என் மலர்
ஆசிரியர் தேர்வு
- உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் முழங்கால்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்த வீடியோக்களை பெற்றுள்ளார்.
- மற்றொரு மருத்துவரின் உதவியுடன் தனது இரண்டு கால்களையும் அகற்றினார்.
பிரிட்டனில் உள்ள ஒரு மருத்துவர் காப்பீட்டுத் தொகைக்காக தனது கால்களை அகற்றிய சம்பவம் அரங்கேறி உள்ளது. 5 லட்சம் பவுண்டுகள் (ரூ. 5.4 கோடி) கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரண்டு முழங்கால்களுக்கும் கீழே உள்ள பகுதியை அகற்றினார்.
நீல் ஹாப்பர் (49) என்ற அந்த மருத்துவர் தனது இரண்டு கால்களையும் வேண்டுமென்றே அகற்றியதாக காப்பீட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் முழங்கால்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்த சில பிரீமியம் வீடியோக்களை நீல் ஒரு வலைத்தளத்திலிருந்து வாங்கியது கண்டறியப்பட்டது. அவற்றின் அடிப்படையில், அவர் மற்றொரு மருத்துவரின் உதவியுடன் தனது இரண்டு கால்களையும் அகற்றினார்.
தனக்கு இரத்த நாளப் பிரச்சினை இருப்பதாகவும், முழங்கால்கள் அகற்றப்படாவிட்டால், அது உடல் முழுவதும் பரவும் என்றும் தங்களை நம்ப வைக்க முயன்றதாக காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளன.
- உம்மன்சாண்டியின் குடும்பத்தினர் வழக்குக்கு ஆதரவாக இல்லாததால் வழக்கு கைவிடப்பட்டது.
- பல்வேறு தரப்பினரும் நடிகர் விநாயகனுக்கு எதிராக கடும் விமர்சனங்களையும், கண்டனங்களையும் பதிவிட்டனர்.
நடிகர் விநாயகன் மலையாளம், தமிழ் உள்பட பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கி வரும் இவர் பல்வேறு கட்டங்களில் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மண் சாண்டி மரணம் அடைந்த போது அவரது உடல் திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத நடிகர் விநாயகன், 'எனது தந்தையும் செத்தார், உம்மன் சாண்டியும் செத்தார்' என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு எதிராக கண்டன குரல் எழும்பியது. அத்துடன் அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது.
ஆனால் உம்மன்சாண்டியின் குடும்பத்தினர் வழக்குக்கு ஆதரவாக இல்லாததால் அந்த வழக்கு கைவிடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ். அச்சுதானந்தன் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் எர்ணாகுளம் பஸ் நிலையம் அருகே இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் விநாயகன், 'இறக்கவில்லை... இறக்கவில்லை... எனது தலைவர் வி.எஸ் அச்சுதானந்தன் இறக்கவில்லை.... எங்களுடனேயே வாழ்கிறார்' என கையை உயர்த்திய படி ஆதரவு கோஷத்தை முழக்கினார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில், மரணம் அடைந்த உம்மன் சாண்டிக்கு எதிராக அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கருத்தை முன் வைத்து பல்வேறு தரப்பினரும் நடிகர் விநாயகனுக்கு எதிராக கடும் விமர்சனங்களையும், கண்டனங்களையும் பதிவிட்டனர்.
இந்தநிலையில் நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் மீண்டும் அவதூறு கருத்துகளை பதிவிட்டு உள்ளார். அதில் 'எனது தந்தையும் செத்தார், வி.எஸ். அச்சுதானந்தனும் செத்தார், காந்தியும் செத்தார், நேருவும் செத்தார், இந்திராவும் செத்தார், ராஜீவ் காந்தியும் செத்தார், கருணாகரனும் செத்தார்' என்று குறிப்பிட்டு மேலும் சில அவதூறான கருத்தையும் கூறியுள்ளார். இது தொண்டர்கள் மத்தியில் மேலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விநாயகனை கைது செய்ய வலியுறுத்தி மாநில டி.ஜி.பி.யிடம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
- மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார்.
- உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார்.
குளச்சல்:
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன், சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சக்தீஷ்வர் (வயது17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை பெற்றோர் மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
அதாவது மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார். தற்போது மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு செல்ல இருந்த நிலையில் உடல் பருமனை பார்த்து சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்யலாம் என நினைத்துள்ளார். எனவே உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார். அதில் கிடைத்த தகவலின்படி கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்து வந்துள்ளார்.
அதாவது கடந்த 3 மாதங்களாக திட உணவு சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு விட சிரமப்பட்டு உள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலையில் அதிக சளி தொல்லையால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, உடல் பருமனை குறைக்க முறையாக அங்கீகாரம் பெற்ற சிறப்பு டாக்டர்களை அணுகி அவர்களின் பரிந்துரை அடிப்படையில் மட்டுமே உடல் பயிற்சி உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதற்கிடையே இறந்த மாணவரின் இரு கண்களையும் பெற்றோர் தானம் செய்துள்ளனர்.
யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பிரதமர் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.
- லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி, வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா- இங்கிலாந்து உறவுகளின் வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும் என தெரிவித்தார்.
இங்கிலாந்து உடனான வரி குறைப்பின் எதிரொலியால் இந்தியாவில் என்னென்ன பொருட்கள் விலை குறையும்?
ரேஞ்ச் ரோவர், ஜாக்குவார் போன்ற கார்களின் விலை குறையும். பிரிட்டனை சேர்ந்த மதுபானங்கள் குறைவான விலைக்கு கிடைக்கும்.
மருந்துகள் இந்திய சந்தைக்குள் வரி இல்லாமல் நுழைவதால் அவற்றின் விலையும் குறையும்.
காஸ்மெடிக்ஸ் , சாக்லேட், பிஸ்கட் ஆகியவற்றின் விலை குறையும். மருத்துவ கருவிகளின் விலையும் குறைகிறது.
பிரிட்டனில் தயாராகும் குளிர்பானங்கள், அழகுசாதன பொருட்கள், சாக்லேட்கள், பிஸ்கட்கள் மற்றும் கார்கள் ஆகியவை இந்தியர்களுக்கு கிடைப்பது எளிதாகும். மேலும் மின்சார வாகனங்கள் மீதான வரி குறையும்.
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- சாய் சுதர்சன், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோர் அரை சதம் கடந்தனர்.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து, இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சாய் சுதர்சன் 61 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்களும், ரிஷப் பண்ட் 54 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் முதல் இன்னிங்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். ஆனாலும், காயத்தைப் பொருட்படுத்தாத ரிஷப் பண்ட் களமிறங்கி 2 சிக்சர் உட்பட 54 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்நிலையில், இந்த இன்னிங்சில் அடித்த அரைசதத்தையும் சேர்த்து ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் இதுவரை 9 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இதன்மூலம் வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் அரைசதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் (8 அரைசதங்கள்) வாழ்நாள் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
- பீகார் தேர்தலில் வேட்புமனு தாக்கலை டிஜிட்டல் முறையில் நடைமுறைப்படுத்த திட்டம்.
- வெற்றி பெற்றால் நிரந்தரமாக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தலின்போது வேட்பார்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு உடன் சொத்து குறித்த தகவல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்க வேண்டும். வேட்புமனுவை தாக்கல் செய்ய வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்கள் படை சூழ வருவார்கள். இதனால் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடத்தில் பிரச்சினை ஏற்படும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும். மேலும், ஒன்றிற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வரும்போது, நெருக்கடியான நிலை ஏற்படும்.
இவற்றை தவிர்ப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் டிஜிட்டல் முறைக்கு வேட்புமனு தாக்கதலை மாற்ற முடிவு செய்துள்ளது. பீகார் சட்டசபை தேர்தலின்போது, இதை நடைமுறைப்படுத்தி, வெற்றிகரமாக அமைந்தால் நிரந்தரமாக டிஜிட்டல் முறைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.
- பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் மாநிலங்களவையில் வைகோ உரையாற்றினார்.
- மாநிலங்களவைக்கு அனுப்பிய கலைஞருக்கும், வார்த்தெடுத்த முரசொலி மாறனுக்கும் நன்றி என்று வைகோ கூறினார்.
பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை.
இதனால் 30 ஆண்டுகளாக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய வைகோ இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மாநிலங்களவையில் வைகோ உரையாற்றினார்.
அப்போது நாடாளுமன்றத்தில் தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி வைகோ தெரிவித்தார். குறிப்பாக என்னை மாநிலங்களவைக்கு அனுப்பிய கலைஞருக்கும், வார்த்தெடுத்த முரசொலி மாறனுக்கும் நன்றி என்று வைகோ கூறினார்.
இந்நிலையில், வைகோ எங்களோடு (பாஜக கூட்டணி) வந்தால் மீண்டும் எம்.பி ஆகலாம் என்று இன்றுடன் வைகோவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியுள்ளார்.
- இந்திய அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் எடுத்தார்.
- இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து- இந்தியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால்- கே.எல். ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்தது. கே.எல். ராகுல் 46 ரன்கள் எடுத்த நிலையிலும் ஜெய்ஸ்வால் 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சுப்மன் கில் 12, சாய் சுதர்சன் 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூரும் தலா 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஷர்துல் தாகூர் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். தாகூர் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாளில் காலில் அடிப்பட்ட வெளியேறிய ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்கினார். அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
நிதானமாக விளையாடி கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் 27 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த காமோஜ் டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அரை சதம் விளாசிய பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக பும்ரா 4 ரன்னில் வெளியேறினார்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
- ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.
ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.
இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
படத்தின் டீசர் நேற்று வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு இன்று ரசிகர்களுடன் திரையரங்கிள் பார்த்து மகிழ்ந்தனர். அப்போது ஆர் ஜே பாலாஜி ரசிகர்களிடம் படத்தை தீபாவளிக்கு வெளியிட முயற்சி செய்கிறோம் என கூறினார்.
- இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.
- வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா- இங்கிலாந்து உறவுகளின் வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது பிரதமர் மோடியின் 4-வது இங்கிலாந்து பயணம் என்றாலும் ஸ்டாமர் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்பு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா- இங்கிலாந்து உறவுகளின் வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும். வர்த்தக ஒப்பந்தத்தால் இரு நாடுகளுக்கும் அதிக பலன் கிடைக்கும். பல ஆண்டுகளுக்குப் பின் இந்தியா- இங்கிலாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜாங்கியுடன் மோதினார்.
- இந்த போட்டியில் 1.5 - 0.5 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு திவ்யா முன்னேறினார்.
FIDE உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜாங்கியுடன் மோதினார். இந்த போட்டியில் 1.5 - 0.5 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு திவ்யா முன்னேறினார்.
இதன்மூலம் மகளிர் செஸ் உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை திவ்யா தேஷ்முக் பெற்றார். மேலும், இதன் மூலம் Candidates தொடருக்கும் திவ்யா தேர்வாகி உள்ளார்
மற்றொரு அரையிறுதி போட்டியில் கோனேரு ஹம்பி, சீனாவின் டிங்ஜி லீயுடன் மோதினார். இந்த போட்டி டிராவில் முடிந்தது. அதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேற ஹம்பி இப்போது டை-பிரேக்கரில் டிங்ஜி லீயை எதிர்கொள்வார்.
- பிரயோகம் - ஆசமனம் செய்யும் போது கையில் பவித்திரமிருக்கக் கூடாது.
- சங்கல்பம் முடிந்ததும் தர்ப்பைகளைத் தெற்கு திக்கில் போட்டு விட வேண்டும்.
தந்தை இறந்த ஆண்டில் தர்ப்பணம் செய்ய வேண்டாம். ஆனால், அந்த ஆண்டு பூர்த்தியாவதற்குள் கிரகணம் வந்தால் கிரகண புண்ணியகாலத்தில் தர்ப்பணம் செய்து விட்டுப் பின்பு அமாவாசைகளில் செய்ய வேண்டும்.
நடுப்பகலுக்கு மேல் தர்ப்பணத்திற்காக ஒரு நீராடல் செய்து விட்டு மாத்யான்ஹிகத்திற்குப் பின் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதுவரை பட்டினியாயிருக்க வேண்டும். துணிகளை கட்டிக் கொண்டு தர்ப்பணம் செய்யக் கூடாது.
1. பிரயோகம் - ஆசமனம் செய்யும் போது கையில் பவித்திரமிருக்கக் கூடாது. ஆசமனம் முடிந்த பின் பவித்திரத்தை மோதிர விரலில் அணிந்து கொண்டு அத்துடன் மூன்று தனி தர்ப்பைகளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு 'சுக்லாம் பரதம்', 'பிராணாயமம்', 'சங்கல்பம்' முதலியவற்றை செய்ய வேண்டும். சங்கல்பம் முடிந்ததும் தர்ப்பைகளைத் தெற்கு திக்கில் போட்டு விட வேண்டும்.
2. ஆவாஹனம் - சுத்தமான தரையிலோ (வெள்ளி, பித்தளை, அல்லது தாமிரத் தாம்பாளத்திலோ) கிழக்கு மேற்காகப் பரப்பிய தர்ப்பைகளின் மேல் தெற்கு நுனியாகக் கூர்ச்சத்தை வைத்து 'ஆயாதபிதர' என்ற மந்திரத்தால் எள்ளைப் போட்டு ஆவாஹனம் செய்யய்ய வேண்டும்.
3. ஆஸனம் - 'ஸக்ருதாச்சின்னம்' என்ற மந்திரத்தால் தனித் தர்ப்பைகளைத் கூர்ச்சத்திற்கு கீழ் வைக்க வேண்டும். 'ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்' என்று மறுபடி எள்ளைப் போட வேண்டும்.
தர்ப்பணம் - பித்ரு தர்ப்பணத்தில் கட்டை விரலுக்கும் மற்ற நான்கு விரலுக்கும் இடையில் வலது புறமாகச் சாய்த்து கை நிறையத் தீர்த்தம் விட வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது இடது காலை முட்டி இட்டு, வலது காலை மடித்துக் கொண்டு இரண்டு கைகளையும் முழந்தாள்களுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு கிழக்கு முகமாகவோ அல்லது, தெற்கு முகமாகவோ இருக்க வேண்டும். தெற்கு முகமாகத் தர்ப்பணம் செய்பவரும் ஆசமனம், சங்கல்பம், ஆவா ஹனம், ஆஸனம் முதலியவற்றைச் செய்யும் போது கிழக்கு முகமாகத் தான் செய்ய வேண்டும்.






