ஐகோர்ட் உத்தரவிட்டும் கே.என்.நேரு மீது வழக்குப்பதியாதது ஏன்? - லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. கடிதம்

அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தாமதம் ஏன்?வழக்குப்பதியாமல் தாமதம் செய்வது குற்றவாளிகளுக்கு துணைபோகும் செயல்.
ஐகோர்ட் உத்தரவிட்டும் கே.என்.நேரு மீது வழக்குப்பதியாதது ஏன்? - லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. கடிதம்
Published on

நகராட்சி நிர்வாகத்துறையில் 2516 பணியிடங்களை நிரப்பியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை ஆதாரங்கள் அளித்திருந்தது. அந்த அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ரூ.1,020 கோடி நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் தொடர்பாக CBI-ஐ நாட உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. சார்பில் எம்.பி. இன்பதுரை கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில்,

* ஐகோர்ட் உத்தரவிட்டும் நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் தொடர்பாக வழக்குப்பதியாதது ஏன்?

* அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தாமதம் ஏன்?

* வழக்குப்பதியாமல் தாமதம் செய்வது குற்றவாளிகளுக்கு துணைபோகும் செயல்.

* ஐகோர்ட் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை தன் கடமையை செய்யாததால் அ.தி.மு.க. CBI-ஐ நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com