என் மலர்tooltip icon

    இந்தியா

    • நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ.8,360-க்கும், ஒரு சவரன் ரூ.66,880-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் கடந்த 26-ந்தேதியில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.

    நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ.8,360-க்கும், ஒரு சவரன் ரூ.66,880-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

    தங்கம் கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,425-க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.67,400-க்கும் விற்பனையானது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 113 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    31-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 67,400

    30-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,880

    29-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,880

    28-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,720

    27-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,880

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    31-03-2025- ஒரு கிராம் ரூ.113

    30-03-2025- ஒரு கிராம் ரூ.113

    29-03-2025- ஒரு கிராம் ரூ.113

    28-03-2025- ஒரு கிராம் ரூ.114

    27-03-2025- ஒரு கிராம் ரூ.111

    • உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரமலான் நல்வாழ்த்துகள்.
    • இந்நாளில் அனைரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்.

    ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    நோன்பிருந்து உறவுகளுடன், நட்பு நெஞ்சங்களுடன் அன்பைப் பரிமாறி..., ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும்,

    உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரமலான் நல்வாழ்த்துகள்.

    இந்நாளில் அனைரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புனித ரமலான் நம் சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம், கருணை ஆகியவற்றை மேம்படுத்தட்டும்.
    • இஸ்லாமியர்கள் அனைவரின் எல்லா முயற்சிகளிலும் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்.

    ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    புனித ரமலான் நம் சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம், கருணை ஆகியவற்றை மேம்படுத்தட்டும்.

    இஸ்லாமியர்கள் அனைவரின் எல்லா முயற்சிகளிலும் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு பாடத்திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப பக்கங்களை பள்ளிகள் கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்யவேண்டும்.
    • பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் இணக்கமாக பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    சி.பி.எஸ்.இ. 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வி உள்ளடக்கம், தேர்வுகளுக்கான பாடத்திட்டம், கற்றல் முடிவுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மதிப்பீடு கட்டமைப்புகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை இந்த புதிய பாடத்திட்டம் வழங்குகிறது.

    ஒவ்வொரு பாடத்திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப பக்கங்களை பள்ளிகள் கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்யவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் இணக்கமாக பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். அனுபவக் கற்றல், திறன்சார்ந்த மதிப்பீடுகள், இடைநிலை அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து மாணவர்களின் கருத்தியல் புரிதல் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயன் கேப்டனாக இருந்தார்.
    • பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ நடிகர் அஜித்-ன் மகன் ஆத்விக்கை சந்தித்து ஊக்கப்படுத்தினார்.

    பிரேசில் லெஜண்ட்ஸ், இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையேயான நட்சத்திர கால்பந்து போட்டி சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயனும், பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோவும் கேப்டன்களாக இருந்தனர்.

    போட்டியின் முடிவில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.

    இந்தப் போட்டியைக் காண திரண்டு வந்த கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

    பிரேசில் லெஜெண்ட்ஸ் vs இந்தியா ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து போட்டியை நடிகை ஷாலினி அஜித்குமார் பார்த்து ரசித்தார். பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோ நடிகர் அஜித்-ன் மகன் ஆத்விக்கை சந்தித்து ஊக்கப்படுத்தினார்.

    • புனித ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நோன்பும், பிரார்த்தனையும் நிறைவடைவதை ரம்ஜான் பண்டிகை குறிக்கிறது.
    • புனிதமான சந்தர்ப்பம் பிரதிநிதித்துவப்படுத்தும் புதுப்பித்தல் மற்றும் நல்லிணக்கத்தின் ஆழமான உணர்வைக் கொண்டாடுவோம்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜன்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

    ரம்ஜான் பண்டிகை அனைவரது வாழ்க்கையிலும் அமைதி, முன்னேற்றம், மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.

    புனித ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நோன்பும், பிரார்த்தனையும் நிறைவடைவதை ரம்ஜான் பண்டிகை குறிக்கிறது. இது சகோதரத்துவம், ஒத்துழைப்பு மற்றும் கருணை ஆகியவற்றை வலுப்படுத்துகிறது.

    இந்த பண்டிகை சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கிறது மற்றும் அமைதியான மற்றும் வளமான சமூகத்தை கட்டமைக்க ஊக்குவிக்கிறது. இந்த பண்டிகை அனைவரின் வாழ்விலும் அமைதி, முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும். மேலும் நேர்மறையான மனப்பான்மையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான பலத்தை வலுப்படுத்தட்டும்.

    இந்த நன்னாளையொட்டி, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்கள், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    துணை ஜனாதிபதி ஜன்தீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    ரம்ஜான் பண்டிகை நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் பகிரப்பட்ட பிணைப்புகளில் அதன் வலிமையை நினைவூட்டுகிறது.

    "ஈத்தின் சாராம்சம் வெறும் கொண்டாட்டங்களுக்கு அப்பாற்பட்டது; இது ஒற்றுமை, இரக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் நமது அரசியலமைப்பு லட்சியங்களை உள்ளடக்கியது.

    இந்த புனிதமான சந்தர்ப்பம் பிரதிநிதித்துவப்படுத்தும் புதுப்பித்தல் மற்றும் நல்லிணக்கத்தின் ஆழமான உணர்வைக் கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

    • 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
    • தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.

    இண்டிகோ விமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ.944.20 கோடி அபராதம் விதித்து உள்ளது. 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.

    ஆனால் தங்கள் நிறுவனம் வருமான வரி (மேல்முறையீடு) கமிஷனர் முன்பு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.

    வருமான வரித்துறையின் இந்த அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து சட்ட நிவாரணம் காண உள்ளதாக கூறியுள்ள இண்டிகோ நிறுவனம், இந்த நடவடிக்கையால் நிறுவனத்தின் நிதி, இயக்கம் அல்லது பிற நடவடிக்கைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளது.

    • ஓராண்டுக்குள் அவர்கள் யாரை வைத்து போலி நாடகங்கள் போட்டாலும் அதனை கண்டு அசராமல் கழகத் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்.
    • 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டுவோம்!

    தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஒன்றிய பா.ஜ.க. அரசு தீட்டும் சதிதிட்டங்களை தமிழ்நாடும், தி.மு.க.வும் முறியடித்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓராண்டுக்குள் அவர்கள் யாரை வைத்து போலி நாடகங்கள் போட்டாலும் அதனை கண்டு அசராமல் கழகத் தொண்டர்கள் களப்பணியாற்றி 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டுவோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக வெற்றிக் கழக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
    • மாநில அரசு சொல்லும் அதே கருத்துகளை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை என்றார்.

    சென்னை:

    பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழக வெற்றிக் கழக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்து விஜய் பேசியது வினோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்தன.

    பிரதமருக்கு தமிழகம் என்றால் அலர்ஜி, தமிழக ஜி.எஸ்.டி. வருவாயை வாங்கிக் கொண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதியே ஒதுக்குவதில்லை, இருமொழிக் கொள்கையில் உறுதி, வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும், தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்று மாநில அரசு சொல்லும் அதே கருத்துகளை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை.

    ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேசுவதாக எண்ணி, மத்தியிலே நடந்துகொண்டிருக்கின்ற சிறந்த ஆட்சியை, ஒரு இந்திய குடிமகனாக பாரதத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் பாரத தலைவரை, உலகம் போற்றுகின்ற ஒரு சாதனை மனிதரை, சாதாரண மனிதராக எண்ணிக் கொண்டு கேலியாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    இனி வருங்காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து உண்மையான கருத்துகளைப் பேசி ஆக்கப்பூர்வமான, நாகரிகமான அரசியலில் விஜய் ஈடுபடுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • ஐ.பி.எல். சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
    • தோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் நினைவு பரிசு வழங்கினார்.

    கவுகாத்தி:

    கவுகாத்தியில் நேற்று நடந்த 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா 81 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகனாக நிதிச்ஷ் ரானா தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, எம்.எஸ்.தோனிக்கு பி.சி.சி.ஐ. நினைவு பரிசு வழங்கி கவுரவித்தது.

    ஐபிஎல் சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வரும் தோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா நினைவு பரிசு வழங்கினார்.

    • சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார்.

    கவுகாத்தி:

    கவுகாத்தியில் நேற்று நடந்த 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா 81 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இந்நிலையில், தோல்வி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கூறியதாவது:

    நாங்கள் நல்ல தொடக்கங்களைப் பெறவில்லை. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றவுடன், விஷயங்கள் வித்தியாசமாக இருக்கும்.

    நாங்கள் தவறான களங்கள் மூலம் 8-10 கூடுதல் ரன்களை விட்டுக்கொடுத்தோம். அதை நாங்கள் மேம்படுத்த வேண்டும்.

    பல ஆண்டுகளாக அஜிங்க்யா 3வது இடத்தில் பேட்டிங் செய்தார், ராயுடு மிடில் ஓவர்களைக் கையாண்டார். நான் பின்னர் வந்தால் நிலைமையை சீராக்க முடியும் என நாங்கள் நினைத்தோம். அதே நேரத்தில் திரிபாதி முன்கூட்டியே அடிக முடியும்.

    இது ஏலத்தில் முடிவு செய்யப்பட்டது. அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எப்படியிருந்தாலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் நான் ஆரம்பத்தில் பேட்டிங் செய்யத் தொடங்குகிறேன் என தெரிவித்தார்.

    • ஹசரங்கா 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
    • ஒவ்வொரு ஓவரிலும் ஒரு சிக்ஸ் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    கவுகாத்தி:

    ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் ஹசரங்கா 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஒவ்வொரு ஓவரிலும் ஒரு சிக்ஸ் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். திரிபாதி, ஷிவம் துபே, விஜய் சங்கர், கெய்க்வாட் என 4 முக்கியமான விக்கெட்களை வீழ்த்தினார்.

    ×