என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் சீசனில் 18 ஆண்டுகள்: எம்.எஸ்.தோனியை கவுரவித்த பி.சி.சி.ஐ.
- ஐ.பி.எல். சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
- தோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் நினைவு பரிசு வழங்கினார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் நேற்று நடந்த 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா 81 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகனாக நிதிச்ஷ் ரானா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, எம்.எஸ்.தோனிக்கு பி.சி.சி.ஐ. நினைவு பரிசு வழங்கி கவுரவித்தது.
ஐபிஎல் சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வரும் தோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா நினைவு பரிசு வழங்கினார்.
Next Story






