search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Besant Nagar"

    • மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம்.
    • இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்.

    திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள, சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிப்பேரரசு வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

    ஆண்டுக்கு ஆண்டு திருவள்ளுவர் திருநாளுக்கு பெருகி வரும் ஆதரவு திருவள்ளுவரின் செல்வாக்கு பெருகுவதை காட்டுகிறது. திருவள்ளுவர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம். கடந்த வாரம் அதிகம் பேசப்பட்ட இரு மொழி கொள்கை குறித்து பேச வேண்டும். திருக்குறளை படிக்கும்போது நாங்கள் தமிழையே படிக்கிறோம். மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம் எனக் கூறினார்.

    இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள். இங்கிருந்து வட மாநிலத்திற்கு செல்வர்கள் இந்தியை கற்றுக் கொள்கிறார்கள். அங்கிருந்து இங்கு தொழிலுக்காக வருபவர்கள் தமிழை கற்றுக் கொள்கிறார்கள். மூன்றாவது மொழி என்பது சூழலாலே உருவாகிறது என்றார்.

    எப்படி கரையான் புகுந்து ஒரு மரத்தை அரிக்கிறதோ, அதுபோல் வடமொழி நிலத்தை அரித்து விட்டது. அப்படி நாங்கள் அதிகம் இழந்திருக்கிறோம். இனியும் எங்கள் மொழியையும், நிலத்தையும், இனத்தையும் இழக்க தயாராக இல்லை. இந்தி மொழி மீது எங்களுக்கு கோபம் இல்லை. அச்சம் தான் உள்ளது. இந்த நியாயமான அச்சத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

    மேலும், இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை கொடுக்காமல் பாதுகாப்பை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

    • லட்சுமி தேவியின், எட்டு அவதாரங்களை இக்கோவிலில் தரிசிக்கலாம்.
    • அஷ்டலட்சுமியின் அவதாரங்களை ஒருசேர வணங்குவது விசேஷமாகும்.

    சென்னை பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் எழுந்துள்ளது, அஷ்டலட்சுமி கோவில். செல்வத்துக்கும் செழிப்புக்கும் வழிகாட்டும் கடவுளாக பூஜிக்கப்படும் லட்சுமி தேவியின், எட்டு அவதார கோலங்களை இக்கோவிலில் தரிசிக்கலாம்.

    விஷ்ணுவின் துணைவியே லட்சுமி தேவி என்பது யாவரும் அறிந்ததே. தனம், தான்யம், கஜம், சந்தானம், வீரம், விஜயம், வித்யா போன்ற பாக்கியங்களை அருளும் அஷ்டலட்சுமியின் அவதாரங்களை ஒருசேர வணங்குவது விசேஷமாகும். கடற்கரையை ஒட்டியே வீற்றிருக்கும் இந்தக் கோவில் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவற்றில் எட்டு அவதார வடிவங்களும் வெவ்வேறு பிரிவுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

    முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தைரியலட்சுமி மற்றும் தான்ய லட்சுமி ஆகியோர் அருள்புரிகின்றனர். ஆனால் இரண்டாவது தொகுதியில் உள்ள மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவை வணங்கிய பின்னரே, மற்ற தெய்வ வடிவங்களை வணங்கவேண்டும் என்ற ஐதீகம் பின்பற்றப்படுகிறது. எனவே மூன்றாவது தளத்தில் உள்ள சந்தானலட்சுமி, விஜயலட்சுமி மற்றும் கஜலட்சுமியையும், நான்காவது தளத்தில் தனலட்சுமியையும் வழிபட்ட பின்னர் முதல் தளத்தில் உள்ள லட்சுமிகளை வழிபடலாம்.

    • சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
    • நாடு முழுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் கோலகாலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு என நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

     

    மீடியா95 பழனிராஜா மற்றும் குரூப் அட்மின் மோகன் ராகவன் தலைமையில் சென்னை பெசன்ட் நகர் பீச்சில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    அடையார் ஆனந்தபவனின் நிர்வாக இயக்குநர் திரு. வெங்கடேஷ் ராஜா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் பீச் ஃப்ரெண்ட்ஸ் குரூப் உறுப்பினர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • விளையாட்டுக்களில் ஈடுபடும் மக்களுக்கு இந்த பகுதி பயன்படுத்தப்படும்.
    • நிகழ்ச்சிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    சென்னை பெசன்ட் நகர், 6வது அவென்யூ கிழக்கு பகுதியில் 32வது குறுக்கு தெருவிலிருந்து 3வது பிரதான சாலை சந்திப்பு வரை (வாகனமில்லா ஞாயிற்றுக்கிழமை) "Car-Free Sunday" நிகழ்ச்சியானது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படுகிறது.

    அதாவது 04.09.2022, 11.09.2022, 18.09.2022, 25.09.2022, 02.10.2022, 16.10.2022 மற்றும் 23.10.2022 ஆகிய நாட்களில் காலை 06.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மேற்கண்ட பகுதியில் தி இந்து மற்றும் சென்னை பெருநகர போகுவரத்து காவல் துறையால் இணைந்து நடத்தப்படும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் பொது மக்களுக்கு இந்த பகுதி பயன்படுத்தப்படும்.

    இந்நிகழ்ச்சிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. அதன்படி 7வது நிழற்சாலையிலிருந்து 6வது நிழற்சாலை வரை எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல உத்தேசித்துள்ள வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை இலக்கை அடைய 16வது குறுக்குத் தெரு வழியாக 2வது நிழற்சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.

    16வது குறுக்குத் தெருவில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கிச் செல்ல வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் அவை 2வது நிழற்சாலை மற்றும் 16வது குறுக்குத் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். 3வது மெயின் ரோட்டில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 3வது மெயின் ரோடு மற்றும் 2வது நிழற்சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும்.

    4வது மெயின் ரோடு மற்றும் 5வது நிழற்சாலையில் இருந்து 6வது நிழற்சாலை வழியாக எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, அவை மேலும் 4வது மெயின் ரோடு மற்றும் 5வது நிழற்சாலை வழியாக திருப்பி விடப்படும். வாகன ஓட்டிகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெசன்ட் நகரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 75 பட்டு புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    சோழிங்கநல்லூர்:

    பெசன்ட் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெசன்ட் நகர் வேளாங்கண்ணி கோவில் வழியாக வந்த வாகனத்தை ஆய்வு செய்தனர். அதில் 75 பட்டுப்புடவைகள், 95 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது. அதற்கு ஆவணங்கள் இல்லாததால் புடவைகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு கொடுக்க சென்றதாக தெரிவித்துள்ளனர். இதற்கு ஆவணங்கள் கொண்டு வந்து மீண்டும் எடுத்துச் செல்லலாம் என தேர்தல் பறக்கும் படையினர் கூறியுள்ளனர். #LSPolls

    ×