என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: ஒரே ஒரு மாற்றத்துடன் இங்கிலாந்தின் ஆடும் லெவன் அறிவிப்பு
    X

    இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: ஒரே ஒரு மாற்றத்துடன் இங்கிலாந்தின் ஆடும் லெவன் அறிவிப்பு

    • முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
    • இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.

    தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய அணியில் நிறைய வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளனர். இதனால் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் பஷிருக்கு பதிலாக லியாம் டாசன் இடம் பெற்றுள்ளார்.

    4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:-

    க்ராலி, டக்கெட், போப், ரூட், ப்ரூக், ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஸ்மித், லியாம் டாசன், வோக்ஸ், கார்ஸ், ஆர்ச்சர்.

    Next Story
    ×