என் மலர்
ஆசிரியர் தேர்வு
- அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
- அன்புமணி நாளை முதல் தமிழகம் முழுவதும் ‘உரிமை மீட்பு பயணம்’ மேற்கொள்ள உள்ளார்.
பா.ம.க.வில் தந்தை, மகனுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. குடும்பத்தார் மற்றும் நெருங்கியவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, அன்புமணி தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று கூறியிருந்தார். இதனிடையே, அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து அன்புமணி நாளை முதல் தமிழகம் முழுவதும் 'உரிமை மீட்பு பயணம்' மேற்கொள்ள உள்ளார்.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை அன்புமணி பயன்படுத்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை பயன்படுத்துவதையும் நிர்வாகிகள் சந்திப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு எதிராக டி.ஜி.பி.யிடம் ராமதாஸ் மனு அளித்துள்ளார்.
மேலும் கட்சியின் நிறுவனர் அனுமதியின்றி நடக்கும் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
- ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ரெயில் நிலைய மேலாளர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் இதை கண்காணிப்பார்கள்.
- ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள் என அனைத்து இடங்களும் ரீல்ஸ்களுக்கான இடங்களாக மாறி இருக்கிறது.
குறிப்பாக ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகள், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடும் பழக்கம் அதிகமாகி வருகிறது. ரெயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு ரீல்ஸ் எடுப்பதால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரெயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
இது குறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
விதிகளின்படி ரெயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுப்பது அனுமதிக்கப்படுவதில்லை. புகைப்படம் மட்டுமே எடுக்கலாம். ஆனால், சிலர் செல்போனில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதாக புகார்கள் வந்தவாறு உள்ளது.
எனவே, ரெயில் நிலையங்கள், தண்டவாளம் ஆகியவற்றில் செல்போனில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ரெயில் நிலைய மேலாளர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் இதை கண்காணிப்பார்கள். அவ்வாறு ரீல்ஸ் எடுக்கும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் மீது கைது நடவடிக்கையும் பாயும். இதை தீவிரமாக கடைபிடிக்க ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுப்பதை தடுக்க தண்டவாளப் பகுதிகளை அடிக்கடி ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- சிங்கப்பூர் பாஸ்போர்ட் உடன் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
- அமெரிக்கா 10வது இடத்திற்கும், இங்கிலாந்து 6வது இடத்திற்கும் சரிந்துள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் சமீபத்திய பட்டியலில் இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி 77வது இடத்தைப் பிடித்துள்ளது.
இது கடந்த ஆறு மாதங்களில் எந்த நாடும் கண்டிராத மிகப்பெரிய முன்னேற்றமாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா 85வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
லண்டனை தளமாகக் கொண்ட ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு, ஒரு நாட்டின் பாஸ்போர்ட் அதன் குடிமக்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கும் நாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகளவில் தரவரிசைப்படுத்துகிறது.
தற்போது, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது வந்தவுடன் விசா பெறும் வசதியுடன் பயணிக்க முடியும்.
இந்தியர்கள், மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, பூட்டான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து உலகளவில் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் உடன் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் உடன், விசா இல்லாமல் 189 நாடுகளுக்குள் நுழையலாம்.
இந்த முறை முன்னணியில் இருந்த அமெரிக்கா 10வது இடத்திற்கும், இங்கிலாந்து 6வது இடத்திற்கும் சரிந்துள்ளன.
- இன்னொரு வாய்ப்புக்கு தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்த சுப்மன் கில்லுக்கு இன்று வாய்ப்பு இருந்தது.
- அவர் கருண் நாயரை தேர்வு செய்திருக்க வேண்டும்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. காயம் காரணமாக ஆகாஷ் தீப், நிதிஷ் ரெட்டி ஆகியோர் நீக்கப்பட்டு அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டனர்.
சுமார் 8 வருடத்திற்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த கருண் நாயர், 6 இன்னிங்சில் 0, 20, 31, 26, 40 மற்றும் 14 ரன்களே அடித்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கருண் நாயருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது எக்ஸ் பக்கத்தில் "கருண் நாயர் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாட வில்லை என்றாலும், இன்னொரு வாய்ப்புக்கு தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்த சுப்மன் கில்லுக்கு இன்று வாய்ப்பு இருந்தது. அவர் கருண் நாயரை தேர்வு செய்திருக்க வேண்டும். அணித் தலைவராக கடினமான முடிவு எடுக்கும்போது, மரியாதை பெறுவதற்கான வாய்ப்பை இழந்து விட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.
- அசாமில் கடந்த பத்தாண்டுகளாக முஸ்லிம் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.
- வரும் 2041-ல் முஸ்லிம்கள் எண்ணிக்கை 50 சதவீதத்தை தொட்டு விடும் என தெரிவித்தார்.
கவுகாத்தி:
அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா சமீபத்தில் பேசுகையில், மக்கள்தொகையை மாற்றுவது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை என்பது 40 சதவீதமாக உள்ளது. 1951-ல் 12 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள் எண்ணிக்கை தற்போது 28 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் தேர்தலில் பல மாவட்டங்களை இழந்துள்ளோம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது அதிகரித்து வரும் மக்கள்தொகையின்படி பார்த்தால் வரும் 2041-ம் ஆண்டில் முஸ்லிம்கள் எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கைக்கு சமமாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முஸ்லிம்கள் எண்ணிக்கை 50 சதவீதத்தை தொட்டு விடும் என தெரிவித்தார்.
- அதிமுக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு சுட்டிக்காட்டியது.
- இபிஎஸ்-க்கு இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று யாரோ சொல்லித் தருகிறார்கள் என்றுதான் நான் கருதுகிறேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டசி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுகவை பாஜகவை விழுங்கி சரித்துவிடும் என்று திரும்ப திரும்ப விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்புணர்வோடு சுட்டிக் காட்டியது. கவலையோடு சுட்டிக்காட்டியது.
அதிமுக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு சுட்டிக்காட்டியது.
ஆனால், அதை அப்படியே திருப்பி விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார்.
அவருக்கு இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று யாரோ சொல்லித் தருகிறார்கள் என்றுதான் நான் கருதுகிறேன். அவராகவே இந்த கருத்தை சொல்கிறார் என்று என்னால் ஏற்க முடியவில்லை.
அதிமுகவிற்கு எதிராக பேசுவதாக அவர் கருதுகிறார் என்று நினைக்கிறேன். அதிமுக தொண்டர்கள் நான் எதற்காக சொல்கிறேன் என்று அவர்கள் புரிந்துக்கொள்வார்கள். எடப்பாடி பழனிசாமியும் உணருவார்.
ஆனால், சேராத இடத்தில் சேர்ந்திருக்கின்ற சூழலில் அவர் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று நான் கருதுகிறேன். அப்படி பேசினால் வருத்தப்படுவதற்கும் எதுவுமில்லை.
2021ம் ஆண்டில் இருந்து ஓரிரு பொதுத்தேர்தலைத் தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் தான் விசிக பயணிக்கிறது. மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து இன்று ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது. அங்கீகாரம் பெற்றிருக்கிறது.
விசிக வளர்ச்சி அடைந்திருக்கிறதே தவிர.. வீழ்ச்சி அடையவில்லை. ஆகவே அவர், திரித்துப் பேசுவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கருப்பு படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
- இன்று மாலை 4.06 மணிக்கு வெளியான "சூர்யா 46" படத்தின் அப்டேட் வெளியானது.
ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கருப்பு படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கருப்பு படத்தை தொடர்ந்து, சூர்யா 46 படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'சூர்யா 46' படத்தின் அப்டேட் இன்று மாலை 4.06 மணிக்கு வரும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
அதன்படி, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ளது சூர்யா 46 படக்குழு. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

- உக்ரைன் ரஷியா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது.
- பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் கொண்டு வர அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
கீவ்:
உக்ரைன் ரஷியா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக ரஷியா மீது இன்னும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார்.
அதேநேரம், பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்கஅதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
போரை முடிவுக்கு கொண்டு வ, ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேச தயாராக இருக்கிறேன்.
உக்ரைன் இந்தப் போரை ஒருபோதும் விரும்பவில்லை. மேலும் போரை தொடங்கிய ரஷியா தான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.
- மாநில வாரியாக அரசு பள்ளிகளில் அதிகம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருக்கிறது.
- 2-வது இடத்தில் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் உள்ளன.
சென்னை:
நாடு முழுவதும் மொத்தம் 14 லட்சத்து 72 ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன. அதில் 10 லட்சத்து 21 ஆயிரம் பள்ளிகள் அதாவது 69.14 சதவீதம் அரசு பள்ளிகள் ஆகும். அதேபோல மொத்தமுள்ள 24 கோடியே 80 லட்சம் பள்ளி மாணவர்களில் 12 கோடியே 75 லட்சம் பேர் அதாவது 51.4 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனால் ஆண்டுக்கு, ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இது தொடர்பான தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 2021-22-ம் ஆண்டின் நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 14.32 கோடியாக இருந்தது. ஆனால் இது தற்போது 1 கோடியே 54 லட்சம் குறைந்து போய் 12 கோடியே 78 லட்சம் ஆகி இருக்கிறது.
மாநில வாரியாக அரசு பள்ளிகளில் அதிகம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் ஒரு கோடியே 74 லட்சத்து 66 ஆயிரத்து 574 பேர் படிக்கின்றனர். 2-வது இடத்தில் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் தலா 1.58 கோடி மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். 10-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு 48 லட்சத்து 40 ஆயிரத்து 34 மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.
ஆனால் தமிழகத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டுகளில் 53 லட்சத்து 14 ஆயிரத்து 845 மாணவர்களும், 2022-23-ம் ஆண்டுகளில் 50 லட்சத்து 42 ஆயிரத்து 26 மாணவர்களும் அரசு பள்ளிகளில் படித்து உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இந்த எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.
- பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார்.
- இந்தி நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார்.
தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார்.
2018-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனது சொந்த வீட்டிலேயே தம்மை துன்புறுத்துவதாகவும், தமக்கு யாராவது உதவி செய்யும்படியும் சமூக வலைதளத்தில் தனுஸ்ரீ தத்தா வீடியோ வெளியிட்டு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அந்த வீடியோவில் metoo புகார் கொடுத்ததில் இருந்து தனது சொந்த வீட்டிலேயே நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன். அதனால் மிகவும் சோர்ந்து விட்டேன். இப்போது எனக்கு உடல்நிலை சரியில்லை" என்று தெரிவித்தார்.
- ஸ்ரீஹரிகோட்டாவில் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்டின் மேல்பகுதியில் நிசார் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
- செயற்கைக்கோளை ஏவும் பணியில் இஸ்ரோ-நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இது பூமியிலிருந்து 743 கிலோ மீட்டர் சூரிய ஒத்திசைவான சுற்றுப்பாதையில் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட், நிசார் செயற்கைக்கோளை 98.40 சாய்வுடன் செலுத்த உள்ளது.
2 ஆயிரத்து 392 கிலோ எடையுள்ள நிசார், ஒரு தனித்துவமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள். நாசாவின் எல்-பேண்ட் மற்றும் இஸ்ரோவின் எஸ்-பேண்ட் என்ற இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் வகையை சேர்ந்தவையாகும்.
பூமியைக் கண்காணிக்கும் இரட்டை அதிர்வெண் கொண்ட முதல் செயற்கைக்கோள் நிசாராகும். இவை இரண்டும் இஸ்ரோவின் மாற்றியமைக்கப்பட்ட ஐ-3கே என்ற செயற்கைக்கோளில் ஒருங்கிணைக்கப்பட்ட நாசாவின் 12 மீட்டர் விரிக்கக்கூடிய மெஷ் பிரதிபலிப்பான் ஆண்டெனாவைப் பயன்படுத்துகின்றன.
நிசாரில் முதல் முறையாக 'ஸ்வீப்சார்' என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 242 கிலோ மீட்டர் பரப்பளவு மற்றும் உயர் இடம்சார்ந்த தெளிவுத்திறனுடன் பூமியைக் கண்காணிக்கும்.
இந்த செயற்கைக்கோள் முழு உலகத்தையும் ஸ்கேன் செய்து 12 நாள் இடைவெளியில் அனைத்து வானிலை, பகல் மற்றும் இரவு தரவுகளையும் வழங்குவதுடன் பரந்த அளவிலான பயன்பாடுகளை செயல்படுத்தும். நிசார் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும்.
அதாவது தரை சிதைவு, பனிப்படல இயக்கம் மற்றும் தாவர இயக்கவியல். கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, புயல் தன்மை, மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேற்பரப்பு நீர் வளங்களை வரைபடம் செய்தல் மற்றும் கண்காணித்தல், பேரிடர் ஆகியவற்றை கண்டறியும். நிசார் ஏவுதல் என்பது இஸ்ரோ மற்றும் நாசா மற்றும் ஜெ.பி.எல். என்ற தொழில்நுட்ப குழுக்களுக்கு இடையே 10 ஆண்டுகளுக்கு மேலாக வலுவான தொழில்நுட்ப ஒத்துழைப்பின் விளைவாகும். தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்டின் மேல்பகுதியில் நிசார் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த செயற்கைக்கோளை ஏவும் பணியில் இஸ்ரோ-நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- 500 லாரிகள் மூலம் நாடு முழுவதும் பொருட்களை கொண்டும் செல்லும் சேவையை வழங்கி வந்தது.
- நிறுவனத்தின் ஐடி அமைப்பில் ஊடுருவியது.
பிரிட்டன் போக்குவரத்து நிறுவனமான கே.என்.பி லாஜிஸ்டிக்ஸ் 158 ஆண்டுகள் பழமையான நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் சுமார் 500 லாரிகள் மூலம் நாடு முழுவதும் பொருட்களை கொண்டும் செல்லும் சேவையை வழங்கி வந்தது.
இந்நிலையில் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தனது நிறுவனக் கணக்கிற்கு பலவீனமான கடவுச்சொல்லை அமைத்தபோது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
அகிரா என்ற சைபர் கும்பல் இந்தக் கடவுச்சொல்லை எளிதாக யூகித்து நிறுவனத்தின் ஐடி அமைப்பில் ஊடுருவியது.
அதன் பிறகு, ஊழியர்கள் பயன்படுத்த முடியாத வகையில் நிறுவனத்தின் அனைத்து தரவையும் முடக்கினர். இந்தத் தரவை மீண்டும் அணுக, அவர்களிடம் பணம் கேட்கப்பட்டது.
ஆனால் நிறுவனம், கொடுக்க போதுமான பணம் இல்லாததால் நிறுவனம் இறுதியில் மூடப்பட்டது. அதன் 700 ஊழியர்கள் வேலை இழந்தனர்.
பிரிட்டனில் உள்ள பல முக்கிய நிறுவனங்கள் சமீபத்தில் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன.






