என் மலர்tooltip icon

    இந்தியா

    • முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 182 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்களை மட்டுமே எடுத்தது.

    கவுகாத்தி:

    ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.

    சி.எஸ்.கே. சார்பில் கலீல் அகமது, நூர் அகமது, பதிரனா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. கேப்டன் ருதுராஜ் பொறுப்புடன் ஆடி 63 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய ஜடேஜா 32 ரன்கள் எடுத்தார். எம்.எஸ்.தோனி 16 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயன் கேப்டனாக இருந்தார்.
    • பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோ கேப்டனாக இருந்தார்.

    சென்னை:

    பிரேசில் லெஜண்ட்ஸ், இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையேயான நட்சத்திர கால்பந்து போட்டி சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

    இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயனும், பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோவும் கேப்டன்களாக இருந்தனர்.

    போட்டியின் முடிவில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.

    இந்தப் போட்டியைக் காண திரண்டு வந்த கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

    பிபா கால்பந்து உலகக் கோப்பையை பிரேசில் அணி 5 முறை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய ஐதராபாத் 18.4 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
    • அந்த அணியின் அனிகேத் வர்மா அதிரடியாக ஆடி 74 ரன்கள் எடுத்தார்.

    விசாகப்பட்டினம்:

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் 18.4 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிரடியாக ஆடிய அனிகேத் வர்மா 74 ரன்கள் எடுத்தார்.

    டெல்லி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 16 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டு பிளெஸ்சிஸ் 50 ரன்கள் எடுத்தார். ஆட்டநாயகன் விருது மிட்செல் ஸ்டார்க்குக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து ஐதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:

    நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் மோசமான ஷாட்டுகளை அடிக்கவில்லை. ரன் அவுட்டும் அப்படியே அமைந்தது. இது போன்ற விஷயங்கள் நடப்பது சகஜம்.

    அனிகேத் எங்களுக்கு நல்ல ஸ்கோர் கொடுத்தார். அனிகேத் அதிகம் அறியப்படாதவர் என்றாலும் இத்தொடரில் அபாரமாக வந்துள்ளார். அவர் எங்களுக்கு வெற்றி பெற பாதி வாய்ப்பைக் கொடுத்தார்.

    மொத்தமாக எங்கள் வீரர்கள் அனைவரும் தங்களால் என்ன முடியும் என்பதில் கொஞ்சத்தை காண்பித்தனர். எனவே நாங்கள் எதையும் அதிகம் மாற்ற வேண்டியதில்லை.

    கடந்த போட்டியை போல் இது மோசமான பெரிய தோல்வி என நினைக்கவில்லை. கடந்த இரண்டு ஆட்டங்களில் எல்லாம் நம் வழியில் செல்லவில்லை. மிக விரைவில் நாங்கள் மீண்டும் முன்னேறுவோம் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • தமிழகத்தில் கீழக்கரை, காரைக்கால் போன்ற பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டது.
    • ஷவ்வால் பிறை 31/03/2025 (திங்கள் கிழமை) ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தினமாகும்.

    ரம்ஜான் பண்டிகை வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று தமிழகத்தில் பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தில் ரமலான் மாத பிறை தேட வேண்டிய நாளான 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் கீழக்கரை, காரைக்கால் போன்ற பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டது.

    நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் ரமலான் மாதம் நிறைவுபெற்று 30/03/2025 ஞாயிற்றுக்கிழமை மக்ரிபிலிருந்து ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை ஆரம்பானது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம். ஷவ்வால் பிறை 31/03/2025 (திங்கள் கிழமை) ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தினமாகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரூ.33,700 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகளை தொடங்கிவைத்தார்.
    • முந்தைய அரசாங்கங்களின் அலட்சியம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது

    சத்தீஸ்கர் பயணப்பட்டுள்ள பிரதமர் மோடி பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மொஹபத்தா கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.

    இந்த நிகழ்வில் ரூ.33,700 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகளை தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், காங்கிரசின் கொள்கைகளால், சத்தீஸ்கர் உட்பட பல மாநிலங்களில் பல தசாப்தங்களாக நக்சலிசம் ஊக்கம் பெற்றது. வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் நக்சலிசம் செழித்தது, ஆனால் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி என்ன செய்தது? அத்தகைய மாவட்டங்களை பின்தங்கியதாக அறிவித்து அதன் பொறுப்பிலிருந்து விலகிச் சென்றது.

    மாவோயிஸ்ட் வன்முறையில் பல தாய்மார்கள் தங்கள் அன்புக்குரிய மகன்களை இழந்தனர், பல சகோதரிகள் தங்கள் சகோதரர்களை இழந்தனர்.

    முந்தைய அரசாங்கங்களின் அலட்சியம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது. முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் ஏழை பழங்குடியினரின் வசதிகளை ஒருபோதும் கவனித்துக் கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    மேலும் பேசிய அவர், பாஜக அரசின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட முயற்சிகள் காரணமாக நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அமைதியின் புதிய சகாப்தம் காணப்படுகிறது. காங்கிரஸின் கொள்கைகளால் நக்சலிசம் அதிகரித்தது. ஆனால் பாஜக அரசு மக்களுக்கு வீடுகளை கட்டுவது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையையும் வளப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

    • நான் மெதுவாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தினேன்" என்று கூறினார்
    • அந்த லாம்போர்கினி கார் புதுச்சேரியில் பதிவுசெய்யப்பட்டது என்று தெரிவித்தனர்.

    உத்தரப் பிரதேசத்தில் லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரில் வந்த நபர் 2 பேரை மோதிவிட்டு, "இங்கு யாராவது இறந்தார்களா என்ன? என்று அலட்சியமாக கேட்டுள்ளார்.

    இன்று மாலை நொய்டாவின் செக்டார் 94 இல், கட்டுமானத்தில் உள்ள ஒரு வளாகத்தை ஒட்டிய நடைபாதையில் ஒரு சிவப்பு லாம்போர்கினி கார் இரண்டு தொழிலாளர்கள் மீது மோதியது. பின் மரத்தில் மோதி நின்றது.

    சம்பவத்தின் பின் இதுதொடர்பாக வெளியான வீடியோவில், நடைபாதையில் சிவப்பு நிற லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் நின்றிருப்பதும், கட்டுமான தொழிலாளர்கள் அதை நோக்கி ஓடுவதையும் காட்டியது.

    காரை ஒட்டியவர்களிடம் அந்த தொழிலார்கள்களில் ஒருவர், "நீங்கள் இங்கு ஸ்டண்ட் கற்றுக்கொண்டீர்களா?, இங்கே எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் தெரியுமா?" என்று கேட்கிறார்.

    அதற்கு காரை ஓட்டியவர் அலட்சியமாக, இங்கே யாராவது இறந்தார்களா? என்று கேட்கிறார். அந்த வீடியோவைப் பதிவுசெய்து கொண்டிருந்த நபர், "காவல் துறையினரை அழைக்கவும்" என்று கூறுகிறார் அதற்கு கார்ஓட்டி "நான் மெதுவாக ஆக்சிலரேட்டரை அழுத்தினேன்" என்று கூறினார், அதற்கு வீடியோ எடுப்பவர், " அதை மெதுவாக அழுத்தினீர்களா?" என்று கேட்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    கார் மோதியதில் படுகாயமபட்ட 2 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்கள் ஆபத்தில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் அந்த லாம்போர்கினி கார் புதுச்சேரியில் பதிவுசெய்யப்பட்டது என்று தெரிவித்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டு, அதை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    • எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

    நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்பட பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய இந்த சங்கத்தில் சுமார் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக சுமார் 6 ஆயிரம் டேங்கர் லாரிகள் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகின்றது.

    குறிப்பாக பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் பழைய ஒப்பந்த காலம் முடிவடைகிறது. அடுத்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 2025-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருந்தது.

    அதில் பல்வேறு விதிமுறைகள் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுடன் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி ஆலோசனை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில விதிமுறைகளை தளர்த்துமாறு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து விரைவில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    இதனால், எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    தொடர்ந்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    ஆனால், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தென் மாநிலங்கள் முழுவதும் கடந்த 5 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றதால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    • மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொண்டனர்.
    • பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு எனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம்.

    பீகார் மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

    பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பற்றுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தற்போது முதல்வராக உள்ளார். முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடைய ராஷ்டிரிய ஜனதா தளம் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இவ்விரு கூட்டணிக்குமிடையில் இந்த தேர்தலில் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொண்டனர். அரசின் நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை அளித்தனர்.

    அதன்பின் நடந்த கூட்டத்தில் நிதிஷ் குமார் பேசுகையில், பாஜகவை இனி ஒரு போதும் கைவிட மாட்டேன். இரண்டு முறை தவறு செய்துவிட்டேன். இனி அந்த தவறு நடக்காது. என்னை யார் முதலமைச்சராக்கியது? அடல் பிகாரி வாஜ்பாய் என்னை முதலமைச்சராக்கினார். நாம் எப்படி மறக்க முடியும்?

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு,அனைத்து விஷயங்களும் மேம்படத் தொடங்கின. 90களின் மத்தியில் இருந்து பாஜக கூட்டணியில் இருந்தோம். 2014இல் பிரிந்தோம்.

    3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தோம். 2022 ஆம் ஆண்டில் மீண்டும் பிரிந்தோம். ஆனால் கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம்.

    பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு எனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம். இரண்டு முறை நான் தவறு செய்தேன். ஆனால் அது மீண்டும் ஒருபோதும் நடக்காது என்றார்.

    • வருத்தத்துடன் வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தேன்.

    உத்தரப் பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட விரக்தியில் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கமலா ஷரன் யாதவ் இன்டர் பள்ளியில் பயின்று வந்த 9 ஆம் வகுப்பு மாணவி ரியா பிரஜாபதி (17 வயது) நேற்று தேர்வு எழுத சென்றுள்ளார்.

    பள்ளிக் கட்டணத்தில் ரூ.800 நிலுவைத் தொகையை செலுத்தாததால் அவரை தேர்வு எழுத அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகத்தினர், கட்டணம் செலுத்தாததற்காக அவரை அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வருத்தத்துடன் வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தற்கொலை செய்த சிறுமியின் தாய் பேசுகையில், "பள்ளி மேலாளர் சந்தோஷ் குமார் யாதவ், அதிகாரி தீபக் சரோஜ் மற்றும் முதல்வர் ராஜ்குமார் யாதவ் மற்றும் பலர் அவளை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளனர். அவளை தேர்வு எழுத விடவில்லை.

    அவர்களின் நடத்தையால் வருத்தமடைந்த என் மகள் வீட்டிற்கு திரும்பி வந்து தன் அறைக்குச் சென்றாள். நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தேன்.

    நான் வீடு திரும்பியபோது, என் மகள் தூக்கில் தொங்குவதை கண்டேன்" என்று தெரிந்தார். பள்ளி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

    • நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நிலச்சரிவில் சிக்கி படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இமாச்சல் பிரதேசம் மாநிலம் குல்லு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நிலச்சரிவில், குலுவில் உள்ள மணிகரன் குருத்வாரா பார்க்கிங் அருகே மரங்கள் வேரோடு சாய்ந்ததில் 6 பேர் இறந்தனர்.

    ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இவர்களை மீட்டு மாவட்ட நிர்வாகத்தின் காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் ஜாரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குலு துணைத் தலைவர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார்.

    • பீகார் மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
    • நிதிஷ் குமாரின் ஆட்சிக் காலத்தில், சாலைகள், மின்சாரம் மற்றும் குழாய் நீர் ஆகியவை ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்துள்ளன.

    பீகார் மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

    பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பற்றுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தற்போது முதல்வராக உள்ளார். முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடைய ராஷ்டிரிய ஜனதா தளம்  இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இவ்விரு கூட்டணிக்குமிடையில் இந்த தேர்தலில் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

    அவர் பேசியதாவது, "நிதிஷ் குமாரின் ஆட்சிக் காலத்தில், சாலைகள், மின்சாரம் மற்றும் குழாய் நீர் ஆகியவை ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்துள்ளன. இன்று, பீகாரின் ஏழைகளுக்கு வீடுகள், கழிப்பறைகள், தண்ணீர், மருந்துகள் மற்றும் ரேஷன் பொருட்களை வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்த பிரதமர் மோடி பாடுபட்டுள்ளார்.

    1990 முதல் 2005 வரை பீகாரில் லாலு யாதவ் அரசு என்ன செய்தது? மாநிலம் முழுவதும் கால்நடை தீவன ஊழலை நடத்தியதன் மூலம் நாட்டிலும் உலகிலும் பீகாரை லாலு யாதவ் அரசு அவமானப்படுத்தியது. பீகார் வரலாற்றில் அவரது அரசு எப்போதும் 'காட்டு ராஜ்ஜியம்' என்று அழைக்கப்படும்" என்று தெரிவித்தார். 

    • நான் தெளிவாக இருக்கின்றேன். என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது.
    • பாஜக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

    அதிமுக உடன் கூட்டணி இல்லை என தெளிவாக இருக்கிறேன் என்றும் அவ்வாறு இருப்பின் ராஜிமானா செய்வேன் என்று கூறினீர்களே என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எப்போதும் பேச்சை மாற்றி பேசுபவன் நான் இல்லை. வருங்காலத்தில் என்னை பார்ப்பீர்கள், எதையும் மாற்றி பேச மாட்டேன்.

    நான் தெளிவாக இருக்கின்றேன். என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது.

    பாஜக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×