என் மலர்
நீங்கள் தேடியது "பெசன்ட் நகர்"
- தமிழகத்தில் வனத்துறையினர் 10 கடலோர மாவட்டங்களில் 49 ஆமைகள் இனப்பெருக்க மையங்களை அமைத்துள்ளனர்.
- கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட மற்றொரு ஆமையான மேகலை 2 முறை திரும்பி வந்து 211 முட்டையிட்டு இருக்கிறது.
சோழிங்கநல்லூர்:
"ஆலிவ் ரிட்லி"எனப்படும் கடல் ஆமைகள் ஆண்டு தோறும் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழக கடற்கரை பகுதிகளுக்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.
சென்னை கடற்கரைக்கு வரும் ஏராளமான ஆமைகள் சமீபகாலமாக இறப்பது அதிகரித்து வருகின்றன. ஆமைகள் கரை நோக்கி வரும்போது மீன்பிடி படகுகளில் அடிபட்டும், வலைகளில் சிக்கியும் அதிக அளவில் இறக்கின்றன. இதையடுத்து ஆமைகள் மற்றும் அதன் முட்டைகளை பாதுகாக்க வனத்துறையினர் தன்னார்வலர்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடற்கரையில் உள்ள ஆமை முட்டைகளை சேகரித்து அதனை குஞ்சு பொரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று பாதுகாத்து வருகின்றனர். பின்னர் குஞ்சு பொரித்ததும் அதனை கடலில் விடுகிறார்கள்.
அதன்படி இந்த ஆண்டு வனத்துறையின் மேற்பார்வையில் உள்ள பெசன்ட் நகர் குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட முட்டைகளில் இருந்து 46 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் பொரித்து உள்ளன. நல்ல நிலையில் இருந்த ஆமை குஞ்சுகள் முதல் கட்டமாக பெசன்ட்நகர் கடலில் விடப்பட்டது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, 94 முட்டைகள் பாதுகாக்கப்பட்டதில் தற்போது குஞ்சுகள் வெளிவந்து உள்ளன. மீதமுள்ள முட்டைகளில் இருந்து இன்னும் ஓரிரு நாளுக்குள் ஓடுகளை உடைத்துகொண்டு ஆமை குஞ்சுகள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் வனத்துறையினர் 10 கடலோர மாவட்டங்களில் 49 ஆமைகள் இனப்பெருக்க மையங்களை அமைத்துள்ளனர். இதுவரை நகரின் கடற்கரைகளில் ஆமைகள் முட்டையிடும் 209 இடங்கள் அடையாளம் காணப்பட்டு 24 ஆயிரத்து 531 முட்டைகள் சேகரிக்கப்பட்டது.
அவை குஞ்சு பொரிப்பகங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெசன்ட்நகர் மற்றும் மெரினா கடற்கரைகளில் 18 இடங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகளை வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேகரித்து உள்ளனர்.
பெசன்ட் நகர் கடற்கரையில் விடுவிக்கப்பட்ட கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட கயல் என்ற ஆமை சென்னை கடற்கரையில் 3 முறை திரும்பி வந்து முட்டையிட்டுள்ளது. இந்த சீசனில் மட்டும் 389 முட்டையிட்டு இருக்கிறது. இந்த ஆமை தெற்கு நோக்கி சென்ற பிறகும், முட்டையிட மீண்டும் சென்னையையே தேர்ந்தெடுத்து உள்ளது.
இதேபோல் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட மற்றொரு ஆமையான மேகலை 2 முறை திரும்பி வந்து 211 முட்டையிட்டு இருக்கிறது. ஆமைகள் ஏற்கனவே இருந்த கடற்கரைக்கு திரும்பி வரும் என்பது தற்போது உண்மையாகி உள்ளது என்றார்.
- சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
- நாடு முழுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் கோலகாலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு என நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மீடியா95 பழனிராஜா மற்றும் குரூப் அட்மின் மோகன் ராகவன் தலைமையில் சென்னை பெசன்ட் நகர் பீச்சில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
அடையார் ஆனந்தபவனின் நிர்வாக இயக்குநர் திரு. வெங்கடேஷ் ராஜா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் பீச் ஃப்ரெண்ட்ஸ் குரூப் உறுப்பினர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- லட்சுமி தேவியின், எட்டு அவதாரங்களை இக்கோவிலில் தரிசிக்கலாம்.
- அஷ்டலட்சுமியின் அவதாரங்களை ஒருசேர வணங்குவது விசேஷமாகும்.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் எழுந்துள்ளது, அஷ்டலட்சுமி கோவில். செல்வத்துக்கும் செழிப்புக்கும் வழிகாட்டும் கடவுளாக பூஜிக்கப்படும் லட்சுமி தேவியின், எட்டு அவதார கோலங்களை இக்கோவிலில் தரிசிக்கலாம்.
விஷ்ணுவின் துணைவியே லட்சுமி தேவி என்பது யாவரும் அறிந்ததே. தனம், தான்யம், கஜம், சந்தானம், வீரம், விஜயம், வித்யா போன்ற பாக்கியங்களை அருளும் அஷ்டலட்சுமியின் அவதாரங்களை ஒருசேர வணங்குவது விசேஷமாகும். கடற்கரையை ஒட்டியே வீற்றிருக்கும் இந்தக் கோவில் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவற்றில் எட்டு அவதார வடிவங்களும் வெவ்வேறு பிரிவுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தைரியலட்சுமி மற்றும் தான்ய லட்சுமி ஆகியோர் அருள்புரிகின்றனர். ஆனால் இரண்டாவது தொகுதியில் உள்ள மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவை வணங்கிய பின்னரே, மற்ற தெய்வ வடிவங்களை வணங்கவேண்டும் என்ற ஐதீகம் பின்பற்றப்படுகிறது. எனவே மூன்றாவது தளத்தில் உள்ள சந்தானலட்சுமி, விஜயலட்சுமி மற்றும் கஜலட்சுமியையும், நான்காவது தளத்தில் தனலட்சுமியையும் வழிபட்ட பின்னர் முதல் தளத்தில் உள்ள லட்சுமிகளை வழிபடலாம்.
- போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர்.
- மிதவை படகு எங்கிருந்து வந்தது என்ற தெரியவில்லை.
சோழிங்கநல்லூர்:
பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று காலை சோலார் தகடு பொருத்திய சிறிய மிதவை படகு கரை ஒதுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் திருவான்மியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர். அந்த சுமார் 30 அடி நீள முள்ள அந்த மதவையில் 3 சோலார் தகடுகள் இருந்தன. இந்த மிதவை படகு எங்கிருந்து வந்தது என்ற தெரியவில்லை.
அதனை கடலோர காவல் படையினர் மீன்வளத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம்.
- இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள, சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிப்பேரரசு வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
ஆண்டுக்கு ஆண்டு திருவள்ளுவர் திருநாளுக்கு பெருகி வரும் ஆதரவு திருவள்ளுவரின் செல்வாக்கு பெருகுவதை காட்டுகிறது. திருவள்ளுவர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம். கடந்த வாரம் அதிகம் பேசப்பட்ட இரு மொழி கொள்கை குறித்து பேச வேண்டும். திருக்குறளை படிக்கும்போது நாங்கள் தமிழையே படிக்கிறோம். மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம் எனக் கூறினார்.
இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள். இங்கிருந்து வட மாநிலத்திற்கு செல்வர்கள் இந்தியை கற்றுக் கொள்கிறார்கள். அங்கிருந்து இங்கு தொழிலுக்காக வருபவர்கள் தமிழை கற்றுக் கொள்கிறார்கள். மூன்றாவது மொழி என்பது சூழலாலே உருவாகிறது என்றார்.
எப்படி கரையான் புகுந்து ஒரு மரத்தை அரிக்கிறதோ, அதுபோல் வடமொழி நிலத்தை அரித்து விட்டது. அப்படி நாங்கள் அதிகம் இழந்திருக்கிறோம். இனியும் எங்கள் மொழியையும், நிலத்தையும், இனத்தையும் இழக்க தயாராக இல்லை. இந்தி மொழி மீது எங்களுக்கு கோபம் இல்லை. அச்சம் தான் உள்ளது. இந்த நியாயமான அச்சத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை கொடுக்காமல் பாதுகாப்பை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
- இந்த போட்டி சென்னையில் இரண்டு இடங்களில் திரையிடப்பட உள்ளது.
சென்னை:
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்படுகிறது.
இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் போட்டியைக் கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் தொடரில் இந்தியா, பா கிஸ்தான் போட்டி மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
- விளையாட்டுக்களில் ஈடுபடும் மக்களுக்கு இந்த பகுதி பயன்படுத்தப்படும்.
- நிகழ்ச்சிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை பெசன்ட் நகர், 6வது அவென்யூ கிழக்கு பகுதியில் 32வது குறுக்கு தெருவிலிருந்து 3வது பிரதான சாலை சந்திப்பு வரை (வாகனமில்லா ஞாயிற்றுக்கிழமை) "Car-Free Sunday" நிகழ்ச்சியானது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படுகிறது.
அதாவது 04.09.2022, 11.09.2022, 18.09.2022, 25.09.2022, 02.10.2022, 16.10.2022 மற்றும் 23.10.2022 ஆகிய நாட்களில் காலை 06.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மேற்கண்ட பகுதியில் தி இந்து மற்றும் சென்னை பெருநகர போகுவரத்து காவல் துறையால் இணைந்து நடத்தப்படும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் பொது மக்களுக்கு இந்த பகுதி பயன்படுத்தப்படும்.
இந்நிகழ்ச்சிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. அதன்படி 7வது நிழற்சாலையிலிருந்து 6வது நிழற்சாலை வரை எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல உத்தேசித்துள்ள வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை இலக்கை அடைய 16வது குறுக்குத் தெரு வழியாக 2வது நிழற்சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.
16வது குறுக்குத் தெருவில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கிச் செல்ல வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை 2வது நிழற்சாலை மற்றும் 16வது குறுக்குத் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். 3வது மெயின் ரோட்டில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 3வது மெயின் ரோடு மற்றும் 2வது நிழற்சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும்.
4வது மெயின் ரோடு மற்றும் 5வது நிழற்சாலையில் இருந்து 6வது நிழற்சாலை வழியாக எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, அவை மேலும் 4வது மெயின் ரோடு மற்றும் 5வது நிழற்சாலை வழியாக திருப்பி விடப்படும். வாகன ஓட்டிகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






