விபத்தில் பலியான கன்னட நடிகை

ஐதராபாத்தில் இருந்து வனபர்த்தி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்மீது பயங்கரமாக மோதியது.போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
விபத்தில் பலியான கன்னட நடிகை
Published on

பெங்களூரு:

கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பவித்ரா ஜெயராம். தெலுங்கு தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் அருகே காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஐதராபாத்தில் இருந்து வனபர்த்தி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் உடன் பயணித்த பவித்ரா ஜெயராமின் உறவினர் அபேக்ஷா, சக நடிகர் சந்திரகாந்த், டிரைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் உள்ள சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தபோது இந்த விபத்து நேர்ந்தது. போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com