என் மலர்tooltip icon

    உலகம்

    பள்ளி மீது விழுந்த பயிற்சி போர் விமானம்: 17  மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உயிரிழந்த சோகம்..!
    X

    பள்ளி மீது விழுந்த பயிற்சி போர் விமானம்: 17 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உயிரிழந்த சோகம்..!

    • 16 பேர் உயிரிழந்த நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் காயம்.
    • காயம் அடைந்தவர்களில் 6 மாணவர்கள் கவலைக்கிடமாக உள்ளனர்.

    வங்கதேசத்தில் போர் விமானம் பள்ளிக்கூடம் மீது விழுந்து மோதிய விபத்தில், பள்ளியில் இருந்த 16 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

    வங்கதேசம் தலைநகர் டாக்காவில் உள்ள உத்தாராவில் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி இயங்கி வருகிறது. வங்கதேசத்தின் பயிற்சி போர் விமானம் திடீரென இந்த பள்ளியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளியில் படித்து வந்த 6ஆம் வகுப்பு மாணவர்கள் 17 பேர், 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். விமானியும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

    100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவற்றில் சிலருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீக்காயம் அடைந்தவர்களில் 6 மாணவர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×