என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ராமதாஸ் தொடர்ந்த வழக்கு - அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
    X

    ராமதாஸ் தொடர்ந்த வழக்கு - அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

    • கட்சி நிர்வாகிகளும் 2 அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
    • மனு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் எதிரும் புதிருமாக உள்ளனர்.

    கட்சி நிர்வாகிகளும் 2 அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பா.ம.க.வின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரியும், கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க கோரியும் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டாக்டர் ராமதாஸ் தரப்பில், "கட்சியின் தலைவராக நிறுவனர் ராமதாஸ்தான் உள்ளார். அவர் அனுமதியின்றி கட்சியின் பெயர் உள்ளிட்டவைகளை பிறர் பயன்படுத்த முடியாது. தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் டாக்டர் அன்புமணி இதை பயன்படுத்த முடியாது. " என்று வாதிடப்பட்டது.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.தர்மபிரபு, டாக்டர் ராமதாஸ் மனு குறித்து அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கை மார்ச் 9-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    Next Story
    ×