search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tanker truck"

    • எதிர்பாராத விதமாக லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • இதில் லாரி டிரைவர் காயமின்றி தப்பினார்.

    டி.என்.பாளையம்:

    தென்காசி சங்கரன் கோவில் கூடிய குளம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி கணேசன் (35).

    இவர் கோவை பீளமேடு பகுதியில் இருந்து டேங்கர் லாரியில் கழிவு ஆயில் (பர்னஸ் ஆயில்) ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் நஞ்சன் கூடு என்ற பகுதியில் உள்ள தனியார் கம்பெனிக்கு செல்ல அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் மேடு என்ற பகுதிக்கு இரவு வந்தார்.

    அப்போது சாலையின் இடது புற ஓரத்தில் டேங்கர் லாரியை நிறுத்த மண் தரையில் இறக்கினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் லாரி டிரைவர் காயமின்றி தப்பினார்.

    • டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து;10 பேர் காயமடைந்தனர்.
    • சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பாளையம்பட்டி

    அருப்புக்கோட்டையில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பஸ் சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தது.அந்த பஸ்சை கிருஷ்ணன் (வயது52) என்பவர் ஓட்டி சென்றார். ஆத்திபட்டி அருகே பஸ் சென்றபோது பஸ்சின் முன்னால் பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று சென்றது.

    அப்போது டேங்கர் லாரியின் குறுக்கே திடீரென நாய் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக டேங்கர் லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் பஸ்சின் முன்பகுதி டேங்கர் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. அதில் பயணம் செய்த ஜெயசெல்வி (வயது45), ஜெயந்தி (54), கிருஷ்ணன் (52), அருள்ராஜ் (54), முத்து (40), சரவணன் (43), முருகன் (32) உள்பட 20 பேர் காயமடைந்தனர்.

    காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா பகுதியில் அதிவேகமாக இயக்கப்பட்ட டேங்கர் லாரி மோதியதில் முதியவர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #UPaccident
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா பகுதியில் நேற்று நள்ளிரவு சாலையில் அதிவேகமாக வந்த லாரி அப்பகுதியில் இருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

    இந்த விபத்தில் காவலர் பணிக்கு தேர்வு எழுதிவிட்டு திரும்பியவர்கள் 3 பேர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து தொடர்பாக விருந்தாவன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்படும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். #UPaccident
    ×