என் மலர்
ஆசிரியர் தேர்வு
- 2002ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
- 2003ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி, ரெயில்வே துறையில் துணை ஸ்டேசன் மாஸ்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அப்போது அகமதாபாத், வதோதரா, ஆனந்த் ஆகிய இடங்களில் வேலைப் பார்த்து வந்த 8 அதிகாரிகள் மற்றும் தனி நபர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் வரை பெற்றுக்கொண்டு தேர்வு பேப்பரை லீக் செய்தது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
விசாரணையைத் தொடர்ந்து சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு இன்று நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. மேலும், ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டவர்களில் தனி நபர் விசாணைக் காலத்தில் உயிரிழந்துவிட்டார். தேர்வு பேப்பர் லீக் வழங்கில் 23 வருடத்திற்குப் பிறகு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
- முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
- இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.
தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய அணியில் நிறைய வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளனர். இதனால் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் பஷிருக்கு பதிலாக லியாம் டாசன் இடம் பெற்றுள்ளார்.
4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:-
க்ராலி, டக்கெட், போப், ரூட், ப்ரூக், ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஸ்மித், லியாம் டாசன், வோக்ஸ், கார்ஸ், ஆர்ச்சர்.
- 16 பேர் உயிரிழந்த நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் காயம்.
- காயம் அடைந்தவர்களில் 6 மாணவர்கள் கவலைக்கிடமாக உள்ளனர்.
வங்கதேசத்தில் போர் விமானம் பள்ளிக்கூடம் மீது விழுந்து மோதிய விபத்தில், பள்ளியில் இருந்த 16 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
வங்கதேசம் தலைநகர் டாக்காவில் உள்ள உத்தாராவில் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி இயங்கி வருகிறது. வங்கதேசத்தின் பயிற்சி போர் விமானம் திடீரென இந்த பள்ளியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளியில் படித்து வந்த 6ஆம் வகுப்பு மாணவர்கள் 17 பேர், 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். விமானியும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவற்றில் சிலருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீக்காயம் அடைந்தவர்களில் 6 மாணவர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
- தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' திரைப்படம் உருவாகியுள்ளது.
- திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது
தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' திரைப்படம் உருவாகியுள்ளது.
இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. .படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 27 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
- தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கம் செய்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- மதுபான ஊழலை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டியை கைது செய்தது.
- முதல் குற்றவாளியாக காசிரெட்டி ராஜசேகர் ரெட்டி என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
அமராவதி:
ரூ.3 ஆயிரத்து 500 கோடி மதுபான ஊழலில் கிடைத்த லஞ்சப்பணம் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆந்திர போலீஸ் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
எம்.பி. கைது
ஆந்திர மாநிலத்தில், கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு நடந்து வந்தது.
அப்போது, மதுபான விற்பனையில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி ஊழல் நடந்ததாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதுபான ஊழலில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த மே மாதம் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, மதுபான ஊழலை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு, நேற்று முன்தினம் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டியை கைது செய்தது. பல மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, அமராவதி கோர்ட்டில் ஆந்திர போலீசார் இவ்வழக்கு தொடர்பாக 305 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதில், முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. இருப்பினும், அவர் மதுபான ஊழல் பணத்தை பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
முதல் குற்றவாளியாக காசிரெட்டி ராஜசேகர் ரெட்டி என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் புதிய மதுபான கொள்கையை கொண்டு வந்தனர். மதுபான சப்ளை, விற்பனை ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம், லஞ்சம், கமிஷன் பெறும் நோக்கத்தில் இருந்தனர்.
அதற்கேற்ப மதுபான கொள்கையில் திருத்தம் கொண்டு வந்தனர். லஞ்சத்தின் பெரும்பகுதி, ரொக்கமாகவும், தங்க கட்டிகளாகவும் பெறப்பட்டன.
ரூ.3,500 கோடி ஊழலின் மூளையாக முதல் குற்றவாளி காசிரெட்டி ராஜசேகர் ரெட்டி செயல்பட்டார். லஞ்சமாக வசூலிக்கப்பட்ட பணம், ராஜசேகர ரெட்டியிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம்.
அந்த லஞ்சப்பணத்தை 5-வது குற்றவாளி விஜய் சாய் ரெட்டி, 4-வது குற்றவாளி மிதுன் ரெட்டி, 33-வது குற்றவாளி பாலாஜி ஆகியோருக்கு ராஜசேகர் ரெட்டி அனுப்பி வைப்பார். அதை அப்போதைய முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாலாஜி அனுப்பி வைப்பார். மாதந்தோறும் சராசரியாக ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டது.
ராஜசேகர் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் செலவுக்காக ரூ.250 முதல் ரூ.300 கோடியை திருப்பி விட்டார். சட்டவிரோத பண பரிமாற்றத்துக்காக 30 போலி மதுஆலைகள் உருவாக்கப்பட்டன.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மது ஆலைகளுக்கு உரிய அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது. துபாய், ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் நிலம், தங்கம், ஆடம்பர சொத்துகள் ஆகியவற்றை வாங்க ஊழல் பணம் பயன்படுத்தப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொனேரு ஹம்பி கால் இறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார்.
- இப்போட்டியில் ஹம்பி வெற்றி பெற்றார்.
பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது.
முதல் முறையாக கொனேரு ஹம்பி, வைஷாலி , திவ்யா, ஹரிகா ஆகிய 4 இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி கால் இறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார். 53-வது நகர்த்தலின் போது யுக்சின் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதனால் ஹம்பி வெற்றி பெற்றார்.
இதனையடுத்து அவர் விளையாடிய 2 ஆவது காலிறுதி போட்டி டிராவில் முடிந்தது. இதன் காரணமாக மகளிர் செஸ் உலக கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி பெற்றார்
சென்னை கிராண்ட்மாஸ்டரான வைஷாலி சீன வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான டான் ஜோங்கியை சந்தித்தார். முதல் போட்டி 'டிரா' ஆனது. 2-வது போட்டியில் வைஷாலி தோல்வியை தழுவி வெளியேறினார்.
மற்றொரு கால் இறுதியில் இந்திய வீராங்கனைகளான ஹரிகா-திவ்யா தேஷ்முக் மோதினார்கள். முதல் போட்டி 'டிரா' ஆனது. 2-வது ஆட்டமும் 60-வது நகர்த்தலின் போது 'டிரா' வில் முடிந்தது. இருவரும் தலா 1 புள்ளியுடன் சம நிலையில் உள்ளனர். இன்று 'நடைபெறும் டை பிரேக்கரில் வெற்றி பெறும் வீராங்கனை அரை இறுதிக்கு முன்னேறுவார்.
இன்னொரு கால் இறுதி யில் லீடிங்பி (சீனா) 2-0 என்ற கணக்கில் டிஜாக் னிட்ஜியை (ஜார்ஜியா) தோற்கடித்தார். ஹம்பி அரை இறுதியில் லீடிங்சியை எதிர்கொள்கிறார்.
- மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.
மான்செஸ்டர்:
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி நேற்று ஜிம் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் முழங்காலில் காயம் அடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் எஞ்சிய இரு ஆட்டங்களில் விளையாடுவது கடினம் தான். எனவே அவர் இந்தப் போட்டி தொடரில் இருந்து விலகுவார் என கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் நிதிஷ்குமார் ரெட்டியின் காயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
- இந்தோனேசியா சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 250-க்கும் மேற்பட்டோர் உயிரை காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்தனர்.
தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்டு மனாடோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தீ பற்றியது.
தகவலறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர், பேரிடர் கால மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக கப்பலில் எழுந்த புகை விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது.
இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
விபத்து குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
- கில்லர் படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
- கில்லர் படத்தில் எஸ்ஜே சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் எஸ்.ஜே சூர்யா. குறிப்பாக பல நட்சத்திர ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.. இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். படத்திற்கு கில்லர் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். படத்தில் நடிக்கும் பிற நடிகர்களை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படம் இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கில்லர் படத்தின் 2 போஸ்டர்களை பகிர்ந்திருந்த நிலையில், இன்று மேலும் ஒரு போஸ்டரை பகிர்ந்து ரசிகர்களுக்கு எஸ்.ஜே.சூர்யா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் .
- முக முத்துவின் மறைவையொட்டி முக ஸ்டாலினை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் கூறினார்.
- நான் பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து விசாரித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மு.க முத்து மறைவுக்கு சீமான் ஆறுதல் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து, செய்தியாளர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நான் பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து விசாரித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எப்படி இருந்தாலும் ஒரு இழப்பு என்பது பெருந்துயரம்.
அதிமுகவிற்கு பெரும்பான்மைக்கு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் ஆதரவு தருவீர்களா என்று கேட்கிறீர்கள்.
இன்னும் 10 மாதங்கள் உள்ளது. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். ராணுவத்திற்கு ரகசியம் உள்ளதை போல எல்லாவற்றிற்கும் ஒரு ரகசியம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து க்ளப் வீரர்களை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்துள்ளனர்.
- அப்போது 2 அணி வீரர்களும் பரஸ்பரம் தங்களது ஜெர்ஸிகளை மாற்றி புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து க்ளப் வீரர்களை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்துள்ளனர்.
அப்போது 2 அணி வீரர்களும் பரஸ்பரம் தங்களது ஜெர்ஸிகளை மாற்றி புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.






