என் மலர்
இந்தியா

டெல்லியில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு..!
- ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த விமானம் தரையிறங்கியது.
- விமானிகள் வெளியேறி கொண்டிருக்கும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா (AI-315) விமானம், தரையிறங்கிய பிறகு விமானத்தின் துணை மின் அலகில் (Auxiliary Power Unit) தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பயணிகள் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
சிஸ்டம் தீ விபத்தை ஏற்பட்டதை கண்டுபிடித்தால், துணை மின் அலகு (auxiliary power unit) அல்லது ஏபியு தானாகவே ஆஃப் ஆகிவிடும். பயணிகள் மற்றும் விமானி, பணிப்பெண்கள் பாதுகாப்பாக தரையிறங்கினர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கட்டிடத்தில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து விமான பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த தீ விபத்து மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






