என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அச்சுதானந்தன்"

    • உம்மன்சாண்டியின் குடும்பத்தினர் வழக்குக்கு ஆதரவாக இல்லாததால் வழக்கு கைவிடப்பட்டது.
    • பல்வேறு தரப்பினரும் நடிகர் விநாயகனுக்கு எதிராக கடும் விமர்சனங்களையும், கண்டனங்களையும் பதிவிட்டனர்.

    நடிகர் விநாயகன் மலையாளம், தமிழ் உள்பட பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கி வரும் இவர் பல்வேறு கட்டங்களில் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மண் சாண்டி மரணம் அடைந்த போது அவரது உடல் திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத நடிகர் விநாயகன், 'எனது தந்தையும் செத்தார், உம்மன் சாண்டியும் செத்தார்' என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு எதிராக கண்டன குரல் எழும்பியது. அத்துடன் அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது.

    ஆனால் உம்மன்சாண்டியின் குடும்பத்தினர் வழக்குக்கு ஆதரவாக இல்லாததால் அந்த வழக்கு கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ். அச்சுதானந்தன் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் எர்ணாகுளம் பஸ் நிலையம் அருகே இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் விநாயகன், 'இறக்கவில்லை... இறக்கவில்லை... எனது தலைவர் வி.எஸ் அச்சுதானந்தன் இறக்கவில்லை.... எங்களுடனேயே வாழ்கிறார்' என கையை உயர்த்திய படி ஆதரவு கோஷத்தை முழக்கினார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில், மரணம் அடைந்த உம்மன் சாண்டிக்கு எதிராக அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கருத்தை முன் வைத்து பல்வேறு தரப்பினரும் நடிகர் விநாயகனுக்கு எதிராக கடும் விமர்சனங்களையும், கண்டனங்களையும் பதிவிட்டனர்.

    இந்தநிலையில் நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் மீண்டும் அவதூறு கருத்துகளை பதிவிட்டு உள்ளார். அதில் 'எனது தந்தையும் செத்தார், வி.எஸ். அச்சுதானந்தனும் செத்தார், காந்தியும் செத்தார், நேருவும் செத்தார், இந்திராவும் செத்தார், ராஜீவ் காந்தியும் செத்தார், கருணாகரனும் செத்தார்' என்று குறிப்பிட்டு மேலும் சில அவதூறான கருத்தையும் கூறியுள்ளார். இது தொண்டர்கள் மத்தியில் மேலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விநாயகனை கைது செய்ய வலியுறுத்தி மாநில டி.ஜி.பி.யிடம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

    • 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை அச்சுதானந்தன் கேரள மாநில முதல்வராக இருந்தார்.
    • அச்சுதானந்தன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் ஜூலை 21 அன்று காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    அவருக்கு 101 வயது. சுதந்திர போராட்டத்தின்போது 5 வருடம் சிறையில் இருந்தவர். 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதல்வராக இருந்தார்.

    மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

    • அச்சுதானந்தன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • பல ஆண்டுகளை பொது சேவைக்காகவும், கேரளத்தின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணித்தார்.

    கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் இன்று காலமானார்.

    இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்த அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் தனது வாழ்நாளில் பல ஆண்டுகளை பொது சேவைக்காகவும், கேரளத்தின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணித்தார்.

    நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களாக இருந்தபோது எங்கள் தொடர்புகளை நான் நினைவு கூர்கிறேன். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அச்சுதானந்தன் ஒரு உண்மையான மகத்தான தலைவர்.
    • தோழர் அச்சுதானந்தன் கேரளாவின் அரசியல் மனசாட்சியில் ஆழமாகப் பதிந்த ஒரு புரட்சிகர மரபை விட்டுச் செல்கிறார்.

    கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு 101 வயது. சுதந்திர போராட்டத்தின்போது 5 வருடம் சிறையில் இருந்தவர். 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதல்வராக இருந்தார்.

    அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    அச்சுதானந்தன் ஒரு உண்மையான மகத்தான தலைவர். தோழர் அச்சுதானந்தன் கேரளாவின் அரசியல் மனசாட்சியில் ஆழமாகப் பதிந்த ஒரு புரட்சிகர மரபை விட்டுச் செல்கிறார்.

    அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் ஒரு உண்மையான மகத்தான தலைவரின் இழப்பால் துக்கப்படும் கேரள மக்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கல்.

    எனது சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் மகத்தான தலைவருக்கு, அமைச்சர் ரகுபதி அஞ்சலி செலுத்துவார்.

    ரெட் சல்யூட்

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதில் பதிவிட்டுள்ளார்.

    • சுதந்திர போராட்டத்தின்போது 5 வருடம் சிறையில் இருந்தவர்.
    • 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதல்வராக இருந்தார்

    கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு 101 வயது. சுதந்திர போராட்டத்தின்போது 5 வருடம் சிறையில் இருந்தவர்.

    2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதல்வராக இருந்தார்.

    • மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்குழு, அச்சுதானந்தனுக்கு பல உள் உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
    • அவருடைய உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தன். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை கேரள மாநில முதல்-மந்திரியாக இருந்த இவருக்கு தற்போது 101 வயது ஆகிறது.

    81 வயதில் முதல்-மந்திரியாக பதவியேற்றது, கேரள சட்டசபையில் 15 ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தது உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான இவர் வயதுமூப்பு காரணமாக கடந்த சில ஆணடுகளாகவே அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

    இந்தநிலையில் கடந்த மாதம் 23-ந்தேதி அச்சுதானந்தனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்பட்ட அவருக்கு இதயவியல், நரம்பியல், சிறுநீரகவியல் மற்றும் பல்வேறு துறை மருத்துவர்கள் இணைந்து சிகிச்சை அளித்தனர்.

    தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்ற அச்சுதானந்தனின் உடல்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. பின்பு மீண்டும் உடல்நிலை சீராவதில் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் அச்சுதானத்தனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்குழு, அச்சுதானந்தனுக்கு பல உள் உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

    அவரது ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, இதய செயல்பாட்டை சீராக்கும் முயற்சியில் மருத்துவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவருடைய உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன், கேரள மாநில முதல் மந்திரியாக 2006 முதல் 2011 வரை பதவி வகித்தார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அச்சுதானந்தன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில், அச்சுதானந்தனுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அச்சுதானந்தனுக்கு இரைப்பை குடல் அழற்சி மற்றும் சிறுநீரக கோளாறுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×