என் மலர்
நீங்கள் தேடியது "Solar magnetic storm"
- ஆதித்யா எல்-1 விண்கலம் சூரிய வெடிப்பை படம்பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
- கடந்த 2003-ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சூரியகாந்த புயல் இதுவாகும்.
பெங்களூரு:
ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இஸ்ரோ விண்ணில் ஏவியது.
பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ. துாரம், 125 நாட்கள் பயணித்து சூரியனுக்கு அருகில் உள்ள எல் 1 எனப்படும் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நடப்பு ஆண்டு ஜனவரியில் எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடைந்தது.
இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 10 மற்றும் 12-ம் தேதிகளில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை புகைப்படமாக எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சூரியகாந்த புயல் இதுவாகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.






