

    இதற்கிடையே ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வால் ரேவண்ணா 7 நாட்கள் காலஅவகாசம் கேட்டிருந்தார். அந்த காலஅவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து சர்வதேச அளவில் பிரஜ்வால் ரேவண்ணாவை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பிரஜ்வால் ரேவண்ணா எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு திரும்பலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய விமான நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    • கோலார் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பருவ மழைக்கு முந்தைய மழை பெய்து வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசி வந்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் வறண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. வெப்ப அலை காரணமாக வயதானவர்கள் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரு நகரில் மாலை நேரத்தில் கொட்டிய மழை காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சுரங்கப்பாதைகள், நடைபாதைகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதே போல் குடகு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குடகு மாவட்டம் மடிகேரி பகுதியில் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மழையில் நனைந்தபடி விளையாடினர்.

    இதே போல் கோலார் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான கடைகளின் மேற் கூரைகள் பறந்து சென்றன. முலப்பாகிலு தாலுகா ஹனுமனஹள்ளியில் 13.4 செ.மீ மழை பெய்தது. இந்த மழை காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும் பல்வேறு வீடுகளை சூழ்ந்தும் மழை தண்ணீர் நின்றது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்றினர்.

    இதற்கிடையே மேலும் 2 நாட்களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பருவ மழைக்கு முந்தைய மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் இதே வானிலை நீடிக்கும். பகலில் வெயில் மற்றும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்.

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் எஸ்சி/எஸ்டி மக்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது.

    இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், எஸ்சி/எஸ்டி சமூகத்திற்கு எதிராக கர்நாடக பாஜக வெளியிட்ட வீடியோ தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா ஆகியோரை 7 நாட்களுக்குள் பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு கர்நாடக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    கர்நாடக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்கள் குறித்து வெளியான அனிமேஷன் வீடியோவை உடனடியாக நீக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டது. இதனையடுத்து எக்ஸ் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×