என் மலர்tooltip icon

    இந்தியா

    2041-ல் இந்துக்கள் எண்ணிக்கைக்கு சமமாக முஸ்லிம்களும் இருப்பர்: அசாம் முதல் மந்திரி
    X

    2041-ல் இந்துக்கள் எண்ணிக்கைக்கு சமமாக முஸ்லிம்களும் இருப்பர்: அசாம் முதல் மந்திரி

    • அசாமில் கடந்த பத்தாண்டுகளாக முஸ்லிம் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.
    • வரும் 2041-ல் முஸ்லிம்கள் எண்ணிக்கை 50 சதவீதத்தை தொட்டு விடும் என தெரிவித்தார்.

    கவுகாத்தி:

    அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா சமீபத்தில் பேசுகையில், மக்கள்தொகையை மாற்றுவது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை என்பது 40 சதவீதமாக உள்ளது. 1951-ல் 12 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள் எண்ணிக்கை தற்போது 28 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் தேர்தலில் பல மாவட்டங்களை இழந்துள்ளோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது அதிகரித்து வரும் மக்கள்தொகையின்படி பார்த்தால் வரும் 2041-ம் ஆண்டில் முஸ்லிம்கள் எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கைக்கு சமமாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முஸ்லிம்கள் எண்ணிக்கை 50 சதவீதத்தை தொட்டு விடும் என தெரிவித்தார்.

    Next Story
    ×