என் மலர்tooltip icon

    இந்தியா

    டிஜிட்டலுக்கு மாறும் வேட்புமனு தாக்கல்
    X

    டிஜிட்டலுக்கு மாறும் வேட்புமனு தாக்கல்

    • பீகார் தேர்தலில் வேட்புமனு தாக்கலை டிஜிட்டல் முறையில் நடைமுறைப்படுத்த திட்டம்.
    • வெற்றி பெற்றால் நிரந்தரமாக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    தேர்தலின்போது வேட்பார்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு உடன் சொத்து குறித்த தகவல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்க வேண்டும். வேட்புமனுவை தாக்கல் செய்ய வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்கள் படை சூழ வருவார்கள். இதனால் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடத்தில் பிரச்சினை ஏற்படும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும். மேலும், ஒன்றிற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வரும்போது, நெருக்கடியான நிலை ஏற்படும்.

    இவற்றை தவிர்ப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் டிஜிட்டல் முறைக்கு வேட்புமனு தாக்கதலை மாற்ற முடிவு செய்துள்ளது. பீகார் சட்டசபை தேர்தலின்போது, இதை நடைமுறைப்படுத்தி, வெற்றிகரமாக அமைந்தால் நிரந்தரமாக டிஜிட்டல் முறைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.

    Next Story
    ×