என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • பழங்குடியினத் தலைவர் இந்த கொலையை செய்ய உத்தரவிட்டார்.
    • பாகிஸ்தானில் 2024 இல் குறைந்தது 405 ஆணவக்கொலைகள் பதிவாகியுள்ளன.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இளம் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்ட வீடியோ அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    பனோ பீபி - அஹ்சான் உல்லா என்ற இளம் ஜோடி, குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்டர்.

    இந்நிலையில் கணவன்-மனைவியை கடத்திச் சென்று குவெட்டா நகரின் புறநகரில் வைத்து நபர் ஒருவர் துப்பாக்கியால் பலமுறை சுட்டுள்ளார். இதில் இருவரும் உயிரிழந்தனர். மே 2025ல் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் பழங்குடியினத் தலைவர் சர்தார் சதக்ஸாய் மற்றும் பெண்ணின் சகோதரன் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெண்ணின் சகோதரன் முறையீட்டின் பேரில் , பழங்குடியினத் தலைவர் இந்த கொலையை செய்ய உத்தரவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    மனித உரிமைகள் ஆணையத்தின் தகவல்படி, பாகிஸ்தானில் 2024 இல் குறைந்தது 405 ஆணவக்கொலைகள் பதிவாகியுள்ளன.

    • எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கிறார் எனக் கூறினார் என்கிறது விசிக.
    • நாங்கள் எங்கே சொன்னோம். நீங்கள் எங்களை வைத்து அடையாளம் படுத்தாதீர்கள்.

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் எழுச்சி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும் எனக் கூறினார்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அதிமுக- பாஜக கூட்டணி அமைத்ததும் ஸ்டாலின் அப்படியே அப்செட் ஆகிவிட்டார். சட்டசபையில் திடீரென ஸ்டாலின் எழுந்து, என்னைப் பார்த்து பாஜக-வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்னீர்களே என்றார்.

    எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் அதிமுக-வில் இருக்கிறாரா? திமுகவில் இருக்கிறாரா? எனத் தெரியவில்லை. அதிமுக கட்சி நம்ம கட்சி. நாம் யார் கூட வேண்டுமென்றாலும் கூட்டணி வைப்போம். இவர் ஏன் சட்டமன்றத்தில் பதறுகிறார். பயம். தேர்தல் ஜுரம் வந்துவிட்டது.

    பாஜக உடன் கூட்டணி வைத்ததில் இருந்து திமுக-வின் கூட்டணி கட்சிகளும் ஜால்ரா போட்டுக்கொண்டிருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கிறார் எனக் கூறினார். அதிக சீட் தருவதாக கூறினார் என விடுதலை சிறுத்தைகள் கூறுகிறது. நாங்கள் எங்கே சொன்னோம். நீங்கள் எங்களை வைத்து அடையாளம் படுத்தாதீர்கள். திமுக கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கட்சியை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள் கழித்தால் விழுங்கிவிடும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுனெஸ்கோவில் இணைந்தது.
    • தற்போது மீண்டும் வெளியேறியுள்ளது.

    யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்காவின் அரசுத்துறை செய்தித்தொடர்பாளர்

    டாமி ப்ரூஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

    கல்வி, அறிவியல் மற்றும் கலாசாரத்தின் மேம்பாட்டுக்காக செயல்படும் யுனெஸ்கோவிலிருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து முழுமையான விளக்கத்தை அமெரிக்க வெளியிடாத நிலையிலும், இஸ்ரேலுக்கு எதிராக நிலையை எடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

    கடந்த 2017ஆம் ஆண்டு யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியது. பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்த நிலையில், தற்போது வெளியேறியுள்ளது.

    முதல் முறையாக 1984ஆம் ஆண்டு ரொனால்டு ரீகன் அமெரிக்க அதிபராக இருந்தபோது யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்க விலகியது.

    • ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த விமானம் தரையிறங்கியது.
    • விமானிகள் வெளியேறி கொண்டிருக்கும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா (AI-315) விமானம், தரையிறங்கிய பிறகு விமானத்தின் துணை மின் அலகில் (Auxiliary Power Unit) தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பயணிகள் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

    சிஸ்டம் தீ விபத்தை ஏற்பட்டதை கண்டுபிடித்தால், துணை மின் அலகு (auxiliary power unit) அல்லது ஏபியு தானாகவே ஆஃப் ஆகிவிடும். பயணிகள் மற்றும் விமானி, பணிப்பெண்கள் பாதுகாப்பாக தரையிறங்கினர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கட்டிடத்தில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து விமான பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த தீ விபத்து மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
    • கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.

    இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பாடல் படமாக்கப்பட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டது.

    ஏற்கனவே, சிக்கிடு, மோனிக்கா பாடல்கள் வெளியானதை தொடர்ந்து, கூலி படத்தின் 3வது பாடலான பவர் ஹவுஸ் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மேலும்  "பவர் ஹவுஸ்" பாடல் இன்று இரவு 9.30 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கும் அனிருத்தின் இசை நிகழ்ச்சியில் அவர் பாடவும் இருக்கிறார்.

    • ஒருநாள் போட்டியில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 10 இடங்கள் முன்னேறினார்.
    • இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    ஐ.சி.சி. சார்பில் பெண்கள் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், பேட்டிங் வரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அதிரடியாக 10 இடங்கள் முன்னேறியுள்ளார்.

    33வது இடத்தில் இருந்த தீப்தி சர்மா தற்போது 23வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15-வது இடம் பிடித்துள்ளார்.

    தீப்தி சர்மா பந்துவீச்சு தரவரிசையிலும் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து வருகிறார்.

    • அடுத்த அரசு மக்களின் எண்ணத்தின்படி அமையும்.
    • தமிழ்நாட்டில் ஒற்றைக்கட்சி ஆட்சியைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    2026 சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமையில் ஒற்றைக்கட்சி ஆட்சி தான் அமையும். கட்சியினரை குஷிப்படுத்த கூட்டணி ஆட்சி என்று பேசுவதை எல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.

    அடுத்த அரசு மக்களின் எண்ணத்தின்படி அமையும். தமிழ்நாட்டில் ஒற்றைக்கட்சி ஆட்சியைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    சீமான், விஜய் தரப்புடன் கூட்டணி தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஆனால் தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்ற ஒத்த மனமுடைய அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் ஒன்றிணைய வேண்டும். அந்த வகையில், விஜய், சீமான் தரப்பும் அடங்கும் என்றார்.

    இதனிடையே, பா.ஜ.க. கூட்டணி உடையுமா? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணியை உடைக்கும் முயற்சி வெற்றி பெறாது என்று கூறினார். 

    • அவதார் படத்தின் முதல் பாகம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது.
    • 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

    13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற திரைப்படம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 16- ந் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்தது

    இந்நிலையில், அவதார் படத்தின் 3வது பாகம் ' Avatar: Fire and Ash' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

    வரும் 25ம் தேதி வெளியாகும் 'The Fantastic Four: First Steps' படத்துடன் திரையரங்குகளில் 'அவதார்' படத்தின் டிரெய்லர் திரையிடப்படும் என அவதார் படக்குழு அறிவித்துள்ளது.

    அவதார் படத்தின் 3 ஆம் பாகம் இந்தாண்டு டிசம்பர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    • இரு அவைகளிலும் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தனி பெரும்பான்மையை இழந்தது.
    • லிபரல் டெமாக்ரடிக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழப்பது இதுவே முதல்முறையாகும்.

    ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்தது. இதனால் இரு அவைகளிலும் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தனி பெரும்பான்மையை இழந்தது.

    ஜப்பானில் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    நாடாளுமன்ற மேல்சபையில் பெரும்பான்மை பெற 125 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஏற்கனவே 75 இடங்கள் இருந்தன. எனவே இந்த தேர்தலில் பெரும்பான்மை பெற மேலும் 50 இடங்களில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி 47 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெறமுடிந்தது. இதனால் ஆளுங்கட்சி இரு அவைகளிலும் தனிப்பெரும்பான்மையை இழந்தது.

    முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கீழ்சபை தேர்தலிலும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தோல்வியடைந்தது.

    1955-ம் ஆண்டு கட்சி தொடங்கியதில் இருந்து ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழப்பது இதுவே முதல்முறையாகும். இருப்பினும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன் என்று ஷிகெரு இஷிபா தெரிவித்துள்ளார்.

    • மாநிலங்கள் வாரியான தனிநபர் வருமான விவரங்களும் அளிக்கப்பட்டு இருந்தன.
    • நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் பீகார் எம்.பி.க்கள் 2 பேர் நாட்டின் தனிநபர் வருமான விவரங்களை கேள்விகளாக கேட்டு இருந்தனர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2024-2025-ம் ஆண்டுக்கான நிலையான விலையில் தனிநபர் நிகர தேசிய வருமானம் ரூ.1,14,710 ஆக உள்ளது.

    10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2014-2015-ம் ஆண்டுக்கான நிலையான விலையில் இது ரூ.72,805 ஆக இருந்தது.

    தனிநபர் வருமானம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையில் மாறுபடும். இது பொருளாதார வளர்ச்சியின் நிலைகள், துறைசார் அமைப்பு, கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிர்வாக வழிமுறைகளில் உள்ள வேறுபாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படக்கூடும்.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், மாநிலங்கள் வாரியான தனிநபர் வருமான விவரங்களும் அளிக்கப்பட்டு இருந்தன.

    இதன்படி நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. அங்கு 2024-2025-ம் ஆண்டு தனிநபர் வருமானம் ரூ.2,04,605 ஆக இருந்தது.

    2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1,96,309 ஆகும்.இதற்கு அடுத்த இடங்களில் அரியானா (ரூ.1,94,285), தெலுங்கானா (ரூ.1,87,912), மகாராஷ்டிரா (ரூ.1,76,678), இமாச்சல பிரதேசம் (ரூ.1,63,465) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

    • இது உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானம் ஆகும். இதன் விலை சுமார் 110 மில்லியன் டாலர்.
    • 25 பிரிட்டிஷ் பொறியாளர்கள் கொண்ட குழு இந்த மாதம் 6 ஆம் தேதி திருவனந்தபுரத்திற்கு வந்தது.

    தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35B ஸ்டெல்த் போர் விமானம், 37 நாட்களுக்குப் பிறகு இறுதியாக நாடு திரும்புகிறது.

    பழுதுபார்ப்பு பணிகள் முடிந்த நிலையில் விமானம் ஹேங்கரில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, (இன்று) செவ்வாய்க்கிழமை இங்கிலாந்துக்கு புறப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இது உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானம் ஆகும். இதன் விலை சுமார் 110 மில்லியன் டாலர். இந்தியாவுடன் இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்ற இந்த விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜூன் 14 அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆரம்பத்தில் ஒரு சிறிய குழுவுடன் வந்தாலும், பழுதுபார்க்கும் பணியை முடிக்க முடியவில்லை. இதன் விளைவாக, 25 பிரிட்டிஷ் பொறியாளர்கள் கொண்ட குழு இந்த மாதம் 6 ஆம் தேதி திருவனந்தபுரத்திற்கு வந்தது.

    இறுதியாக, ஏர் இந்தியா பராமரிப்பு ஹேங்கரில் வைத்து பழுதுபார்ப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. 

    • மருத்துவமனையில் இருந்து தனது பணியை தொடர்ந்து மேற்கொள்வார்.
    • முதலமைச்சருக்கு மேலும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், முதலமைச்சரின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மருத்துவ அறிக்கையில்," முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார். அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து தனது பணியை தொடர்ந்து மேற்கொள்வார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அவருக்கு மேலும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாக அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×