மகளின் பிறந்தநாளில் பலூனால் ஆட்டோவை அலங்கரித்த டிரைவர்

சுமேதா, அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவை வீடியோ எடுத்து பதிவிட அது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளுடன் வைரலாகியது.வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பரவசமடைந்தனர்.
மகளின் பிறந்தநாளில் பலூனால் ஆட்டோவை அலங்கரித்த டிரைவர்
Published on

சிலர் தங்களது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடுவதை காண முடியும். அதே நேரம் தனது மகளின் பிறந்தநாளையொட்டி ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவை பலூன்களால் அலங்கரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூருவை சேர்ந்த சுமேதா உப்பல் என்ற பயனர் எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோ முழுவதும் இளஞ்சிவப்பு நிற பலூனால் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் உள்ளது. இதுதொடர்பாக அவர் ஆட்டோ டிரைவரிடம் கேட்ட போது, இன்று எனது மகளின் பிறந்தநாள் என்பதால் ஆட்டோவை அலங்கரித்துள்ளேன் என கூறி உள்ளார். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சுமேதா, அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவை வீடியோ எடுத்து பதிவிட அது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளுடன் வைரலாகியது.

வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பரவசமடைந்தனர். இதுபோன்ற செயல்கள் கொண்டாட்டங்களை விட பெரியது என பயனர்கள் பதிவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com