என் மலர்tooltip icon

    இந்தியா

    மறைந்த கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
    X

    மறைந்த கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

    • 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை அச்சுதானந்தன் கேரள மாநில முதல்வராக இருந்தார்.
    • அச்சுதானந்தன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் ஜூலை 21 அன்று காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    அவருக்கு 101 வயது. சுதந்திர போராட்டத்தின்போது 5 வருடம் சிறையில் இருந்தவர். 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதல்வராக இருந்தார்.

    மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

    Next Story
    ×