என் மலர்
இந்தியா
- NCERT பாடப் புத்தகத்தில் 'நீதித்துறையில் ஊழல்' என்ற புதிய தலைப்பில் இடம் பெற்றுள்ளது
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.
8ம் வகுப்பு NCERT பாடப் புத்தகத்தில் 'நீதித்துறையில் ஊழல்' என்ற புதிய தலைப்பில் இடம் பெற்றுள்ள கருத்துக்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து நீதித்துறையின் தலைவராக தனது எதிர்ப்பை பதிவு செய்வதாக பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், "நீதிமன்றத்தை அவமதிக்க நினைப்பவர்களை எப்படி கையாள வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றும், இதில் தவறு செய்தவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யும் எனவும் இது ஒரு திட்டமிட்ட சதி போலத் தோன்றுவதாகவும் காட்டமாக தெரிவித்தார்.
- தமிழகத்தில் வனத்துறையினர் 10 கடலோர மாவட்டங்களில் 49 ஆமைகள் இனப்பெருக்க மையங்களை அமைத்துள்ளனர்.
- கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட மற்றொரு ஆமையான மேகலை 2 முறை திரும்பி வந்து 211 முட்டையிட்டு இருக்கிறது.
சோழிங்கநல்லூர்:
"ஆலிவ் ரிட்லி"எனப்படும் கடல் ஆமைகள் ஆண்டு தோறும் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழக கடற்கரை பகுதிகளுக்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.
சென்னை கடற்கரைக்கு வரும் ஏராளமான ஆமைகள் சமீபகாலமாக இறப்பது அதிகரித்து வருகின்றன. ஆமைகள் கரை நோக்கி வரும்போது மீன்பிடி படகுகளில் அடிபட்டும், வலைகளில் சிக்கியும் அதிக அளவில் இறக்கின்றன. இதையடுத்து ஆமைகள் மற்றும் அதன் முட்டைகளை பாதுகாக்க வனத்துறையினர் தன்னார்வலர்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடற்கரையில் உள்ள ஆமை முட்டைகளை சேகரித்து அதனை குஞ்சு பொரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று பாதுகாத்து வருகின்றனர். பின்னர் குஞ்சு பொரித்ததும் அதனை கடலில் விடுகிறார்கள்.
அதன்படி இந்த ஆண்டு வனத்துறையின் மேற்பார்வையில் உள்ள பெசன்ட் நகர் குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட முட்டைகளில் இருந்து 46 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் பொரித்து உள்ளன. நல்ல நிலையில் இருந்த ஆமை குஞ்சுகள் முதல் கட்டமாக பெசன்ட்நகர் கடலில் விடப்பட்டது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, 94 முட்டைகள் பாதுகாக்கப்பட்டதில் தற்போது குஞ்சுகள் வெளிவந்து உள்ளன. மீதமுள்ள முட்டைகளில் இருந்து இன்னும் ஓரிரு நாளுக்குள் ஓடுகளை உடைத்துகொண்டு ஆமை குஞ்சுகள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் வனத்துறையினர் 10 கடலோர மாவட்டங்களில் 49 ஆமைகள் இனப்பெருக்க மையங்களை அமைத்துள்ளனர். இதுவரை நகரின் கடற்கரைகளில் ஆமைகள் முட்டையிடும் 209 இடங்கள் அடையாளம் காணப்பட்டு 24 ஆயிரத்து 531 முட்டைகள் சேகரிக்கப்பட்டது.
அவை குஞ்சு பொரிப்பகங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெசன்ட்நகர் மற்றும் மெரினா கடற்கரைகளில் 18 இடங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகளை வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேகரித்து உள்ளனர்.
பெசன்ட் நகர் கடற்கரையில் விடுவிக்கப்பட்ட கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட கயல் என்ற ஆமை சென்னை கடற்கரையில் 3 முறை திரும்பி வந்து முட்டையிட்டுள்ளது. இந்த சீசனில் மட்டும் 389 முட்டையிட்டு இருக்கிறது. இந்த ஆமை தெற்கு நோக்கி சென்ற பிறகும், முட்டையிட மீண்டும் சென்னையையே தேர்ந்தெடுத்து உள்ளது.
இதேபோல் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட மற்றொரு ஆமையான மேகலை 2 முறை திரும்பி வந்து 211 முட்டையிட்டு இருக்கிறது. ஆமைகள் ஏற்கனவே இருந்த கடற்கரைக்கு திரும்பி வரும் என்பது தற்போது உண்மையாகி உள்ளது என்றார்.
- கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு சிறிய அளவிலான ஓ.டி.டி. தளங்களைக் கண்காணித்து வருகிறது.
- மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு எதிராக இந்தத் தளங்கள் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் கீழ், ஆபாசமான தகவல்களை மின்னணு முறையில் பரப்புவது தணடனைக்குரிய குற்றமாகும். கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு இத்தகைய சிறிய அளவிலான ஓ.டி.டி. தளங்களைக் கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் ஆபாசமான காட்சிகளை ஒளிபரப்பியதாகக் கூறி, 5 ஓ.டி.டி. தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு எதிராக இந்தத் தளங்கள் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, சந்தாதாரர்களை கவர்வதற்காக அநாகரீகமான மற்றும் வக்கிரமான காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் அவரது மகள் ஆண்டாளிடம் கேட்டறிந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. அதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்ல கண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உடல் நலம் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.
செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு கண்விழித்து பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இன்று காலையிலும் அதே நிலை நீடித்து வருகிறது.
நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஆண்டாளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
இந்நிலையில் நல்லகண்ணு உடல்நிலை குறித்து த.வெ.க. தலைவர் விஜய் நலம் விசாரித்தாக தகவல் வெளியாகி உள்ளது. நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து விஜய் கேட்டறிந்தார்.
- தனியார் பேருந்தை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளி நேரத்தில் அரசு பேருந்துகள் அதிகளவு இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலூகா, வ.உ.சி நகரைச்சேர்ந்தவர் அழகர். தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் புவியரசு (வயது 15). இவர் அருகில் வேங்கடாகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தூய வளனார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
தினமும் தனது வீட்டில் இருந்து பேருந்தில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். ஒருசில சமயங்களில் அவரது பெற்றோர் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு நடைபெறுவதால் புவியரசு பெற்றோரிடம் கூறிவிட்டு, அவர்களிடம் ஆசீர்வாதமும் வாங்கி காலையிலேயே பள்ளிக்கு புறப்பட்டார்.
பின்னர் அவர் ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு வேங்கடாகுளம் வழியாக செல்லும் தனியார் பேருந்தில் ஏறி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். காலை நேரம் என்பதால் அந்த பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் வியாபாரிகள் என 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மாணவர் புவியரசு முன்பக்க படிக்கட்டின் மேல் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அந்த பேருந்து ஆலங்குடியை அடுத்த மங்களாபுரம் அருகே குப்பக்குடி பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக பேருந்தில் இருந்து புவியரசு படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு அதிலிருந்த பயணிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து புவியரசுவை சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் புவியரசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் புவியரசுவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குடியில் இருந்து செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதாகவும் இந்த வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே போல் பள்ளி நேரத்தில் அரசு பேருந்துகள் அதிகளவு இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிக்கு சென்ற மகன் இறந்தது குறித்த அறிந்த அவரது பெற்றோர் கதறி அழுதவாறு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.
- கட்சி நிர்வாகிகளும் 2 அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
- மனு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது.
சென்னை:
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் எதிரும் புதிருமாக உள்ளனர்.
கட்சி நிர்வாகிகளும் 2 அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பா.ம.க.வின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரியும், கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க கோரியும் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டாக்டர் ராமதாஸ் தரப்பில், "கட்சியின் தலைவராக நிறுவனர் ராமதாஸ்தான் உள்ளார். அவர் அனுமதியின்றி கட்சியின் பெயர் உள்ளிட்டவைகளை பிறர் பயன்படுத்த முடியாது. தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் டாக்டர் அன்புமணி இதை பயன்படுத்த முடியாது. " என்று வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.தர்மபிரபு, டாக்டர் ராமதாஸ் மனு குறித்து அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கை மார்ச் 9-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
- அவர்களிடம் ரூ.5000 கோடி இருக்கலாம், ரூ.10,000 கோடி இருக்கலாம்
- நம்மிடம் நம்ம தலைவரின் முகம் இருக்கிறது.
சென்னை வில்லிவாக்கத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் தவெக நிர்வாகிகளிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், "உங்கள் மீது யாராவது கை வைத்தால், ஆயிரம் இல்லை ரெண்டாயிரம் தவெக தொண்டர்கள் அடுத்த 15 நிமிடங்களில் உங்களுடன் வந்து நிற்பார்கள். யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம்.
அவர்களிடம் ரூ.5000 கோடி இருக்கலாம், ரூ.10,000 கோடி இருக்கலாம், மந்திரியா இருக்கலாம்... ஆனா நம்மிடம் நம்ம தலைவரின் முகம் இருக்கிறது. அதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் நாங்கள் எல்லோரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்" என்று தெரிவித்தார்.
- அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தாமதம் ஏன்?
- வழக்குப்பதியாமல் தாமதம் செய்வது குற்றவாளிகளுக்கு துணைபோகும் செயல்.
நகராட்சி நிர்வாகத்துறையில் 2516 பணியிடங்களை நிரப்பியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை ஆதாரங்கள் அளித்திருந்தது. அந்த அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ரூ.1,020 கோடி நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் தொடர்பாக CBI-ஐ நாட உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. சார்பில் எம்.பி. இன்பதுரை கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில்,
* ஐகோர்ட் உத்தரவிட்டும் நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் தொடர்பாக வழக்குப்பதியாதது ஏன்?
* அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தாமதம் ஏன்?
* வழக்குப்பதியாமல் தாமதம் செய்வது குற்றவாளிகளுக்கு துணைபோகும் செயல்.
* ஐகோர்ட் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை தன் கடமையை செய்யாததால் அ.தி.மு.க. CBI-ஐ நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏதோ ஒரு போலீஸ் அதிகாரியை மாற்ற வேண்டும் என அமைச்சர் சொல்லி இருந்தார்.
- ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்ன நடந்தது என தெரியவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தான் முதலமைச்சர் ஆக முன்வந்தது குறித்து சசிகலா பேசினார்.
சசிகலா பேசியதாவது:-
ஜெயலலிதாவின் பிறந்தநாளில் நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும் என்பதற்காகதான் இந்த கூட்டம்.
ஜெயலலிதா மரணத்துக்கு பின்பு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். அவர் மீது குறைகூற ஒன்றும் இல்லை. அவர் ஒழுங்காகத்தான் செயல்பட்டார். சில நாட்களில் ஒரு கும்பல் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்து என்னிடம், அவர் சரியில்லை என்றார்கள். அதற்கு நான். நன்றாகதானே செயல்படுகிறார் என்று கூறினேன்.
நீங்கள் இப்போதே பொதுச்செயலாளராக வேண்டும் எனவும். முதலமைச்சர் ஆக வேண்டும் எனவும் என்னிடம் கூறினார்கள். காலையிலும், மாலையிலும் நடந்தார்கள். பொதுக்குழுவை கூட்டி, என்னை பொதுச்செயலாளராக நியமனம் செய்து, அலுவலகத்துக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
ஒரு நாள் ஓ.பன்னீர்செல்வத்தையும், அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து போயஸ் கார்டன் வீட்டில் வைத்து அனைவரிடமும் கேட்டேன். ஏதோ ஒரு போலீஸ் அதிகாரியை மாற்ற வேண்டும் என அமைச்சர் சொல்லி இருந்தார்.
அவர் நல்ல அதிகாரி இல்லை என்றும், ஜெயலலிதா இருக்கும்போது ஒதுக்கி வைக்கப்பட்டவர் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
உடனே நான், ஜெயலலிதா சரியில்லை என ஒதுக்கியவரை எப்படி நியமிக்க முடியும்? இது எல்லாம் முதலமைச்சர் மீது ஒரு குறையா? என்று சொன்னேன். இதை இப்படியேவிட்டால் பிரச்சனை பெரிதாக ஆகும் என எண்ணி நான் முதலமைச்சர் ஆக முடிவுக்கு வந்தேன். அதற்குள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. திடீரென ஜெயலலிதா சமாதியில் தர்ம யுத்தம் என அமர்ந்துவிட்டார். அதை யாரோ சொல்லி இருக்கிறார்கள் என்றார்.
- வயது மூப்பின் காரணமாக நல்லகண்ணு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது.
- நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. அதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்ல கண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உடல் நலம் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.
செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு கண்விழித்து பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இன்று காலையிலும் அதே நிலை நீடித்து வருகிறது. அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். ஆனாலும் வயது மூப்பு என்பது தவிர்க்க முடியாத இயற்கையான செயலாகும். அதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நல்ல கண்ணுவின் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அதனை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற வதந்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதற்கிடையில் நல்ல கண்ணுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.
- நேற்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
- எனக்கும், மாமியாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளன்குளம் காலனி மேலத்தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மனைவி வெள்ளையம்மாள் (வயது 90).
இந்த தம்பதிக்கு பழனி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் அருணாச்சலமும், பழனியும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், வெள்ளையம்மாள், தனது மருமகள் வசந்தா (60) மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
நேற்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
உடனே தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிராஜா மற்றும் மானூர் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின்பேரில் அவரது மருமகள் வசந்தாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது வாக்குமூலமாக கூறுகையில், எனது மாமியார் வயது முதிர்வால் நான் வீட்டில் இருக்கும் போதெல்லாம் என்னை சம்பந்தமே இல்லாமல் திட்டிக்கொண்டே இருப்பார்.
வயல் வேலைக்கு அல்லது வேறு எங்காவது வேலை நிமித்தமாக சென்று வரவோ அல்லது சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு வீட்டுக்கு வர கொஞ்சம் நேரமாகிவிட்டால், சந்தேகப்பட்டு பேசுவார். இதனால் எனக்கும், மாமியாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.
இந்நிலையில் நேற்றும் சம்பந்தமில்லாமல் என்னை திட்டியதால் ஆத்திரம் அடைந்த நான் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தேன் என்றார்.
இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் கிளைச்சிறையில் அடைத்தனர்.
- தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமை தொகையை நிறுத்த முயற்சி மேற்கொண்டனர்.
- பா.ஜ.க. இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி இருக்காது, வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தால் அங்கு பா.ஜ.க. இருக்காது.
நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமை தொகையை நிறுத்த முயற்சி மேற்கொண்டனர்.
* பா.ஜ.க. என்கிற டப்பா எஞ்சினை நம்பி அ.தி.மு.க. உள்ளது.
* அ.தி.மு.க. என்கிற மூழ்கும் கப்பலை நம்பி பா.ஜ.க. இருக்கிறது.
* பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான், ராஜ்ஜியம் கிடைக்காது.
* பா.ஜ.க. இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி இருக்காது, வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தால் அங்கு பா.ஜ.க. இருக்காது.
* குஜராத் மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு தமிழ்நாடு மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் தரவில்லை.
* மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு எதையும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






